-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 031. சிகாமணி மாலை sikāmaṇi mālai
1. வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்
வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்
நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய்
கொல்வினை யானை உரித்தோய் வயித்திய நாதகுன்றாச்
செல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 005. சிவபதி விளக்கம் sivapati viḷakkam
1. உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே
கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே
பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 054. அருள் ஆரமுதப் பேறு aruḷ āramutap pēṟu
1. விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 004. நமச்சிவாய ஸங்கீர்த்தன லகிரி namachsivāya shaṅkīrttaṉa lakiri
1. சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 005. நற்றுணை விளக்கம் naṟṟuṇai viḷakkam
2. காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
கணைகன் ஏவினும் காலனே வரினும்
பூவின் மன்னவன் சீறினும் திருமால்
போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 077. ஆனந்தப் பதிகம் āṉantap patikam
2. சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா ணாதழுந்தி
சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா ணாதழுந்தி
ஈதல் இரக்கம் எள்அளவும் இல்லா தலையும் என்றனைநீ
ஓதல் அறிவித் துணர்வறிவித் தொற்றி யூர்ச்சென் றுனைப்பாடக்
காதல் அறிவித் தாண்டதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 012. அவா அறுத்தல் avā aṟuttal
2. சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 017. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு attuvita āṉanta aṉupava iṭaiyīṭu
2. கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 018. திருக்கதவந் திறத்தல் tirukkatavan tiṟattal
2. மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 098. சற்குருமணி மாலை saṟkurumaṇi mālai
2. கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
சிற்கரை திரையறு திருவருட் கடலே
தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 062. ஆற்ற மாட்டாமை āṟṟa māṭṭāmai
2. புரைசேர் துயரப் புணரிமுற்றும் கடத்தி ஞான பூரணமாம்
புரைசேர் துயரப் புணரிமுற்றும் கடத்தி ஞான பூரணமாம்
கரைசேர்த் தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
உரைசேர் மறையின் முடிவிளங்கும் ஒளிமா மணியே உடையானே
அரைசே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 065. அடைக்கலம் புகுதல் aṭaikkalam pukutal
2. திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 018. திருக்கதவந் திறத்தல் tirukkatavan tiṟattal
3. உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
-
மூன்றாம் திருமுறை / Third Thirumurai 013. ஆற்றாக் காதலின் இரங்கல் āṟṟāk kātaliṉ iraṅkal
3. கருணைக் கொருநேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழலடியார்
கருணைக் கொருநேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழலடியார்
அருணைப் பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவா வடுதுறையார்
இருணச் சியமா மணிகண்டர் எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்
தருணத் தின்னும் சேர்ந்திலர்என் சகியே இனிநான் சகியேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 095. பேரருள் வாய்மையை வியத்தல் pēraruḷ vāymaiyai viyattal
3. திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 022. ஆன்ம தரிசனம் āṉma tarisaṉam
4. உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென்
குறிப்பினில் குறித்ததொன் றிலையே
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த
துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 056. சண்முகர் வருகை saṇmukar varukai
4. காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
கண்ணுதல் சேயரே வாரும்
ஒண்ணுதல் நேயரே வாரும்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 063. திருப்பள்ளி எழுச்சி tiruppaḷḷi eḻuchsi
4. கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்
கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 060. பெரு விண்ணப்பம் peru viṇṇappam
4. காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
ஏமக் கொடுங்கூற் றெனும்மகரம் யாது செயுமோ என்செய்கேன்
நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 003. பிரசாத மாலை pirasāta mālai
4. விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக்
கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்
கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி
அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்
அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட
மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 010. அடியார் பேறு aṭiyār pēṟu
4. மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 002. அருள் நாம விளக்கம் aruḷ nāma viḷakkam
5. வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 011. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை āḷuṭaiya nampikaḷ aruṇmālai
5. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 090. உற்ற துரைத்தல் uṟṟa turaittal
6. விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ர் பெருகக் கருத்தலர்ந்தே
வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 121. இது நல்ல தருணம் itu nalla taruṇam
6. கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 066. கழிபகற் கிரங்கல் kaḻipakaṟ kiraṅkal
6. முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
மோக வாரியின் மூழ்கின னேனும்
அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
அப்ப நின்அருள் அம்பியை நம்பி
தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 003. அருட்பெருஞ்சோதி அட்டகம் aruṭperuñsōti aṭṭakam
7. தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
7. கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 018. அறிவரும் பெருமை aṟivarum perumai
7. உறவனே உன்னை உள்கிநெஞ் சழலின் உறும்இழு தெனக்கசிந் துருகா
உறவனே உன்னை உள்கிநெஞ் சழலின் உறும்இழு தெனக்கசிந் துருகா
மறவனேன் தன்னை ஆட்கொளா விடில்யான் வருந்துவ தன்றிஎன் செய்கேன்
நிறவனே வெள்ளை நீறணி பவனே நெற்றிமேல் கண்ணுடை யவனே
அறவனே தில்லை அம்பலத் தாடும் அப்பனே ஒற்றியூர்க் கரைசே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 058. கைம்மாறின்மை kaimmāṟiṉmai
7. வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்
கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்
உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே.
-
மூன்றாம் திருமுறை / Third Thirumurai 019. காதல் மாட்சி kātal māṭsi
7. திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்
திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்
கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 036. உண்மை கூறல் uṇmai kūṟal
8. கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 107. ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்) ñāṉasariyai (vāypaṟai ārttal)
8. விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
-
சுப்பிரமணியம்
படைவீடென்ப தென்ன? அடங்கி இருக்குமிடம். அடங்கியிருக்கும் ஸ்தானங்களே இயற்கைவிளக்கம் தங்குமிடங்களாகும். இவற்றிற்கு ஊர் ஆறாவானேன்? ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம். திருவாவினன்குடி யென்பது திரு-ஆ-இன்ன-குடி: திரு - இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ-பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் - சூரியனாகிய புத்தியும், ஒன்று கூடி விளங்கும் ஆன்மஅறிவின் சுத்தகாரிய இடம். பழமுதிர்ச்சோலை யென்பது இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன வின்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம். திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்பன: சுத்தமனத்தின் முகத்தில் விஷயக் கடலின் அவாவாகிய அலையடித்துக் கொண்டிருக்கும் இடமாகிய கரை, செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை நிவர்த்தித்துச் சந்தோஷகரத்தைப் பெற்ற பதிமனத்தின் விளக்கம். திருப்பரங்குன்ற மென்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தையுடைய விவேக உல்லாச வின்ப நிறைவு. குன்று தோறாடல் என்பது மலைதோறாடல். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமா யுள்ள துரிய நன்னிலை. இத்துரியம் பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவக் காட்சியில் அனந்தம் உண்டு. மேற் குறித்த அனுபவக் காட்சிகளுக்குத் தேகத்தி லிடம் எவை? கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக் கீழ், மார்பு, நெஞ்சு ஆக 6.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 010. ஆளுடைய அரசுகள் அருண்மாலை āḷuṭaiya arasukaḷ aruṇmālai
8. விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்
கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்
துணையேநந் துரையேநற் சுகமே என்றும்
வளங்கெழும்ஆ கநநெறியை வளர்க்க வந்த
வள்ளலே நின்னருளை வழங்கு வாயே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 007. அதிசய மாலை atisaya mālai
8. அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
கண்ணர நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்
கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்
எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்
தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 003. பிரசாத மாலை pirasāta mālai
8. தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 018. அறிவரும் பெருமை aṟivarum perumai
8. கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு
கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு
விரைபடா மலர்போல் இருந்துழல்கின்றேன்வெற்றனேன் என்செய விரைகேன்
திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே
உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 025. காணாப் பத்து kāṇāp pattu
8. விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 027. சிவானந்தப் பத்து sivāṉantap pattu
9. எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
கருணை ஈகுதல் கடன்உனக் கையா
தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 103. பாங்கியர்க் கறிவுறுத்தல் pāṅkiyark kaṟivuṟuttal
9. கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்
கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்
கரையாரென் னளவிலே பாங்கிமா ரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 016. தற் சுதந்தரம் இன்மை taṟ sutantaram iṉmai
9. கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்
கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்
திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன்
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 015. வேட்கை விண்ணப்பம் vēṭkai viṇṇappam
9. செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே
செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே
வைவ துன்னை நினையாத வஞ்ச கரையே வழுத்திநிதம்
உய்வ துனது திருநாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
எய்வ தறியேன் திருத்தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 065. அடைக்கலம் புகுதல் aṭaikkalam pukutal
9. புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 043. இறை திருக்காட்சி iṟai tirukkāṭsi
10. புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
போந்தருள் அளித்தசற் குருவைக்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
கருணையங் கடவுளைத் தனது
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
தன்னிக ரில்லாத் தலைவனை எனது
தந்தையைக் கண்டுகொண் டேனே.
-
மனு முறைகண்ட வாசகம்
அது கேட்டு அரசானாவர் "சர்வ வல்லமையுள்ள சுயம்புவாகியும் கருணைக்கடலாகிய கடவுளாகியும் பிள்ளைக்கலி தீர்த்த பெருமானாகியும் விளங்கிய தியாகராஜப் பெருமானைச் சேவிப்பதற்குத் தடையுண்டோ? தனக்கிணையில்லாத தரும மூர்த்தையைத் தரிசிக்க வேண்டுமானால் தடுப்பவர் யார்? புண்ணியந் தேடப் புத்திரன் தொடங்கினால் தந்தை தடை செய்வானோ? நானே கற்பிக்கவேண்டிய நல்விஷயத்தை நீயே தெரிந்து செய்யத் தொடங்குவது நான் பூர்வஞ்செய்த புண்ணியமல்லவோ? 'பிள்ளை தேடும் புண்ணியம் பிதாவுக்கும் உண்டு' என்று பெரியோர் சொல்வது பிழைபடாதென்பதை நானறியனோ? நெல் முதலான பயிர்க்கு நீர்விடுவோரையும், குருடர்க்குக் கோல் கொடுப்போரையும், இரவில் வந்தவர்க்கு இடங் கொடுப்போரையும், அஞ்சி வந்தடுத்தவர்க்கு அபயம் கொடுப்போரையும், தாகங் கொண்டோர்க்குத் தண்¬ர் கொடுப்போரையும், பசிகொண்டு பரிதபிப்போர்க்கு அன்னங் கொடுப்போரையும், சேற்றில் விழுந்து திகைக்கின்றோர்க்குக் கைகொடுப்போரையும், ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டோரைக் கரையேற்றுவோரையும், சத்திரங்கட்டித் தருமஞ் செய்வோரையும் தடுத்தாலும், குருதரிசனம் சிவஞானிதரிசனம் சிவதரிசனம் செய்வோரை ஒருகாலுந் தடுக்கப்படாது; ஆதலால் புத்திரனே உனக்குவேண்டிய சிறப்புக்களுடன் சுகமாய்ப்போய் ஆண்டவனைத் தரிசனஞ் செய்து சிவஞானமும் தீர்க்காயுளும் பெற்று வருவாய்" என்று கட்டளையிட்டார்.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 052. தெய்வமணி மாலை teyvamaṇi mālai
10. கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
கதறுவார் கள்ளுண்டதீக்
கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
கடும்பொய்இரு காதம்நாற
வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
வழக்குநல் வழக்கெனினும்நான்
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
ரோடுறவு பெறஅருளுவாய்
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
உவப்புறு குணக்குன்றமே
தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
10. அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
வந்தோடு184 நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
14. கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
கடையிலே கடல்இடையிலே
கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
கடல்ஓசை அதன்நடுவிலே
வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
வடிவிலே வண்ணம்அதிலே
மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
வயங்கிஅவை காக்கும் ஒளியே
புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
புகுந்தறி வளித்தபொருளே
பொய்யாத செல்வமே நையாத கல்வியே
புடம்வைத் திடாதபொன்னே
மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
மறுப்பிலா தருள்வள்ளலே
மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 043. இறை திருக்காட்சி iṟai tirukkāṭsi
15. களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
துள்ளகத் தூறும்இன் னமுதை
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
குருவையான் கண்டுகொண் டேனே.
-
மனு முறைகண்ட வாசகம்
உடனே அந்தப் பசுங்கன்று தனது தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டதைக் கேட்ட வீதிவிடங்கன் இடியோசை கேட்ட நாகம் போலத் திடுக்கிட்டு, நடுநடுங்கித் தேரிலிருந்து கீழே விழுந்து, எண்ணப்படாத துன்பத்தோடும், பயத்தோடும் எழுந்துபோய் அப் பசுங்கன்று இறந்து கிடப்பதைக் கண்டு, மதிமயங்கி மனம் பதைத்துக் கையுங்காலும் நடுக்கெடுத்துப் பெருமூச்சுவிட்டு உடம்பு வியர்த்துச் சோபமடைந்து விழுந்து, சிறிதே தெளின் தெழுந்து கண்களிலே நீர் ஆறாகப் பெருக நின்று, "சிவசிவா! சிவசிவா!! சங்கரா! சங்கரா!! சம்புவே! சம்புவே!! மஹாதேவா! மஹாதேவா!! தியாகராஜப்பிரபு! தியாகராஜப்பிரபு!! தேவரீ€த் தரிசிக்கவேண்டு மென்று வந்த அடியேனுக்கு இப்படிப் பட்ட இடரும் வரலாமா? நன்றறியாத பாவி இவன் நம்மைத் தரிசிக்கத் தக்கவனல்ல னென்று திருவுளங் கொண்டு தானோ என்னை இந்தப் பழிக்கு ஆளாக்கியது? தேவரீரைத் தரிசனஞ் செய்ய எண்ணி வந்த அடியேன் கால்வருந்த நடந்து பயபக்தியுடனே வந்து தரிசிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல், செல்வச் செருக்கினால் தேரிலேறிக் கொண்டு ஆடம்பரங்களுடன் பக்தியில்லாது பகல்வேஷக்காரன் போல டம்பவேஷங் காட்டி வந்த அன்பில்லாத பாவியாகிய என் பிழையைக் குறித்து நோவதல்லது, எம்பெருமானிடத்திற் குறை சொல்லத் தகுமோ? இப்படிப்பட்ட பெரும்பாதகம் செய்யத்தானோ பிள்ளையாகப் பிறந்தேன்? விரிந்த பாற்கடலில் விஷம் பிறந்ததுபோல் மறைநெறி தவறாத மனுவின் வமிசத்தில் எதிரற்ற பாவியாகிய நான் ஏன் பிறந்தேன்? பழிபாவங்களைக் கனவிலும் கண்டறியாத மனுச்சோழராகிய என் பிதாவுக்குப் பெரும்பழியைச் சுமத்தத்தானோ பிறந்தேன்? சிவபெருமானைத் தரிசித்துச் சீர்பெறலாமென்று எண்ணி வந்த எனக்குச் சிவதரிசனங் கிடையாது தீராப்பழி கிடைத்ததே! ஓகோ! 'எண்ணம் பொய்யாகும் ஏளிதம் மெய்யாகும்' என்ற வார்த்தை என்னிடத்திலே இன்று அனுபவப்பட்டதே! ஐயோ! நான் கற்ற கல்வி யெல்லாம் கதையாய் முடிந்ததே; நான் கேட்ட கேள்வியெல்லாம் கேடாய் முடிந்ததே; நான் அறிந்த அறிவெல்லாம் அவலமாய் விட்டதே; நான் தெளிந்த தெளிவெல்லாம் தீங்காய் விட்டதே! அரஹரா! இப்படிப்பட்ட தீங்கு வருமென்று அறிந்தால் தேரிலேறேனே, பசுவைக் கொலை செய்வதே பாவங்களி லெல்லாம் பெரும் பாவம், அதைப் பார்க்கிலும் பசுங்கன்னைக் கொலைசெய்வது பஞ்சமா பாதகத்தினும் பதின்மடங்கு அதிகம் என்று பெரியோர் சொல்லக் கேட்டறிந்திருக்கிற நான் இன்று அந்தப் பாதகத்துக்கு ஆளாகியும் உயிரை விடாமல் உடலைச் சுமந்திருக்கின்றேனே; இளங்கன்று எதிரே வரவும் அதைப்பாராமல் அதன்மேற் தேரை நடத்தியது செல்வச் செருக்கல்லவோ என்று உலகத்தார் பழிக்கும் பழிக்கத்தான் உடம்பெடுத்தேன்; நான் புத்தி பூர்வமாக எள்ளளவாயினும் அறிந்திருப்பேனானால் இப்படிப்பட்ட அபாயம் நேரிடவொட்டேன்; என்ன செய்வேன்! என்ன செய்வேன்!! மனுச்சோழர் காலத்தில் அவர் புத்திரன் ஒரு பசுங்கன்னைக் கொன்றான் என்னும் பழிமொழியை உலகத்தில் நிலைபெற நாட்டினேனே! நீதி தவறாது உலகத்தை யெல்லாம் ஆளுகின்ற மனுச்சக்கரவர்த்தி யென்னும் மகாராஜனுக்குப் பிள்ளையாகப் பிறக்கும்படி இருந்த நல்வினை இப்போது பேயாகப் பிறப்பதற்குத் தக்க தீவினையாய் விட்டதே! இந்தப் பிறப்பிலே இப் பழியை ஏற்றுக் கொள்வதற்கு முன் பிறப்பில் என்ன பாவஞ் செய்தேனோ? து‘ய்மையுள்ள சூரிய குலத்திற்கு ஆதியாகிய மனுவென்பவரும் அவர் வழிக்குப்பின் வழிவழியாகத் தோன்றிய குலோத்துங்க சோழர், திருநீற்றுச்சோழர், காவிரிகரைகண்ட சோழர், மனுநீதிச்சோழர், இராஜேந்திரசோழர், இராஜசூடாமணிச்சோழர், இராஜராஜசோழர், உறையூர்ச்சோழர், மண்ணளந்தசோழர், கங்கைகொண்ட சோழர், தேவர்சிறைமீட்ட சோழர், மரபுநிலைகண்ட சோழர், எமனைவென்ற சோழர், சுந்தரச்சோழர், மெய்ந்நெறிச் சோழர் முதலான என் மூதாதைகளான முன்னோர்களெல்லாம் தீமையைச் சேராது செங்கோல்நடத்தி அடைந்த கீர்த்தி இக்காலத்தில் எடுக்கப்படாத பழியைச்சுமந்த என்னால் மறைந்து போகும்படி நேரிட்டதே! ஐயோ! இதை எண்ணும்போது, நான் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பானேனே! மரபழிக்கவந்த வச்சிராயுதமானேனே! கன்றுக்குப் பாலு‘ட்டாதவனைக் கண்டாலும் பாவமென்று சொல்லுகிற பெரியோர்கள் சேங்கன்றைத் தேர்க்காலிலிட்ட என்னைக் குறித்து என்ன சொல்வார்கள்? இந்தக் கன்று எங்கே பிறந்ததோ? எங்கே வளர்ந்ததோ? எங்கே போக எண்ணியதோ? இங்கே வந்து இறக்க நேரிட்டதே! சுந்தரமுள்ள இக் கன்று இறந்ததைக் கண்ட எனக்கே இவ்வளவு துக்கமுண்டாயிருக்கின்றதே! இதை ஈன்ற தாய்ப்பசு கண்டால் என்ன பாடு படுமோ? இச் செய்தியை என் பிதாவானவர் கேட்பாரானால் ஏதாய் முடியுமோ? வார்த்தைமாத்திரத்திலே பழியென்று சரசஞ் செய்கின்றவர்களையுந் தண்டிக்கின்ற தந்தையார் திருமுகத்தில் தகுதியல்லாத பழியைச் சுமந்து தண்டனைக்காளாகிய நான் எவ்வாறு விழிப்பேன்? இனி இவ்வுலகில் பழிக்காளாகி உண்டுடுத்து உலாவி உயிர் வைத்திருக்க மாட்டோன்; இன்றே என்னுயிரை இழந்துவிடுகிறேன்!" என்று பலவிதமாகப் பரிதபித்து, துக்க சமுத்திரத்தில் அழுந்திக் கரை காணாதவனாகி நின்றபோது, உடன் சூழ்ந்துவந்த அந்தணர் அமைச்சர் முதலானோர் ராஜகுமாரனைப் பார்த்துத் தாமும் விசனமடைந்தவர்களாய், "ஓ விவேகமுள்ள வீதிவிடங்கனே! நீர் என்ன கெடுதி நேரிட்டதென்று இப்படிப் பிரலாபிக்கின்றீர்? அந்தப் பசுவின் கன்றை நீர் கொல்லவேண்டு மென்று கொன்றீரோ? அல்லது அந்தக் கன்று தேர்க்காலில் அகப்படுவதை அறிந்தும் அஜாக்கிரதையாயிருந்தீரோ? அக்கன்று ஓடிவந்ததைச் சூழ்ந்திருந்த நாங்கள் ஒருவரும் அறியோமே; நீர் எப்படி அறிவீர்? அது கர்மவசத்தாலே எல்லார் கண்களிலும் மண்களைத் துவி வலிய வந்த மடிந்ததே; அதற்கு நீர் என்ன செய்வீர்? மிருக ஜாதிகளிலே உயர்வுள்ள பசுவின் கன்று இறக்கநேரிட்டதே யென்று எண்ணி யெண்ணிச் சோர்ந்து போகின்றீர். ஆனால் அதற்கென்ன செய்வோம்? பொன்கத்தி என்று கழுத்தரிந்து கொள்ளலாமோ? இதனால் நமக்குப் பழி பாவம் ஒன்றுமில்லை; ஆயினும் இதுபற்றி உமது மனது ஆலைபாய்ந்து அவலங் கொள்ளுகின்றபடியால், வேதத்தில் விதித்திருக்கின்ற பிராயச்சித்தங்களுள் இதற்குத் தக்கது எதுவோ அதைக் கேட்டறிந்து செய்து கொள்ளலாம்; நீர் சித்தங் கலங்காமல் தேரிலேறும்" என்று சொன்னார்கள்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 013. திருவருள் விழைதல் tiruvaruḷ viḻaital
16. விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
கரைஎலாம் கடந்தது கண்டாய்
வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
வல்லவா அம்பல வாணா
திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
திகழ்வித்த சித்தனே சிவனே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 009. ஜீவசாட்சி மாலை jīvasāṭsi mālai
18. கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
கரைந்துருகி எந்தாய்நின் கருணை காணா
தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
பூரணமே புண்ணியமே புனித வைப்பே
தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 082. அபராத விண்ணப்பம் aparāta viṇṇappam
18. கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்
கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்
மடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்
தொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்
அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
24. கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.
எனக்கும் உனக்கும்
-
மூன்றாம் திருமுறை / Third Thirumurai 010. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல் puṇarā viraku poruntuṟu vēṭkaiyiṉ iraṅkal
24. தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால்
தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால்
வரையற் களித்தார் திருஒற்றி வாணர் இன்னும் வந்திலரே
கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்ட வுடன்காதல்
திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
27. கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே
கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே
கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே
தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே
தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே.
எனக்கும் உனக்கும்
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 080. முறையீட்டுக் கண்ணி muṟaiyīṭṭuk kaṇṇi
31. கரைசேர வொண்ணாக் கடையேன் பிழையை
கரைசேர வொண்ணாக் கடையேன் பிழையை
அரைசேநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 071. திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம் tiruvōttūr sivañāṉa tēsikaṉ tōttiram
31. கரைஅற்ற மகிழ்வினொடு செய்தருள் புரிந்திடும்
கரைஅற்ற மகிழ்வினொடு செய்தருள் புரிந்திடும்
காட்சியே சிவஞானியாம்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
32. தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது - அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது - அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன - மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது - சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன - வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன - கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது - காது கும்மென்று செவிடுபடுகின்றது - நா உலர்ந்து வறளுகின்றது - நாசி குழைந்து அழல்கின்றது - தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது - கை கால் சோர்ந்து துவளுகின்றன - வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது - பற்கள் தளருகின்றன - மலசலவழி வெதும்புகின்றது - மேனி கருகுகின்றது - ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன - நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது - மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது - ஈரல் கரைகின்றது - இரத்தமும் சலமும் சுவறுகின்றன - மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்றெரிகின்றது - தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன - உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.
-
முதல் திருமுறை / First Thirumurai 004. சிவநேச வெண்பா sivanēsa veṇpā
45. பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற
தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 002. அருட்பிரகாச மாலை aruṭpirakāsa mālai
45. கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
கரையாது நிறைந்திருக் கழலடிகள் வருந்த
வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே .
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
இங்ஙனம் சிவபரம்பொருளை அனுபவித்தற்கு முக்கியம் ஜீவ காருண்யம். பாசவைராகம், சிவபத்தி. இவை கிடைத்தற்கு முதற் கருவி சாதுக்கள் சார்வு. ஆகலின் அவசியம் சாதுக்கள் சார்பு வேண்டும். நல்லது, சாதுக்கள் சார்பு, தற்காலத்திற் கிடைப்பினுங் கிடையாவிடினும் நம்மை எழுபிறப்பென்னும் பெருங்கடலைக் கடப்பித்துப் பேரின்பமென்னும் கரையிலேற்றும் சைவப் பதியிற்றெய்வப் புணையாக வாய்த்த திருமந்திரமாகிய பஞ்சாக்கரத்தை இடைவிடாது சிந்தித்துக் கொண்டும் சிவபிரான் திருவடிகளைப் பாவித்துக் கொண்டும் வருவது முக்கியத்தினு முக்கியம். ஆகலில் நமக்கு இது அவசியம் பற்ற வேண்டிய காரியம். மற்றவைகளைக் குறித்து அறிவறிகத் தமது நன்மனத்திற்கு நான் விரிக்க வேண்டுவதில்லை. இனி - திரவிய விஷயத்தில் என்னைக் குறித்து விசேஷ முயற்சியெடுத்துக் கொள்ள வேண்டாம்.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
53. மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
54. கையாத தீங்கனியே கயக்காத அமுதே
கையாத தீங்கனியே கயக்காத அமுதே
கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
போகாத புனலேஉள் வேகாத காலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே
குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
68. பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 020. பிள்ளைப் பெரு விண்ணப்பம் piḷḷaip peru viṇṇappam
70. தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால்
உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
77. அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே.
-
உபதேசக் குறிப்புகள்
81. தியானம்
தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
78. அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
எனக்கும் உனக்கும்
-
முதல் திருமுறை / First Thirumurai 003. நெஞ்சறிவுறுத்தல் neñsaṟivuṟuttal
76. காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்
காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்
சேரூழி நிற்கவைத்த சித்தனெவன் - பேராத
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
79. பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே
துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
எனக்கும் உனக்கும்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
80. ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
எனக்கும் உனக்கும்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
127. சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
தீமன மாயையைக் கணத்தே
வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
உற்றசா றட்டசர்க் கரையும்
நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
ஞானமன் றோங்கும்என் நட்பே.
-
உபதேசக் குறிப்புகள்
121. ஏழு திரைகள்
இந்தப் பவுதிக உடம்பிலிருக்கிற நீ யாரெனில்: நான் ஆன்மா, சிற்றணு வடிவன். ஷெ அணு கோடி சூரியப் பிரகாசமுடையது, லலாடஸ்தானமிருப்பிடம், கால்பங்கு பொன்மை முக்கால்பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய 7 திரைகளுண்டு. அவையாவன:
கறுப்புத் திரை மாயாசத்தி. நீலத்திரை கிரியாசத்தி. பச்சைத்திரை பராசத்தி. சிவப்புத்திரை இச்சாசத்தி. பொன்மைத்திரை ஞானசத்தி. வெண்மைத்திரை ஆதிசத்தி. கலப்புத்திரை சிற்சத்தி.*
* கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பேருறு நீலப் பெருந்திரை அதனால் ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பச்சைத் திரையால் பரவெளி அதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி செம்மைத் திரையால் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி கலப்புத் திரையால் கருதனு பவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி - திருஅருட்பா, அருட்பெருஞ்ஜோதி அகவல் 813-826
-
முதல் திருமுறை / First Thirumurai 002. விண்ணப்பக் கலிவெண்பா viṇṇappak kaliveṇpā
132. பரிசிற் கரைப்புற்றோர் பாங்குபெற வோங்கும்
பரிசிற் கரைப்புற்றோர் பாங்குபெற வோங்கும்
அரிசிற் கரைப்புத்தூ61 ரானே - தரிசனத்தெக்
-
முதல் திருமுறை / First Thirumurai 006. திருவருண் முறையீடு tiruvaruṇ muṟaiyīṭu
135. சீர்தரு நாவுக் கரையரைப் போலிச் சிறியனும்ஓர்
சீர்தரு நாவுக் கரையரைப் போலிச் சிறியனும்ஓர்
கார்தரு மாயைச் சமணான் மனக்கருங் கல்லிற்கட்டிப்
பார்தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டுழன்றே
ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின் றேன்கரை ஏற்றரசே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
154. கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.
-
முதல் திருமுறை / First Thirumurai 006. திருவருண் முறையீடு tiruvaruṇ muṟaiyīṭu
232. இரையேற்று துன்பக் குடும்ப விகார இருட்கடலில்
இரையேற்று துன்பக் குடும்ப விகார இருட்கடலில்
புரையேற்று நெஞ்சம் புலர்ந்துநின் றேனைப் பொருட்படுத்திக்
கரையேற்ற வேண்டுமென் கண்ணே பவத்தைக் கடிமருந்தே
திரையேற்று செஞ்சடைத் தேவே அமரர் சிகாமணியே.
-
முதல் திருமுறை / First Thirumurai 002. விண்ணப்பக் கலிவெண்பா viṇṇappak kaliveṇpā
303. நன்னெஞ்ச ருன்சீர் நவில வதுகேட்டுக்
நன்னெஞ்ச ருன்சீர் நவில வதுகேட்டுக்
கன்னெஞ்சைச் சற்றுங் கரைத்ததிலை - பின்னெஞ்சாப்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
306. களவில கடல்வகை கங்கில கரையில
களவில கடல்வகை கங்கில கரையில
அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
307. கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
407. கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
696. பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே