மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம் விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான் நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன் நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ இச்சை நன்றறி வாய்அருள் செய்யா திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின் சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே