நிழல் என்ற வார்த்தை 5 இடங்களில் பொருத்தமான பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
2. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண் ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 062. திரு அருட் கிரங்கல் tiru aruṭ kiraṅkal
4. எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே
சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன்
நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
8. குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 143. பசியாத அமுதே pasiyāta amutē
9. தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
திருவளர் உருவே உருவளர் உயிரே
திருநட மணியே திருநட மணியே.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
12. அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
அளவாகி அளவாத அதீத மாகிப்
பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.
நிழல் -
பெற்ற -
தயவு -
மறந்தாலும் -
பாவங்கள் -
வெண்ணிலா -
படமுடியா -
வாய்தற் -
தண்டனை -
பூட்டு -
மரணம் -
போதம் -
ஒருமை -
வெண் -
கரைவி -
உள்ளும் -
நாபி -
நடுக்கண் -
ஒருமையுடன் -
வள்ளலார் -