மணித்தலை நாகம் அணையவெங் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கிப் பிணித்தலைக் கொண்டு வருந்திநின் றுழலும் பேதையேற் குன்னருள் உளதோ கணித்தலை அறியாப் பேர்ஒளிக் குன்றே கண்கள்முன் றுடையஎன் கண்ணே அணித்தலை அடியர்க் கருள்திரு வொற்றி அப்பனே செப்பரும் பொருளே