மாயையால் வினையால் அரிபிர மாதி வானவர் மனமதி மயங்கித் தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ ஆயினும் தீய இவைஎன அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை நெறிக்கழ கல்லவே எந்தாய்