தமிழில் என்ற வார்த்தை 1 இடங்களில் பொருத்தமான பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன
-
உபதேசக் குறிப்புகள்
73. மூவிடம் (தன்மை முன்னிலை படர்க்கை) தமிழில் தன்மை முன்னிலை, படர்க்கை என்பவை யாவை? அவற்றின் கருத்து யாது? தன்மை, பண்புச்சொல், சார்புமயமாய் இருத்தலைப்பற்றி - தனக்கு மேல் ஒன்றினைச் சார்ந்திருப்பதனால் - பண்புச் சொல் ஆகிறது. முன்னிலை என்பது முன்-நிலை, முன் இடங் கூறினது. ஆனால் மூன்றாம் இடத்திற்குப் படர்க்கை என்பது என்னெனில்: படர் - படரும்படியான, கை - இடம், நிலை - அகண்ட இடம். கை என்பது குறுகிய இடம். ஆதலால் பேதாபேதம் குறிக்கும் நிமித்தம் இரண்டாம் இடத்துக்கு முன்னிலை என்றும், மூன்றாம் இடத்திற்குப் படர்க்கை என்றும் பெயர்கள் வந்தன என அறியவும். 74. பஞ்ச மகா பாதகங்கள்
கள், காமம், கொலை, களவு, பொய் - இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டுபண்ணும். இவ்வைந்திலும் கொலை விசேஷ பாவம். எனினும், கள்ளுண்டவனுக்குக் காமம் உண்டாகாமலிருக்காது, கொலை செய்யத் துணிவு வாராமலிராது, களவு செய்யாமலிரான், பொய் பேச அஞ்சான். ஆகையால், இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இதில் ஒன்றை அடைந்தவ னானாலும் அவனை மற்றவை தொடராம லிரா.
தமிழில் -
சிற்சபை -
சிறந்த -
உஷ்ணம் -
லலாடம் -
கரைவி -
நரகம் -
பாதம் -
சுத்த -
அகவல் -
நாபி -
ஜோதி -
கரை -
ஒருமையுடன் -
சுத்த+ஞானி -
வள்ளலார் -
செந்தில் -
வார்த்தை -
ஜீவகாருண்யமே -
மனம்+புத்தி+சித்தம்+அகங்காரம் -