கரைவி என்ற வார்த்தை 5 இடங்களில் பொருத்தமான பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 098. சற்குருமணி மாலை saṟkurumaṇi mālai
2. கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
சிற்கரை திரையறு திருவருட் கடலே
தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 065. அடைக்கலம் புகுதல் aṭaikkalam pukutal
9. புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
77. அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே.
-
உபதேசக் குறிப்புகள்
121. ஏழு திரைகள்
இந்தப் பவுதிக உடம்பிலிருக்கிற நீ யாரெனில்: நான் ஆன்மா, சிற்றணு வடிவன். ஷெ அணு கோடி சூரியப் பிரகாசமுடையது, லலாடஸ்தானமிருப்பிடம், கால்பங்கு பொன்மை முக்கால்பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய 7 திரைகளுண்டு. அவையாவன:
கறுப்புத் திரை மாயாசத்தி. நீலத்திரை கிரியாசத்தி. பச்சைத்திரை பராசத்தி. சிவப்புத்திரை இச்சாசத்தி. பொன்மைத்திரை ஞானசத்தி. வெண்மைத்திரை ஆதிசத்தி. கலப்புத்திரை சிற்சத்தி.*
* கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பேருறு நீலப் பெருந்திரை அதனால் ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பச்சைத் திரையால் பரவெளி அதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி செம்மைத் திரையால் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி கலப்புத் திரையால் கருதனு பவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி - திருஅருட்பா, அருட்பெருஞ்ஜோதி அகவல் 813-826
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
407. கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
கரைவி -
செம்மை -
எழுவகைப் -
போதம் -
பாவங்கள் -
தாயுமான+சுவாமிகளும் -
ஜோதி -
ஆசாரியன் -
திருவார்த்தை -
செந்தில் -
இறந்த -
நாதம் -
சுத்த -
வேதம் -
பூதம் -
கரணங்கள் -
இறந்தார் -
உஷ்ணம் -
புத்தி -
லலாடம் -