வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல் மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில் பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவி யேன்அருள் பண்புற நினைவாய் மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் சித்தி வேண்டிய முனிவரர் பரவித் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே