-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 008. முத்தி உபாயம் mutti upāyam
3. முத்தி வேண்டுமேல்
முத்தி வேண்டுமேல்
பத்தி வேண்டுமால்
சத்தி யம்இது
புத்தி நெஞ்சமே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 064. இரேணுகை பஞ்சகம் irēṇukai pañsakam
4. புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கருள் புரிவாய்
விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கருள் ஒழுகிய விழியாய்
எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
-
அருள்நெறி
அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது? நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 006. செளந்தர மாலை seḷantara mālai
4. சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
-
சுப்பிரமணியம்
மயிலின் மேல் சுவாமி ஏறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்குக் காரணம் என்னவென்றால்: பிண்டாண்டமாகிய இந்தத் தேகத்திலும் அண்டத்திலும், மூலாஞ்ஞான ஆபரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதிமாயையின் அசுத்த கேவலமாகிய அசுத்தாசுத்த மகாஅகங்காரமென்னும் இராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சோதரமான மூவகைத் தத்துவத்தோடு, அஞ்ஞான தசையில், ஆன்ம அறிவையும், பிண்ட விளக்கமான தேவர்களையும், விஷய விளக்கமான இந்திரியங்களையும், நாடி விளக்கமான யந்திரங்களையும், பிராண விளக்கமாகிய உயிரையும் விழுங்கித் தன்னரசு செலுத்தும். அந்தச் சூரதத்துவத்தை வதைக்கும்போது, மேற்படி தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும், மாச்சரியமாகிய கோழியாயும், விசித்திரமாயையென்னும் மயிலாயும், மகா மதமாகிய யானைமுகமாயும், அதிகுரோதமாகிய சிங்கமுகமாயும் விளங்கும். சர்வ தத்துவங்களையும் தன்வசமாக்கி, அகங்காரக்கொடி கட்டி, அஞ்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி, பதிபசுபாசம் அநாதி நித்தியம் என்னும் சித்தாந்தத்தை விளக்கிக் காட்டு வதற்காக, மாச்சரிய குக்குடத்தைப் போதமாகிய கையால் அடக்கியும், விசித்திரமாயையாகிய மயிலைக் கீழ்ப்படுத்தி மேலிருந்தடக்கியும், ஆபாசதத்துவங்களைச் சம்மரித்தும், சுத்தவிஷய புவனமாகிய தேவ லோகத்தை நிலைபெறச் செய்தும், இந்திரபதியான ரூபேந்திரனுடைய பெண்ணாகிய தாந்தரதத்துவ மென்னுந் தெய்வயானையை இடப்பாலமைத்தும், இந்திரியங்களாகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்ட மானசமென்னும் மானினது கர்ப்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும், நவதத்துவ காரணமாகிய நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும், சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேகவடிவாயும், பாதம் முதல் நாபி வரையில் உஷ்ணவுருவாயும், நாபி முதல் கண்டம் வரையில் ஆதாரநாடியுருவாயும், கண்ட முதல் புருவமத்தி வரையில் மணியுருவாயும், உச்சியில் ஒளியுருவாயும், புத்தியில் சுத்த அறிவாயும், அனுபவத்தில் நித்தியமாயும், எங்கும் நிறைவாயும், கோணத்தில் ஆறாயும், எக்காலமும் மதங்களில் ஆறாயும், சமயத்தில் ஆறாயும், ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக் கடவுளே சுப்பிரமணியம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 057. அனுபவ நிலை aṉupava nilai
6. புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.
-
மனு முறைகண்ட வாசகம்
இந்தப் பிரகாரமாக மந்திரி முதலான உறுதிச் சுற்றங்களுடன் உலகாண்டிருந்த அம் மனுச்சோழரென்னும் சக்கரவர்த்தியானவர் புத்திரப் பேறில்லாமல் மனம் வருந்தி அதுபற்றியும் அறுபது வருஷ காலமாக அனேக தானங்களும் தருமங்களும் யாகங்களும் விரதங்களுஞ் செய்தும் புத்திரோற்பத்தி இல்லாமையால், "புத்திரச் செல்வம் பெறாதவர் பொருட்செல்வம் பெற்றும் பயனில்லையே; புத்திரன்போல் நமக்கு இந்த அரசச் செல்வம் இம்மை மறுமை இன்பங்களைக் கொடாதே; சந்ததியில்லாவிட்டால் பிற்காலத்தில் கண்களில்லாத முகமும் சூரியனில்லாத பகலும்போல, அரசனில்லாது இவ்வுரகந் தலைதடுமாறிப்போமே; ஆதலால் இனிப் புத்திரனைப் பெற்றுக் கொள்வதற்குத் தக்க முயற்சி நமது ஆண்டவனாகிய தியாகராஜப் பெருமானை வழிபடுதே யல்லது வே றொன்றுமில்லை; ஆனால் மோக்ஷப் பேறு குறித்து நிஷ்காமியமாக இத்தனை நாளும் வழிபட்டு வந்த நாம் இப்போது புத்திரப்பேறு குறித்துக் காமியமாக நமதாண்டவனை வழிபடுவது தகுதியல்ல வாயினும், 'தீராக் குறைக்குத் தெய்வமே முடிவு' என்கின்றபடி எவ்விதத்திலும் தீராத புத்திரனில்லாக் குறையைச் சிவ பெருமானது திருவருளாலேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும்" என்று ஆலோசித்துத் துணிவுகொண்டு, தமது மனைவியாருடன் ஆகமவிதிப்படி கமலாலயம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பயபக்தியுடன் பூங்கோயிலைப் பஞ்சாவரண வலமுஞ் செய்து உட்புகுந்து, தியாகராஜப் பெருமானது சந்நிதிக்கெதிரே அஷ்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்து, வணங்கிய முடியும், மலர்ந்த முகமும், நீர் பொழிகின்ற கண்ணும், துதிக்கின்ற நாவும், கூப்புகின்ற கையும், புளகமெழும்புகின்ற உடம்புங் கொண்டு நின்று, 'புத்திரப் பேறில்லாத குறையைத் தீர்த்தருள வேண்டும் என்று விண்ணப்பித்துப்பலவிதமாகத் தோத்திரஞ்செய்து தமது அரண்மனைக்குச் சென்று இந்தப் பிரகாரமே நாள்தோறும் போய் வழிபட்டுப் பிரார்த்தித்துக் கொண்டே வந்தார். அவர் செய்யும் வழிபாட்டுக்கும் வந்தனைக்கும் இரங்கித் தியாகராஜப் பெருமான் புத்திரப் பேறுண்டாகும்படி அனுக்கிரகஞ்செய்ய, அந்த அனுக்கிரகத்தால் மகாராஜனுக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி வலம்புரிச் சங்கு விலையுயர்ந்த வெண்முத்தினைக் கருப்பங்கொண்டதுபோலத் தேவியார் தமது திருவயிற்றில் கருப்பங்கொண்டு, பத்து மாதமுஞ் சென்று நல்ல சுபதினத்தில், தர்மதேவதை தாண்டவமாடவும் வானகத்தார் மலர் சொரிந்து வாழ்த்தவும் வையகத்தார் மனங் களிக்கவும், அதிதியாரானவர் ஆதித்தனைப் பெற்றதுபோலவும் மல்லிகைக்கொடி மணமுள்ள மலரைப் பூத்ததுபோலவும், எவ்வௌர்களும் அதிசயிக்கத் தக்க சர்வ லட்சங்களும் நிறைந்த வடிவுடளள ஒரு புத்திரனைப் பெற்றார்.
-
அருள்நெறி
இவ் வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன? புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு, அவரால் கட்டளையிடும் திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில், அவ்வருளைப் பெறலாம்.
-
மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்
அன்புள்ள ஐயா - சுமார் இருபத்தைந்து தினத்திற்கு முன் இவ்விடத்திலிருந்து சிவஞான விருப்பினராகிய ராமலிங்க மூர்த்திகளும் சண்முகப் பிள்ளை என்பவரும் தங்களிடம் போய் வருவதாகக் குறித்து வந்தார்கள். அவர்கள் அவ்விடம் வந்திருப்பதும் வேறிடம் போயிருப்பதுந் தெரியவில்லை. தங்களிடத்தில் அவர்கள் இருந்தால், தற்காலம் அவ்விடத்தில் மழை யில்லாமையால் மிகவும் நிற்பந்தமாக விருப்பதாய் கேள்விப்படுகிறேன். ஆதலால், தாங்கள் அவர்களை இவ்விடம் வரும்படி செய்யவேண்டும். அவர்கள் தங்களிடத்தில் இல்லாமல் வேறிடத்தி லிருந்தால், அவ்விடம் இவ்விடமென்று எனக்குத் தெரிவிக்கவேண்டும். தாங்களும் சிவத்தியான சகிதர்களாய் தேக விஷயத்திலு மற்றைக் குடும்ப விஷயத்திலும் சர்வ சாக்கிரதையோடு இருக்க வேண்டும். நற்குணத்திலும் சிவபத்தியிலும் சிறந்த தங்கள் தம்பியார்க்கும் தங்கள் புத்திர சிகாமணிக்கும் என் க்ஷேமம் குறிக்க வேண்டும். நான் தற்காலம் கூடலூரி லிருக்கின்றேன். வந்தனம். நமது ராமலிங்க மூர்த்திகளுக்கும் வந்தனம்.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
ஐயா! தற்காலத்தில் தங்கள் மனத்தில் நேரிட்ட சஞ்சலங்களை நிவர்த்தி செய்து இனியொரு காலங்களிலும் வாராதவண்ணம் பாதுகாத்து சதா சவுக்கியத்தைப் பெற்று சந்தோஷமடைய அனுக்கிரகிக்க வேண்டுமென்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். தாங்களும் இரவும் பகலும் நமது ஆண்டவனை இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டு சாக்கிரதையோடு இருக்கவேண்டுமென்று தங்களையும் பிரார்த்திக்கிறேன். நம்மைப் பெற்ற தாயைப் பார்க்கிலும் அனந்தங்கோடி பங்கு நம்மிடத்தில் தயவுள்ளவன் நமது ஆண்டவன். ஆகலால் நமக்கு ஒரு காலத்திலுங் குறைவு நேரிடாது. இது சத்தியம். ஆனால் நாம் நம்பிக்கை தவறாது இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் விரித்துத் தங்களுக்குச் சொல்லவேண்டுவ தென்ன. என் போன்றவர்களெத்தனை பேருக்கோ தாங்கள் சொல்ல வல்லவர்களாக விருக்கின்றீர்கள். தங்களிடத்தில் நான் என்ன காரியஞ் சொல்லி யிருந்தேனோ அந்தக் காரியந் தங்கள் மனமாட்டில் நிற்குமல்லவா. ஆதலால் அந்தக் காரியத்தைக் குறித்தே தற்காலம் பிரயத்தனப் பட்டுக்கொண் டிருக்கிறேன். நமது ஆண்டவன் அனுக்கிரகத்தால் அது முடியுங் காலத்தை இன்னுஞ் சில நாளில் தெரிந்து கொள்ளலாம். தாங்கள் இப்போது இவ்விடம் விஜயஞ்செய்ய எந்த விதத்திலும் எண்ண வேண்டுவதில்லை. நான் வந்துவிடுகிறேன். தாங்கள் வரவுக்குத் தக்க செலவு செய்துக்கொண்டிருக்க வேண்டும். பின்பு இஷ்டப்படி யெல்லாஞ் செய்ய நமது ஆண்டவன் அனுக்கிரகிப்பான். இதற்குச் சந்தேகமிராது. இது உண்மை. இந்த உண்மை தங்களுக்குத்தான் தெரியும். ஆதலால் தங்கள் மட்டில் இது தெரிவித்தேன். ஐயா! நானோ புத்தி தெரிந்த நாள் தொடங்கி இதுபரியந்தமும் இந்தப் பிண உடம்பும் இதற்குக் கொடுக்கின்ற பிண்ட துண்டங்களும் பெருஞ் சுமையாக இருக்கின்றதே. ஐயோ, இது என்றைக்குத் தொலையும் என்று எண்ணி எண்ணி இளைத்துத் துன்பப் படுகின்றவனாக இருக்கிறேன். இப்படிபட்ட இந்த நாய்க்குப் பணம் என்ன செய்ய. ஐயா, என்னைக் குறித்துத் தாங்கள் பண விஷயத்தில் பிரயாசமெடுத்துக் கொள்ளவேண்டாம். தாங்கள் வேறு விதத்திலும் செலவுக்கு இடம் பார்க்கவேண்டாம். தாங்கள் மார்கழி மாதம் மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீமுதலியார் நற்குண மணியாகிய சீனிவாச முதலியார்க்கு எழுதிய கடிதத்தால் அவர்கள் என்னைக் கேட்க நான் மறுக்க, மறித்தும் தங்கள் கடிதம் வர, இதனால் தங்கள் மனத்திற்கு வருத்த முண்டாமென்று மேற்படி முதலியார் அவர்களிடத்தில் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டேன். மற்றவை அவாளிடத்திற்றானே யிருக்கிறது. இதனை தாங்கள் அறியவேண்டும். மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீ சீனிவாச முதலியார் மிகவு நல்லவர்கள். சிநேக பாத்திரர்கள், நல்ல புத்திமான்.
-
மனு முறைகண்ட வாசகம்
புத்திரன் பிறந்த சந்தோஷமான சமாசாரத்தைப் பாங்கிகள் அதிசீக்கிரமாக வந்து தம்மை மறந்த மனக் களிப்புள்ளவர்களாக எதிர் நின்று "ஆண்டவனே! எங்கள் தலைவியார் திருவயிற்றிலிருந்து தேவரீர் புகழே வடிவாகவும் புண்ணியமே உயிராகவும் கொண்டு பொன்னலகத்தைக் காக்கின்ற புரந்தரனும் நாணமடையப் பூவுலகத்தைக் காக்கத் தக்க வல்லமையுள்ள புத்திர சிகாமணி உதயஞ்செய்தது" என்று விண்ணப்பஞ்செய்யக் கேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர், து‘ரதேசத்திற் போயிருந்த கப்பல் துறைமுகத்தில் வந்ததென்று சொல்லக்கேட்ட வர்த்தகனைப் போலவும், கூடிப் பிரிந்த மங்கையின் குரலோசை கேட்ட நாயகனைப்போலவும், தாகங்கொண்டு தவிக்குங் காலத்தில் சமீபத்தே தண்-ருண்டென்று சொல்லக்கேட்ட தேசசஞ்சாரியைப் போலவும், மனங்குளிர்ந்து உடல் பூரித்து அளவிடப்படாத களிப்புடையவராய், அந்தப் பாங்கிகளுக்கு விலையுயர்ந்த ஆடையாபரணங்களை வெறுப்படையும்படி பரிசு கொடுத்து, தாம் நீராடி நியமங்கள் முடித்து, வேதவித்துக்களாகிய பிராமணர்களுக்கு விதைதானம் சொர்ணதானம் கன்னிகாதானம் அசுவதானம் கஜதானம் பூதானம் கோதானம் முதலான தானங்களைக் கொடுத்து, புத்திரன் பிறந்த நாள்தொட்டுப் பன்னிரண்டு வருஷமட்டுங் குடிகள் வரிகொடாமல் சர்வ மானியமாகத்தாமே அனுபவித்துக்கொள்ளவும், திறை கட்டி வரும் அரசர்கள் ஏழு வருஷமட்டும் அந்தத் திறைகளைக் கட்டாமல் தாங்களே எடுத்துக்கொள்ளவும், சிறைச்சாலையிலிருந்த சத்துருக்களை விட்டுவிடவும், பொக்கிஷசாலையைத் திறந்துவிட்டு நகரிலும் நாட்டிலும் உள்ளோர் யாவரும் தங்கள் தங்களுக்க வேண்டிய மட்டில் ஏழு நாள் வரையில் எடுத்துக் கொண்டு போகவும், தேவாலயங்களிலெல்லாம் புதிதாகத் திருப்பணிகளும் திரு விழா முதலான சிறப்புகளும் செய்விக்கவும் கட்டளையிட்டு, பின்பு தாம் முன் தேடிவைத்த திரவியத்தைத் தெரியக் கண்டு கொண்டவனைப்போலத் திரை மறைவிலிருந்த அச்செல்வக் குழந்தையை வெளிப்படக்கண்டு மனமகிழ்ச்சியடைந்து இளஞ் சூரியோதயம்போல இந்தப் புத்திரன் இவ்விடத்தில் உதயஞ்செய்தது சிவானுக்கிரகமேயல்லது வேறல்லவென்று வியப்படைந்து, சோதிட சாஸ்திரங்களில் வல்லமையுள்ள பெரியோர்களைக் கொண்டு ஒப்பற்ற செல்வம் கல்வி வெற்றி முதலிய அதிர்ஷ்டங்கள் நடனஞ் செய்கின்ற சாதக பலனைக் கறித்து, தியாகராஜப் பெருமானது திருவருளால் வந்ததுபற்றி அக்கடவுளின் திருப்பெயர் கொண்டு வீதிவிடங்கள் என்னும் நாமகரணமும் அன்னப்பிராசனம் சௌளம் முதலான சடங்குகளும் மிகுந்த விபவமாகவும் வேதயுக்தமாகவம் அது அது செய்யத்தக்க பருவங்களில் செய்வித்து, அந்தப் புதல்வனை வாச நீராட்டுவித்தும், இனிய உணவுகளை ஊட்டுவித்தும், பொன்னாலும் இரத்தினங்களாஞ் செய்த பூஷணங்களைப் பூட்டுவித்தும், மார்மேலும் தோள்மேலும் மடிமேலும் வைத்து வைத்து முத்தாடியும் திருந்தாத குதலைச் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தும், கற்பக விருக்ஷத்தின் கனியைக் கேட்கினும் அந்தக் கணமே தருவித்துக் கொடுத்தும், சிறிய விளையாடல்களைச் செய்யக் கண்டுகளித்தும், கற்புள்ளவன் கணவனை உபசரிப்பதுபோல் உபசரித்தும், படிப்பில் ஆசையை வைத்தவன் பாடத்தைப் பாராட்டுவது போலப் பாராட்டியும், தன்னை உயர்ந்தவனாக்க நினைத்தவன் தருமத்தை வளர்ப்பதுபோல வளர்த்தும், முன் சிறுமையடைந்து பின் செல்வத்தைப் பெற்றவன் அச்செல்வத்தைப் பாதுகாப்பதுபோலப் பாதுகாத்தும், புத்திரசம்பத்தினால் வரும் பயனை அடைந்தவரா யிருந்தார்.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 014. பொறுக்காப் பத்து poṟukkāp pattu
7. பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
பரஞ்சுடர் நின்அடி பணியும்
புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
நித்திய அடியர் தம்முடன் கூட்ட
நினைந்திடில் உய்குவன் அரசே
சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
தணிகைவாழ் சரவண பவனே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 007. சிவபுண்ணியத் தேற்றம் sivapuṇṇiyat tēṟṟam
7. முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
பத்தி நீறிடும் பத்தர்கள் காலால்
பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
போற்ற லார்புரம் பொடிபட நகைத்தோன்
சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.
-
மனு முறைகண்ட வாசகம்
இந்தப்படி இணையில்லாத செல்வப் பெருக்கத்தினால் வளர்க்க வாழையிளங் குருத்துப் போல வளர்ந்து வருகின்ற புத்திரனுக்கு, ஐந்தாம் வயதில் அட்சராப்பியாசஞ் செய்வித்து, ஏழாம் வயதில் சகல தேசத்தரசர்களுக்குந் தெரிவித்து, நகரை அலங்காரஞ் செய்வித்து பத்மராகம் கோமேதகம் வயிம் வைடூரியம் முதலான இரத்தினகசிதமான கல்யாண மண்டபத்தில் வேத வேதாங்கங்களில் வல்லவரான பிராமணர்களும் சாபானுக்கிரக சாமர்த்தியமுள்ள தபோதனர்களும் ஆசீர்வதிக்கவும் மன்னர் மண்டலீகர் பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர் அமைச்சர் உறவினர் சினேகர் முதலானவர்கள் கண்டு களிக்கவும் சுமங்கலப் பெண்கள் சோபனம் பாடவும் பேரி, சங்கம், மிருதங்கம் முதலான மங்கல வாத்தியங்கள் முழங்கவும் நல்ல சுப முகூர்த்தத்தில் வேதவிதிப்பிரகாரம் உபநயன கல்யாணஞ் செய்வித்து, பலவகைத் தானங்களும் செய்து சகல வேதாகம சாஸ்திரங்களிலும் வல்லமையுள்ள ஆசாரியரைக் கொண்டு வித்தியாரம்பஞ் செய்வித்தார். சில நாள்களுக்குள்ளே வீதிவிடங்கனென்னும் அப்புத்திரனானவன் வேதங்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் ஸ்மிருதிகள் இதிகாசங்கள் முதலான கலைகளில் ஆசாரியனைப் பார்க்கிலும் எண்மடங்கு வல்லமையுள்ளவனாகி யானையேற்றம், குதிரையேற்றம், ரதாரோகணம், வில்வித்தை, வாள்வித்தை இந்திரஜாலம், மகேந்திரஜாலம் முதலான ஸமஸ்த வித்தைகளையுங் குறைவறக் கற்றுக்கொண்டு, ஆதிசேடனைப்போல் அறிவும், காமனைப்போல் கட்டழகும், ஆண்சிங்கம் போல் ஆண்மையும், மதயானைபோல் நடையும், மார்த்தாண்டன்போல் வாய்மையும், கற்பகவிருக்ஷம்போல் கொடையும் உடையவனாகி; சிவபக்தி, சீவகாருண்ணியம், பொறுமை, அன்பு, ஆசாரம், ஒழுக்கம் ஊக்கம், சாந்தம், சற்சனநேயம் முதலான நற்குணங்களுடன் உயிர்க்கு முடிவு நேரிடுமானாலும் உண்மையே பேசுவதும், உறுதியே சொல்லுவதும், இன்சொல்லே கூறுவதும், இதமே செய்வதும், பயனுடளள காரியங்களை பாராட்டுவதும், பிராமணர் தவத்தோர் முதலான பெரியோர்களைக் கண்டால் அன்போடும் அச்சத்தோடும் எதிர்கொண்டு தலையால் வணங்கி வாயால் வாழ்த்துவதுமாகிய நற்செய்கைகளைப் பெற்று மாதா பிதாக்களது மனக்குறிப்பறிந்து அவர் இச்சையின்வழி நடந்து மகிழும்படி செய்வித்து, இளமைப் பருவத்திற்றானே எல்லாம் அறிந்தவனாகி, கண்டோர் கொண்டாடவும் கேட்டோர் மனங் களிக்கவும், இளவரசுப் பட்டத்துக்குத் தகுந்த பருவத்துட னிருந்தான்.
-
சுப்பிரமணியம்
படைவீடென்ப தென்ன? அடங்கி இருக்குமிடம். அடங்கியிருக்கும் ஸ்தானங்களே இயற்கைவிளக்கம் தங்குமிடங்களாகும். இவற்றிற்கு ஊர் ஆறாவானேன்? ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம். திருவாவினன்குடி யென்பது திரு-ஆ-இன்ன-குடி: திரு - இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ-பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் - சூரியனாகிய புத்தியும், ஒன்று கூடி விளங்கும் ஆன்மஅறிவின் சுத்தகாரிய இடம். பழமுதிர்ச்சோலை யென்பது இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன வின்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம். திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்பன: சுத்தமனத்தின் முகத்தில் விஷயக் கடலின் அவாவாகிய அலையடித்துக் கொண்டிருக்கும் இடமாகிய கரை, செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை நிவர்த்தித்துச் சந்தோஷகரத்தைப் பெற்ற பதிமனத்தின் விளக்கம். திருப்பரங்குன்ற மென்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தையுடைய விவேக உல்லாச வின்ப நிறைவு. குன்று தோறாடல் என்பது மலைதோறாடல். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமா யுள்ள துரிய நன்னிலை. இத்துரியம் பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவக் காட்சியில் அனந்தம் உண்டு. மேற் குறித்த அனுபவக் காட்சிகளுக்குத் தேகத்தி லிடம் எவை? கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக் கீழ், மார்பு, நெஞ்சு ஆக 6.
-
மனு முறைகண்ட வாசகம்
அப்படியிருந்த நாள்களில் ஒருநாள் அவ் வீதிவிடங்கனென்னும் இராஜபுத்திரன் தன் பருவத்துக்கொத்த இராஜகுமாரர்களும் மந்திரிகுமாரர்களும் சூழ்ந்துவர தன் பிதாவாகிய மனுச்சோழருடைய சமுகத்துக்கு வந்து பிதாவினது திருவடிகளுக்கு அஷ்டாங்க பஞ்சாங்கமாகத் தண்டனிட்டு எழுந்து து‘சொதுக்கியும் உடம்பொடுக்கியும் கைகட்டியும் வாய்புதைத்தும் எதிரே நிற்க அப்போது மனுச்சக்கரவர்த்தியானவர் நெடுநாள் பிரிந்திருந்த கன்னறினைக் கண்ட பசுவைப்போலவும் இடந் தெரியாதிருந்த புதையலை யெதிர்ப்படக் கண்டவனைப் போலவும் கண்கள் களிகூரக் கண்டு, உள்ளமும் உடலும் பூரித்துக் தமது இரண்டு கைகளாலும் தழுவி அணைத்தெடுத்து மடிமேல் வைத்து உச்சிமோந்து முதுகைத் தடவி "எனக்கு நெடுநாளாக விருந்த மனக்குறையைத் தவிர்த்து இம்மை மறுமைப் பயனைக் கொடுக்கும்படி பிறந்த அருமையாகிய அமுதத்தை யொத்த என் புத்திரனே! உன் மனதில் ஏதோவொரு எண்ணமுண்டானதாகத் தோன்றுகின்றது; அவ்வெண்ணம் இன்னதென்று வெளிப்படுத்த வேண்டும்" என்று கேட்க, அது கேட்ட வீதிவிடங்கன் "மூன்றுலகத்திலுங் கேடில்லாத கீர்த்தியை நாட்டிய பெருந்தன்மையுடைய தேவரீரைப் பிதாவாகப் பெற்ற அடியேனுக்கு எண்ணங் கொள்வதற்கு என்ன குறையிருக்கின்றது? நமது குலதெய்வமாகியும் இஷ்ட தெய்வமாகியும் கமலாலயத்தில் எழுந்தருளிய தியாகராஜப் பெருமானைத் தரிசித்துவர வேண்டுமென்னும் எண்ணம் ஒன்றுமாத்திரமுண்டு; இவ்வெண்ணம் இடையூறில்லாமல் நிறைவேறும்படி தேவரீர் திருவுள்ளங் கொள்ளவேண்டும்" என்று விண்ணப்பஞ் செய்தான்.
-
மூன்றாம் திருமுறை / Third Thirumurai 007. இன்பப் புகழ்ச்சி iṉpap pukaḻchsi
9. துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே
எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 054. கொடி விண்ணப்பம் koṭi viṇṇappam
10. முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
முந்து றேன்அவர் முற்பட வரினும்
சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும்
புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
சிரஞ்சீவி முருகப்பிள்ளை மாப்பிள்ளைக்கு சகலபாக்கியமும் புத்திர சம்பத்தும் தீர்க்காயுளும் மென்மேலுண்டாவதாக. சிரஞ்சீவி குமாரசாமி அவ்விடம் வருகிறபடியால் அவனுக்கு படிப்பும் முயற்சியும் ஊதியமும் உண்டாகின்ற வகை எவ்வகை - அவ்வகை ஆராய்ந்து கூட்ட வேண்டும். இதுவன்றி உனக்கு முக்கியம் தெரிவிக்க வேண்டுவது ஒன்று என்னென்றால் - பழமை பாராட்டலும் கண்ணோட்டம் செய்தலும் சுற்றந் தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும் என்பது நீ மாத்திரம் அடிக்கடி கவனிக்க வேண்டும். நீ இப்போது முன் மாப்பிள்ளையல்ல, புதுமாப்பிள்ளை. எம்போல்வார் மேல் ஞாபகமிராது ஆதலால் ஞாபகப்படுத்தினேன். நானும் சில மாதத்தில் வருகிறேன், வேணும் சிரஞ்சீவி.காளயுக்தி இங்ஙனம்வையாசி 16ஆம் நாள் சி. இராமலிங்கம்
-
மனு முறைகண்ட வாசகம்
அது கேட்டு அரசானாவர் "சர்வ வல்லமையுள்ள சுயம்புவாகியும் கருணைக்கடலாகிய கடவுளாகியும் பிள்ளைக்கலி தீர்த்த பெருமானாகியும் விளங்கிய தியாகராஜப் பெருமானைச் சேவிப்பதற்குத் தடையுண்டோ? தனக்கிணையில்லாத தரும மூர்த்தையைத் தரிசிக்க வேண்டுமானால் தடுப்பவர் யார்? புண்ணியந் தேடப் புத்திரன் தொடங்கினால் தந்தை தடை செய்வானோ? நானே கற்பிக்கவேண்டிய நல்விஷயத்தை நீயே தெரிந்து செய்யத் தொடங்குவது நான் பூர்வஞ்செய்த புண்ணியமல்லவோ? 'பிள்ளை தேடும் புண்ணியம் பிதாவுக்கும் உண்டு' என்று பெரியோர் சொல்வது பிழைபடாதென்பதை நானறியனோ? நெல் முதலான பயிர்க்கு நீர்விடுவோரையும், குருடர்க்குக் கோல் கொடுப்போரையும், இரவில் வந்தவர்க்கு இடங் கொடுப்போரையும், அஞ்சி வந்தடுத்தவர்க்கு அபயம் கொடுப்போரையும், தாகங் கொண்டோர்க்குத் தண்¬ர் கொடுப்போரையும், பசிகொண்டு பரிதபிப்போர்க்கு அன்னங் கொடுப்போரையும், சேற்றில் விழுந்து திகைக்கின்றோர்க்குக் கைகொடுப்போரையும், ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டோரைக் கரையேற்றுவோரையும், சத்திரங்கட்டித் தருமஞ் செய்வோரையும் தடுத்தாலும், குருதரிசனம் சிவஞானிதரிசனம் சிவதரிசனம் செய்வோரை ஒருகாலுந் தடுக்கப்படாது; ஆதலால் புத்திரனே உனக்குவேண்டிய சிறப்புக்களுடன் சுகமாய்ப்போய் ஆண்டவனைத் தரிசனஞ் செய்து சிவஞானமும் தீர்க்காயுளும் பெற்று வருவாய்" என்று கட்டளையிட்டார்.
-
நித்திய கரும விதி
பெண்களுடன் தேகசம்பந்தம் செய்ய வேண்டில், முன் ஒரு நாழிகை பரியந்தம் மனத்தைத் தேகசம்பந்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் - என்றால், வேறுபடாமல் - மன முதலிய கரண சுதந்தரத்தோடு, தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேகசம்பந்தம் செய்தல் வேண்டும். புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும். அவ்வுபாயமாவது பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே யுலாவச் செய்து கொள்ளுதலாம். ஒரு முறையன்றியதன் மேலுஞ் செய்யப்படாது. தேகசம்பந்தஞ் செய்த பின், தேகசுத்தி செய்து திருநீறணிந்து சிவத்தியானஞ் செய்து பின்பு படுக்க வேண்டும். எந்தக் காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடதுகைப் பக்கமாகவே படுத்தல் வேண்டும்.13 பின்பு ஏழரை அல்லது பத்து நாழிகையளவு நித்திரை செய்தல் வேண்டும்.14 அதன் பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்திப்புடனிருத்தல் வேண்டும். இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற் கொருவிசை செய்தல் அதம பக்ஷம். 8 தினத்திற் கொருவிசை செய்தல் மத்திம பக்ஷம். 15 தினத்திற்கொருவிசை செய்தல் உத்தம் பக்ஷம். அதன் மேற்படில் சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும். 4 தினத்திற்கொரு விசை செய்யில் சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும், ஆதலில், அதம பக்ஷமாயிற்று. இரவில் சொப்பனம் வாராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும்.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 051. தனித் திருத்தொடை taṉit tiruttoṭai
10. சத்திவேல் கரத்தநின் சரணம் போற்றிமெய்ப்
சத்திவேல் கரத்தநின் சரணம் போற்றிமெய்ப்
பத்தியோ டருச்சனை பயிலும் பண்பினால்
முத்திசார் குவர்என மொழிதல் கேட்டுநல்
புத்தியோ டுன்பதம் புகழ்வர் புண்ணியர்.
-
மனு முறைகண்ட வாசகம்
அவ்வீதியிலுள்ள வாலிபர் வார்த்திபர் முதலான புருஷ ஜனங்களெல்லாங் கண்டு, "ஆ! ஆ!! இந்தப் புத்திரனே இராஜ புத்திரன்; இவனுக்குமுன் மற்ற இராஜ புத்திரரெல்லாம் இராக்ஷச புத்திரரே" என்றும், "இவன் வடிவே வடிவு; இவன் வடிவுக்குமுன் மற்றவர் வடிவெல்லாம் மர வடிவே" என்றும், "இவன் கற்ற வித்தையே வித்தை; இவனுக்கு முன் மற்றவர் கற்ற வித்தையெல்லாம் மாயவித்தையே" என்றும், "இவன் குணமே குணம்; இவனுக்குமுன் மற்றவர் குணமெல்லாம் வில்லின் குணமே" என்றும், "இவனே இளவரசு; இவனுக்கு முன் மற்ற இளவரசெல்லாம் பூவரசே" என்றும், "இவனே சீமான்; இவனுக்குமுன் மற்றச் சீமான்களெல்லாங் கலைமான்களே" என்றும், "இவன் வீரமே வீரம்; இவன் வீரத்துக்குமுன் மற்றவர் வீர மெல்லாம் சவ்வீரமே" என்றும், "இவன் யௌவனமே யௌவனம்; இவன் யௌவனத்துக்கு முடன மற்றவர் யௌவனமெல்லாம் வெவ்வனமே" என்றும், "இவன் பாக்கியமே பாக்கியம்; மற்றவர் பாக்கியமெல்லாம் நிர்ப்பாக்கியமே" என்றும், "இவனைப் பெற்றவரே பெற்றவர்; மற்றவரெல்லாம் பெண் பெற்றவரே" என்றும், இந்தக் குணரத்தினமான புதல்வனைப் பெறுதற்கு நமது மகாராஜனும் அவரது மனைவியாரும் என்ன நோன்பு நோற்றாரோ" என்றும், "வெற்றியையுடைய வீரசிங்கம்போன்ற இந்தப் புத்திரனது திருமுகமண்டலத்தில் சாந்தந் ததும்புகின்றதே" என்றும், "இவனது வடிவில் அழகு ஒழுகுகின்றதே" என்றும், "நெடுநாளாகக் கண்டுகளிக்க வேண்டுமென்று எண்ணி எதிர்பார்த்திருந்த நமக்கு இன்று தியாகராஜப் பெருமான் திருவருளல்லவோ இந்த இராஜ புத்திரனை இவ் வீதியில் வரும்படி செய்தது? இனி அவ்வருளுக்கு என்ன கைம்மாறு செய்வோம்" என்றும், "இந்தப் புத்திரன் தியாகேசப்பெருமான் வரத்தினால் தோன்றினான் என்பதை இவனது அற்புதமான வடிவமே காட்டுகின்றதே என்றும், "நமதரசனுக்குச் சந்ததி யில்லாமையால் பிற்காலத்தில் உலகம் என்ன பாடுபடுமோ என்று எண்ணி இளைத்திருந்த நமது துன்பத்தையெல்லாம் நீக்கி இன்பத்தைக் கொடுத்த இப்புத்திரனுக்கு நாம் செய்யும் உபகாரம் ஒன்றுமில்லையே" என்றும், மனுச்சோழ மகாராஜனைப்போல நம்மையெல்லாம் பாதுகாத்து வருவானென்பதற்கு வேறே அடையாளம் வேண்டுமோ? இவனிடத்திற் கருணை துளும்புகின்ற கடைக்கண்களே காட்டுகின்றன" என்றும் பலவிதமாகத் தனித்தனி சொல்லிக் கொண்டு சூழ்ந்து நின்றார்கள்.
-
உபதேசக் குறிப்புகள்
12. ஆண்பெண் - பெண்ணாண்
ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் இருக்கும்விதம் எவ்வாறெனில்:- பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், பிரகிருதி, ஆன்மா வென்னும் 7-ம் கூடி., சுக்கில சுரோணித சம்பந்த சப்த தாதுவாய், சிருஷ்டிக்குக் காரணமாயின. ஆதலால் ஆண்பாகம் சேராது பெண்ணுருவப்படாது. பெண்பாகஞ் சேராது ஆணுருவப் படாது. மேலும் ரூப பேதத்தைப் பெண் ஆண் என்பது அறியாமை. மேலும் அறிவினுயர்ச்சி தாழ்ச்சியாலும், சிருஷ்டிக்குக் காரணமான வித்து தங்குவதற்கு க்ஷேத்திரமானதாலும் ஒருவாறு உருவத்தால் கொள்ளலாம்; அனுபவத்தால் கொள்ளப்படாது. அறிவினுயர்ச்சி தாழ்ச்சியென்பது ஜீவஅறிவாகிய மனஅறிவு பெண்ணிடத்தும் ஆன்ம அறிவாகிய அறிவு ஆணிடத்தும் உள்ளது. மேலும் மன அறிவு புத்தி அறிவு என்று சொல்லக்கூடும். மேலும் ஆகாசத்தில் பிருதிவி தோன்றுவது போல் ஸ்திரீ பாகமாகிய பிருதிவியில் ஆகாசமுந் தோன்றும். ஆனதால் அனுபவத்தில் தெரியும்.
ஆண்பெண் பெண்ணான்
ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணுமென்பது எவ்வாறென்றால் :- பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், பிரகிரதி, ஆன்மா என்னும் 7-ம் கூடிச் சுக்கில சுரோணிதமாய் ஸப்ததாதுவாகி, சிருஷ்டிக்குக் காரணமாயிருப்பன வாதலால், ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணுமிருப்ப துண்மை. ரூப பேதத்தால் பெண் ஆண் என்பது பொய். பெண் ஆண் என்னும் நாம பேதம் வருவானேன்? அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியால் என்க. ஆன்ம அறிவு ஆண், ஜீவ அறிவு பெண். ஆன்ம அறிவென்பதும் ஜீவ அறிவென்பதும் புத்தி அறிவும் மனஅறிவுமாம். பிரத்தியக்ஷானுபவம் யாதெனில்:- புருஷபாகம் 3-ல் ஆகாசத்தில் பிருதிவியும், பெண்பாகம் 4-ல் பிருதிவியினிடத்தில் ஆகாசமும் தோன்றி அடங்குவது போல், பெண் ஆணாகவும் ஆண் பெண்ணாகவும் நியாயம் உண்டாயிற்று.
-
மனு முறைகண்ட வாசகம்
உடனே அந்தப் பசுங்கன்று தனது தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டதைக் கேட்ட வீதிவிடங்கன் இடியோசை கேட்ட நாகம் போலத் திடுக்கிட்டு, நடுநடுங்கித் தேரிலிருந்து கீழே விழுந்து, எண்ணப்படாத துன்பத்தோடும், பயத்தோடும் எழுந்துபோய் அப் பசுங்கன்று இறந்து கிடப்பதைக் கண்டு, மதிமயங்கி மனம் பதைத்துக் கையுங்காலும் நடுக்கெடுத்துப் பெருமூச்சுவிட்டு உடம்பு வியர்த்துச் சோபமடைந்து விழுந்து, சிறிதே தெளின் தெழுந்து கண்களிலே நீர் ஆறாகப் பெருக நின்று, "சிவசிவா! சிவசிவா!! சங்கரா! சங்கரா!! சம்புவே! சம்புவே!! மஹாதேவா! மஹாதேவா!! தியாகராஜப்பிரபு! தியாகராஜப்பிரபு!! தேவரீ€த் தரிசிக்கவேண்டு மென்று வந்த அடியேனுக்கு இப்படிப் பட்ட இடரும் வரலாமா? நன்றறியாத பாவி இவன் நம்மைத் தரிசிக்கத் தக்கவனல்ல னென்று திருவுளங் கொண்டு தானோ என்னை இந்தப் பழிக்கு ஆளாக்கியது? தேவரீரைத் தரிசனஞ் செய்ய எண்ணி வந்த அடியேன் கால்வருந்த நடந்து பயபக்தியுடனே வந்து தரிசிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல், செல்வச் செருக்கினால் தேரிலேறிக் கொண்டு ஆடம்பரங்களுடன் பக்தியில்லாது பகல்வேஷக்காரன் போல டம்பவேஷங் காட்டி வந்த அன்பில்லாத பாவியாகிய என் பிழையைக் குறித்து நோவதல்லது, எம்பெருமானிடத்திற் குறை சொல்லத் தகுமோ? இப்படிப்பட்ட பெரும்பாதகம் செய்யத்தானோ பிள்ளையாகப் பிறந்தேன்? விரிந்த பாற்கடலில் விஷம் பிறந்ததுபோல் மறைநெறி தவறாத மனுவின் வமிசத்தில் எதிரற்ற பாவியாகிய நான் ஏன் பிறந்தேன்? பழிபாவங்களைக் கனவிலும் கண்டறியாத மனுச்சோழராகிய என் பிதாவுக்குப் பெரும்பழியைச் சுமத்தத்தானோ பிறந்தேன்? சிவபெருமானைத் தரிசித்துச் சீர்பெறலாமென்று எண்ணி வந்த எனக்குச் சிவதரிசனங் கிடையாது தீராப்பழி கிடைத்ததே! ஓகோ! 'எண்ணம் பொய்யாகும் ஏளிதம் மெய்யாகும்' என்ற வார்த்தை என்னிடத்திலே இன்று அனுபவப்பட்டதே! ஐயோ! நான் கற்ற கல்வி யெல்லாம் கதையாய் முடிந்ததே; நான் கேட்ட கேள்வியெல்லாம் கேடாய் முடிந்ததே; நான் அறிந்த அறிவெல்லாம் அவலமாய் விட்டதே; நான் தெளிந்த தெளிவெல்லாம் தீங்காய் விட்டதே! அரஹரா! இப்படிப்பட்ட தீங்கு வருமென்று அறிந்தால் தேரிலேறேனே, பசுவைக் கொலை செய்வதே பாவங்களி லெல்லாம் பெரும் பாவம், அதைப் பார்க்கிலும் பசுங்கன்னைக் கொலைசெய்வது பஞ்சமா பாதகத்தினும் பதின்மடங்கு அதிகம் என்று பெரியோர் சொல்லக் கேட்டறிந்திருக்கிற நான் இன்று அந்தப் பாதகத்துக்கு ஆளாகியும் உயிரை விடாமல் உடலைச் சுமந்திருக்கின்றேனே; இளங்கன்று எதிரே வரவும் அதைப்பாராமல் அதன்மேற் தேரை நடத்தியது செல்வச் செருக்கல்லவோ என்று உலகத்தார் பழிக்கும் பழிக்கத்தான் உடம்பெடுத்தேன்; நான் புத்தி பூர்வமாக எள்ளளவாயினும் அறிந்திருப்பேனானால் இப்படிப்பட்ட அபாயம் நேரிடவொட்டேன்; என்ன செய்வேன்! என்ன செய்வேன்!! மனுச்சோழர் காலத்தில் அவர் புத்திரன் ஒரு பசுங்கன்னைக் கொன்றான் என்னும் பழிமொழியை உலகத்தில் நிலைபெற நாட்டினேனே! நீதி தவறாது உலகத்தை யெல்லாம் ஆளுகின்ற மனுச்சக்கரவர்த்தி யென்னும் மகாராஜனுக்குப் பிள்ளையாகப் பிறக்கும்படி இருந்த நல்வினை இப்போது பேயாகப் பிறப்பதற்குத் தக்க தீவினையாய் விட்டதே! இந்தப் பிறப்பிலே இப் பழியை ஏற்றுக் கொள்வதற்கு முன் பிறப்பில் என்ன பாவஞ் செய்தேனோ? து‘ய்மையுள்ள சூரிய குலத்திற்கு ஆதியாகிய மனுவென்பவரும் அவர் வழிக்குப்பின் வழிவழியாகத் தோன்றிய குலோத்துங்க சோழர், திருநீற்றுச்சோழர், காவிரிகரைகண்ட சோழர், மனுநீதிச்சோழர், இராஜேந்திரசோழர், இராஜசூடாமணிச்சோழர், இராஜராஜசோழர், உறையூர்ச்சோழர், மண்ணளந்தசோழர், கங்கைகொண்ட சோழர், தேவர்சிறைமீட்ட சோழர், மரபுநிலைகண்ட சோழர், எமனைவென்ற சோழர், சுந்தரச்சோழர், மெய்ந்நெறிச் சோழர் முதலான என் மூதாதைகளான முன்னோர்களெல்லாம் தீமையைச் சேராது செங்கோல்நடத்தி அடைந்த கீர்த்தி இக்காலத்தில் எடுக்கப்படாத பழியைச்சுமந்த என்னால் மறைந்து போகும்படி நேரிட்டதே! ஐயோ! இதை எண்ணும்போது, நான் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பானேனே! மரபழிக்கவந்த வச்சிராயுதமானேனே! கன்றுக்குப் பாலு‘ட்டாதவனைக் கண்டாலும் பாவமென்று சொல்லுகிற பெரியோர்கள் சேங்கன்றைத் தேர்க்காலிலிட்ட என்னைக் குறித்து என்ன சொல்வார்கள்? இந்தக் கன்று எங்கே பிறந்ததோ? எங்கே வளர்ந்ததோ? எங்கே போக எண்ணியதோ? இங்கே வந்து இறக்க நேரிட்டதே! சுந்தரமுள்ள இக் கன்று இறந்ததைக் கண்ட எனக்கே இவ்வளவு துக்கமுண்டாயிருக்கின்றதே! இதை ஈன்ற தாய்ப்பசு கண்டால் என்ன பாடு படுமோ? இச் செய்தியை என் பிதாவானவர் கேட்பாரானால் ஏதாய் முடியுமோ? வார்த்தைமாத்திரத்திலே பழியென்று சரசஞ் செய்கின்றவர்களையுந் தண்டிக்கின்ற தந்தையார் திருமுகத்தில் தகுதியல்லாத பழியைச் சுமந்து தண்டனைக்காளாகிய நான் எவ்வாறு விழிப்பேன்? இனி இவ்வுலகில் பழிக்காளாகி உண்டுடுத்து உலாவி உயிர் வைத்திருக்க மாட்டோன்; இன்றே என்னுயிரை இழந்துவிடுகிறேன்!" என்று பலவிதமாகப் பரிதபித்து, துக்க சமுத்திரத்தில் அழுந்திக் கரை காணாதவனாகி நின்றபோது, உடன் சூழ்ந்துவந்த அந்தணர் அமைச்சர் முதலானோர் ராஜகுமாரனைப் பார்த்துத் தாமும் விசனமடைந்தவர்களாய், "ஓ விவேகமுள்ள வீதிவிடங்கனே! நீர் என்ன கெடுதி நேரிட்டதென்று இப்படிப் பிரலாபிக்கின்றீர்? அந்தப் பசுவின் கன்றை நீர் கொல்லவேண்டு மென்று கொன்றீரோ? அல்லது அந்தக் கன்று தேர்க்காலில் அகப்படுவதை அறிந்தும் அஜாக்கிரதையாயிருந்தீரோ? அக்கன்று ஓடிவந்ததைச் சூழ்ந்திருந்த நாங்கள் ஒருவரும் அறியோமே; நீர் எப்படி அறிவீர்? அது கர்மவசத்தாலே எல்லார் கண்களிலும் மண்களைத் துவி வலிய வந்த மடிந்ததே; அதற்கு நீர் என்ன செய்வீர்? மிருக ஜாதிகளிலே உயர்வுள்ள பசுவின் கன்று இறக்கநேரிட்டதே யென்று எண்ணி யெண்ணிச் சோர்ந்து போகின்றீர். ஆனால் அதற்கென்ன செய்வோம்? பொன்கத்தி என்று கழுத்தரிந்து கொள்ளலாமோ? இதனால் நமக்குப் பழி பாவம் ஒன்றுமில்லை; ஆயினும் இதுபற்றி உமது மனது ஆலைபாய்ந்து அவலங் கொள்ளுகின்றபடியால், வேதத்தில் விதித்திருக்கின்ற பிராயச்சித்தங்களுள் இதற்குத் தக்கது எதுவோ அதைக் கேட்டறிந்து செய்து கொள்ளலாம்; நீர் சித்தங் கலங்காமல் தேரிலேறும்" என்று சொன்னார்கள்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 052. பொதுநடம் potunaṭam
16. சத்திய பதியே சத்திய நிதியே
சத்திய பதியே சத்திய நிதியே
சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே
நித்திய வாழ்வருள் நெறியே
சித்திஇன் புருவே சித்தியின் கருவே
சித்தியிற் சித்தியே எனது
புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
-
சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்
அகண்ட பூரணானந்தராகிய அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே! ஜீவனை ஆதரிப்பிக்கும் பூதப் பிருதிவித் தோற்றமும், ஜீவனை விருத்தி செய்விக்கும் பூத நீர்த் தோற்றமும், ஜீவனை விளக்கஞ் செய்விக்கும் பூதாக்கினித் தோற்றமும், ஜீவனை அதிகரிப்பிக்கும் பூத வாயுத் தோற்றமும், ஜீவனை வியாபகஞ் செய்விக்கும் பூத வெளித் தோற்றமும், உபப்பிருதிவி உபநீர் உபாக்கினி உபவாயு முதலிய தோற்றங்களும், அவைகள் இருக்கும் இடங்களும், தொழிலிடம் முதலிய இடங்களும், ஒலி அறிவு, உருவ அறிவு, சுவை அறிவு, நாற்ற அறிவு, பரிச அறிவு, என்னும் ஐவகைக் குணஅறிவுகளும், அவைகள் இருத்தற்குரிய செவி கண் நாக்கு மூக்கு மெய் என்னும் உள்ளிடப் பொறிகளும், அவைகள் உத்தியோகித்தற்குரிய வெளியிடப் பொறிகளும், வசனித்தறிதல் நடந்தறிதல் கொடுத்தெடுத் தறிதல் மலம் விடுத்தறிதல் சலம் விடுத்தறிதல் என்னும் ஐவகைத் தொழிலறிவுகளும், அவைகள் இருத்தற்குரிய வாக்கு பாதம் கை நீர்வாயில் அபானவாயில் என்னும் கரும உள்ளிடப் பொறிகளும், அவைகள் தொழிற்படற் குரிய கருமப் புறவிடப்பொறிகளும், நினைத்தல் விசாரித்தல் நிச்சயித்தல் அகங்கரித்தல் என்னும் சூக்குமக் கரணத் தொழில்களும், அவைகளை இயற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் சூக்கும கரணங்களும், அவைகளை இயற்றுவிக்கும் அதிசூக்கும கரணங்களும் அக்கரணங்களின் உபகரணங்களாகிப் பலபல பேதப்பட்டு விரிந்த சத்துவம், ராஜசம், தாமச முதலிய குணங்களும், பருவஞ்செய்தல் தகுதிசெய்தல் இச்சைசெய்தல் தெரிவுசெய்தல் அதிகாராஞ்செய்தல் காரணஞ்செய்தல் காரியஞ்செய்தல் முதலிய இடைப்பாட்டுத் தொழில்களும், அவைகளை இயற்றும்பொழுது இயையு இச்சை அறிவு முதலிய கருவிகளும், அக்கருவிகளுக்குரிய இடங்களும், அவைகள் உத்தியோகித்தற்குரிய இடங்களும், துரிசு நீக்குவித்தல் சுகம் விழைவித்தல் தூய்மை செவித்தல் இன்பமடைதற்கு வழியாயிருத்தல் துணையாயிருத்தல் முதலிய பரத்துவத் தொழில்களும், அவைகளை இயற்றுதற்குரிய தத்துவங்களும், அவைகளிருத்தற்குரிய இடங்களும், பிரேரித்தற்குரிய இடங்களும், அறிதல் அறிவித்தல் அனுபவித்தல் அனுபவிப்பித்தல் முதலிய முக்கியத் தொழில்களும், அவைகளை இயற்றுகின்ற சத்தி சத்தர்களும், அவர்கள் இருத்தற்குரிய இடங்களும், அவர்கள் அதிகரித்தற்குரிய இடங்களும், வாதவிருத்தி பித்தவிருத்தி சிலேட்டும விருத்திகளும், அவைகள் இருக்குமிடங்களும், உத்தியேகிக்குமிடங்களும், சூரியசத்தி சந்திரசத்தி அக்கினிசத்தி தாரகைசத்தி பிரமசத்தி மாயாசத்தி ருத்திரசத்தி முதலிய சத்திகளும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், அச்சத்திகளை நடத்தும் சத்தர்களும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், நனவு கனவு சுழுத்தி முதலிய அவத்தைகளும் அவைகள் இருத்தற்குரிய இடங்களும் இங்ஙனம் இன்னும் பற்பல அக உறுப்புகளும் அகப்புற உறுப்புகளும், மீத்தோல் புடைத்தோல் வந்தோல் மென்தோல் தோல்வகைகளும் வெண்ணரம்பு செந்நரம்பு பசுநரம்பு சிறுநரம்பு பெருநரம்பு முதலிய நரம்பின் வகைகளும், பேரென்பு சிற்றென்பு நீட்டென்பு முடக்கென்பு முதலிய என்பின் வகைகளும், நல்லிரத்தம் புல்லிரத்தம் கலவையிரத்தம் கபிலையிரத்தம் முதலிய இரத்த வகைகளும் மெல்லிறைச்சி கல்லிறைச்சி மண்ணிறைச்சி நீரிறைச்சி முதலிய இறைச்சி வகைகளும், மேல்நிலைச்சுக்கிலம் கீழ்நிலைச்சுக்கிலம் முதலிய சுக்கில வகைகளும், ஓங்காரமூளை ஆங்காரமூளை முதலிய மூளைவகைகளும், தலையமுதம் இடையமுதம் முதலிய அமுதவகைகளும், வெண்மை செம்மை பசுமை கருமை பொன்மை என்னும் வண்ண வகைகளும், வெண்மையிற்செம்மை வெண்மையிற்பசுமை வெண்மையிற்கருமை வெண்மையிற்பொன்மை, செம்மையின் வெண்மை, செம்மையிற்பசுமை செம்மையிற்கருமை செம்மையிற்பொன்மை, பசுமையின் வெண்மை பசுமையிற்பொன்மை பசுமையிற்கருமை, கருமையின்வெண்மை, கருமையிற்செம்மை கருமையிற்பசுமை கருமையிற்பொன்மை, பொன்மையின்வெண்மை பொன்மையிற் செம்மை பொன்மையிற்பசுமை பொன்மையிற்கருமை என்னும் வண்ண பேதவகைகளும், இவைகள் இவைகள் இருத்தற்குரிய இடங்களும் செயல்வகைகளும் பயன் வகைகளும் இங்ஙனம் இன்னும் பற்பல புறஉறுப்புகளும் புறப்புறஉறுப்புகளும் எனக்கு உபகரிக்கும் பொருட்டு இப்பவுதிக வடிவின்கண் ஒருங்கே உள்நின்று தோன்ற உள்நின்று தோற்றாது தோற்றவித்து தேவரீரது திருவருட் பேராற்றலை எங்ஙனம் அறிந்து எவ்வாறு கருதி என்னென்று துதிப்பேன்!
-
மனு முறைகண்ட வாசகம்
இந்தப் பிரகாரம் இராஜகுமாரன் போனபின்பு, இறந்துவிட்ட அக்கன்றை ஈன்ற தலையீற்றுப் பசுவானது தன் கன்று துள்ளிக் குதித்தோடிய வழியேபோய் அந்தக் கன்று கீழேவிழுந்து கிடப்பதைத் து‘ரத்தே கண்டவளவில் குலைகுலைந்து நடுநடுங்கி புத்திமயங்கி ஒன்றுந் தெரியாமல் சூறைக்காற்றில் அகப்பட்ட துரும்பைப்போல் சுழன்று சுழன்று ஓடிச் சமீபத்தில் வந்து உடல் சிதைந்தும் குடல் சரிந்தும் உயிர்விட்டுக் கிடப்பதைப் பார்த்துச் சோர்ந்துவிழுந்து பிரக்கினை தப்பிப் பிணம்போற் கிடந்து, பின்பு சற்றே தெளிந்தெழுந்து பெருமூச்சுவிட்டு அந்தக் கன்றைச் சுற்றிச் சுற்றிக் கோவென்று அலறியலறி அதனுடம்பை முகர்ந்து முகர்ந்து, "இதென்ன தீவினையோ; இதென்ன இந்திரசாலமோ! இதென்ன விபரீதமோ! வாலசைத்துக் கால்விசைத்து எனக்குமுன் துள்ளியோட இப்போது பார்த்தேனே! இத்தனை விரைவில் இப்படிப்பட்ட இடியிடிக்கும் என்று எள்ளளவும் அறியேனே! காவிரி முதலான தீர்த்த யாத்திலை செய்தும், சிதம்பரம் முதலான ஸ்தலயாத்திரை செய்தும், திருக்கோயில்களிலும் திருவீதிகளிலும் உள்ள புல் முதலானவைகளை வாயினாற் களைந்து திருப்பணி செய்தும், புல் மேயாமலும் நீர் குடியாமலும் நெடுநாள் விரதங்காத்தும் உன்னைப் பெறப்பட்ட பாடு தெய்வம் அறியுமே! அவ்வளவு பாட்டையும் அவலமாக்கிப் போட்டு, சேங்கன்றே! என்னைத் தெருவில் விட்டாயே! உன்னைப் பெறுகிறதற்கு நோற்ற நோன்புகளால் வந்த இளைப்பு இன்னும் ஆறவில்லையே! இதற்குள் இப்படிப்பட்ட ஆறாத பெரு நெருப்பை அடிவயிற்றில் வைத்தாயே! இந்தத் துக்கத்தை இனி எந்த விதத்தினாற் சகித்துக்கொள்ளுவேன்! 'பாவிக்கப் பாக்கியந் தக்காது' என்பதற்குச் சரியாகப் பளிங்கு போன்ற நிறமும், பால் வடிகின்ற முகமும், சிறுகித் திரண்ட திமிலும், கடைந்தெடுத்தது போன்று கால்களும் வாழைச் சுருள் போன்று வளர்ந்த வாலும், சித்திரக்கன்று போன்று சுபலக்ஷணங்களைப் பெற்ற வடிவுமுடைய நீ நிர்ப்பாக்கியமுள்ள எனக்குத் தக்காமற் போய்விட்டாயே! உன்னுடைய சுந்தரமுள்ள வடிவத்தைக் கண்டாற் காமதேனுவுங் கட்டி யணைத்து முகங்குளிர்ந்து முத்தங் கொள்ளுமே! நான் உன்னைப் பற்றியல்லவோ உயிர்தரித்து உலகத்தில் உலாவியிருந்தேன்! இன்னும் ஒருதரம் உன்னழகிய முகத்தைக்கண்டு என் மடிசுரந்து பால் சொரியக் காண்பேனோ! ஐயோ! உன்னை 'ஆயிரங் கன்றுகளிலும் அழகுள்ள கன்று' என்று கண்டோர் சொல்லக் களிப்புடன் கேட்ட என் காதுகளால் இன்று 'இளங்கன்றை இறக்க விட்டு மலட்டுப் பசுப்போல் வருந்துகின்றதே' என்று பலபேரும் பழித்துப் பேசுகின்ற வார்த்தையை எவ்வாறு கேட்பேன்? என்று எண்ணியெண்ணி இளைப்படைந்து மூர்ச்சித்து, மறுபடியுந் தெளிந்து இறந்து கிடக்கின்ற கன்றினுடம்பை உற்றுப் பார்த்த இரதத்தின் சக்கரம் ஏறுண்டு இரத்தஞ்சொரிய அழுந்திக் கிடக்கின்ற வடுவைக் கண்டு, "ஓகோ!! என் ஏழை மதியால் ஏதோ ஒரு சொற்பமான அபாயத்தால் விழுந் திறந்ததென்று எண்யி யிரங்கினேனே! இவ்வடுவைப் பார்க்கம்போது தேர்ச்சக்கரம் ஏறுண்டு உடல் சின்னப்பட்டு இறந்ததாகத் தெரியவருகின்றதே! ஆ! ஆ!! உனக்கு இப்படிப்பட்ட பெரிய அபாயம் வந்து சம்பவிக்கும்படி நானென்ன பாவஞ் செய்தேனோ! ஓ குழந்தாய்! நீ தேர்க்காலில் அகப்பட்டபோது எப்படிப் பயந்தாயோ! என்ன நினைந்தாயோ! எவ்வாறு பதைத்தாயோ! உயிர்போய் உடல் குழம்பிக் கிடக்கின்ற உன்னைப் பார்க்கப் பார்க்கப் பெற்ற வயிறு பற்றி யெரிகின்றதே!" என்று கண்¬ர் விட்டுக் கதறிக் கதறி அழுதழுது புரண்டு புரண்டு விம்மி விம்மி வெதும்பி வெதும்பிப் பெருமூச்சவிட்டு விழுந்து விழுந்து மெய்மறந்து கிடந்து, பின்பு எழுந்து "என் கன்றினைத் தேர்க்காலில் அழுத்திக் கொன்ற காருண்யமில்லாத கண்மூடியைக்கண்டால் என்னிரண்டு கொம்புக்கும் இரையாக்காது விடுவேனோ! மைந்தரைப் பெறாத மலட்டுத்தன முள்ளவர்களும் இப்படிச் செய்தத் துணிவு கொள்ளார்கள்! ஆ! இது செய்யத் துணிந்தவன் இன்னுமென்ன செய்யத் துணியான்!" என்று வெம்பியும் "துன்பஞ் செய்விக்கும் துஷ்டர்களுக்கும் கொலை செய்கின்ற கொடுந் தொழிலோர்க்கம் இடங்கொடாத இந்நகரம் இன்று வலியற்ற உயிர்களை மாய்த்து விடுகின்ற வஞ்சகர்க்கும் இடங்கொடுத்ததே! ஐயோ, இதில் அரசனில்லையோ! நீதியில்லையோ! நெறியில்€யோ! இதென்ன அநியாயமோ!" என்று முறையிட்டும், தன் கன்றையிழந்ததனால் உண்டாகிய துக்கத்தைச் சகிக்க மாட்டாததாய் வருந்தி, 'நமக்கு சென்று குறிப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளுவோம்' என்றெண்ணி அக்கன்றைப் பசுந்தழைகளால் மூடி, கண்¬ர் சொரிந்து கதறிக் கொண்டே மனுச்சக்கரவர்த்தியின் வாயிலில் வந்து, குடிகளுக்கக் குறைவு நேரிட்டால் அதை அரசனுக்கு அறிவிக்கும்படி அவ்வரண்மனை வாயிலில் கட்டியிருக்கிற ஆராய்ச்சிமணியைத் தன் கொம்பினால் மிகந்த விசையோடும், வலியோடும் அடித்தசைத்தது.
-
மனு முறைகண்ட வாசகம்
அப்படியசைத்தபோது அந்த நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம், "ஒரு காலத்திலுங் கேட்டறியாத ஆராய்ச்சிமணியினது ஓசையையின்று நு‘தனமாகக் கேட்டோம்; என்ன விபரீதமோ!" என்று ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ள, அந்த மணியிலிருந்து காதமட்டுங் கேட்கக் க¬ரென்று ஓசையுண்டானது. அவ்வோசையைச் சபா மண்டபத்தில் மந்திரி முதலானவர்கள் சூழச் சிங்காதனத்தின்மேல் வீற்றிருந்த மனுச்சக்கரவர்த்தியானவர் கேட்டு, மாதர்கள் காலிலணிந்த சிலம்போசை கேட்ட மாதவர்போலவும், அழுகுரலோசை கேட்ட அந்தணர் போலவும், சண்டையிரைச்சலைக் கேட்ட சற்சனர் போலவும், புலி முழக்கங்கேட்ட புல்வாய்போலவுந் திடுக்கிட்டு, திகைப்படைந்து சிங்காதனத்திலிருந்து பெருங்காற்றால் அடியற விழுந்த பனைமரம் போலக் கீழே விழுந்து மூர்ச்சை யடைந்து, சிறிது நேரஞ் சென்று தெளிந்தெழுந்து உடல் நடுங்கி உள்ளம் பதைத்து உயிர் சோர்ந்து நா உலர்ந்து கண்கலங்கி நடை தள்ளாடி அதிவேகமாக அரண்மனை வாசலுக்க வருமுன், வாயில் காப்பாளர் அரசனுக்கெதிரே அஞ்சி யஞ்சி வந்து அடியில் விழுந்தெழுந்து, "ஆண்டவரே! அரண்மனை வாயிலில் கட்டியிருக்கிற ஆராய்ச்சிமணியை ஒரு தலையீற்றுப் பசுவானது தன் கொம்பினால் அடித்து ஓசை யுண்டாக்கியது" என்று விண்ணப்பஞ்செய்ய, அதுகேட்டு விரைவில் வந்து, அவ்வாராய்ச்சிமணியின் அருகே உடல் மெலிந்து முகஞ்சோர்ந்து கண்¬ர் சொரிந்து கதறி நிற்கின்ற பசுவைக் கண்டு, சாவியாய்ப் போன தன் பயிரைக்கண்ட தரித்திரனைப்போல் மனம் நைந்து நைந்துருகி நொந்துநொந்து வருந்தி, "ஐயோ! சாதுவான இந்தப் பசுவுக்கு என்ன துன்பம் நேரிட்டதோ! இதன் குறையை இன்ன தென்று மதித் தறிந்துகொள்ள வல்லமை யில்லாதவனாக இருக்கின்றேனே!" என்று பதைத்துத் தம் அருகில் அச்சத்துடன் நிற்கின்ற அமைச்சர்களைப் பார்த்து 'எனக்குப் புகழும் புண்ணியமும் வரும்படி செய்விக்கின்ற உங்கள் மந்திரிச் செய்கை நன்றாக விருந்தது! உங்கள் அஜாக்கிரதையினால் அல்லவோ இந்தப் பசுவுக்கு ஏதோ வொரு குறை நேரிட்டது!" என்று கோபித்துப் பார்க்க, அது கண்டு அச்சங் கொண்ட மந்திரிகளுள் அப்பசு துயரப்படுவதற்குக் காரணம் இன்னதென்று முன்னே அறிந்தும் அரசனித்திற் சொல்வதற்க அஞ்சியிருந்த ஒரு மந்திரியானவன் 'இனி இதை நாம் மறைத்து வைத்தாலும் வேறொருவரால் வெளிப்படுமாதலால் நாமே அறிந்த மட்டில் அறிவிப்போம்' என்றெண்ணி அரசனை வணங்கித் "தலைவனே! உமது புத்திரன் இன்று ஏறிப்போன இரதத்தின் சக்கரத்தில் இளங்கன்று ஒன்று எதிரே குதித்து வந்து அகப்பட்டு இறந்துவிட்டது; அந்தக் கன்றை யீன்ற இந்தப் பசுவானது ஆற்றாந்துயர் கொண்டு ஆராய்ச்சிமணியை யசைத்தது! என்று சொன்னான்.
-
உபதேசக் குறிப்புகள்
17. பிண்டானுபவ இலக்கணம்
மனித தேகத்தில் கோசத்திற்கு இரண்டரை அங்குலத்திற்குமேல் நாற்சதுரமான ஒரு பையுண்டு. அதில் 16 வயதளவும் உண்டாகும் இந்திரியம் ஜலமாகச் சேருகின்றது. அதைத்தான் மானசதடாக மென்று சொல்லுகின்றது. 16-க்கு மேல் சேரும் இந்திரியம் உறைந்த அந்த ஜலத்திற்கு மத்தியில் சேருகிறது. அப்படியாகச் சேர்ந்து கொண்டு வரும் இந்திரியம் பொன்வர்ணமாக இருக்கும். அது தாமரைப்பூ வென்று சொல்லப்படும். அதன் மத்தியில் ஒரு ஆவி சாதாரண காற்றுக்கு நூற்றிலொரு பங்காக வெகு நேர்மையாக இருக்கும். அதன் வண்ணம் பொன்மயமாயிருக்கும். அதற்கு அதிஷ்டான தெய்வம் பிரமனென்று சொல்லப்படும். அந்த ஆவி உண்டாகுங் காலம் அவருக்குச் சகலகாலம் என்றும் அடங்குங் காலம் கேவலகாலம் என்றும் சொல்லப்படும். அந்த ஆவி உண்டாகுங் காலத்தில் செயற்கையானால் கருத்தரிக்கும். அது சிருட்டியென்று சொல்லப்படும்.
அதில் ஆவியுண்டாகத் தொப்புளிலிருந்து ஒரு நாடி தோன்றி அதன் மத்தியில் முகந்து கொண்டிருக்கிறது. அதன் மூலமாய் அக்கினியி ருக்கின்றது. அது மூலாக்கினி என்று சொல்லப்படும். அது தொப்புளிலிருந்து உண்டாவதால் விஷ்ணு தொப்புளிலிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதன் மேல் இரண்டரை அங்குலத்தில் உந்திக்கு நேராக உட்பாகத்தில் சதுரமாய் ஒரு பையுண்டு. புசித்த அன்னத்தை ஐந்து நாழிகையில் பால் போன்ற ஜலமாய் ருத்திர பாகத்திலுள்ள ஆவி பிரித்து அந்தப் பையில் சேர்க்கின்றது. அதை க்ஷீராப்தி என்று சொல்லுகிறது. அந்தப் பையிலிருக்கும் பால் போன்ற ஜலத்தின் மேல் ஆலிலை வடிவையுடைய வயிற்றி னுட்பாகம் படிவதனால் அதே வண்ணமாக ஓராடை கட்டியிருக்கும். அதை ஆலிலையென்று சொல்கின்றது. அந்த ஆடையின் மேல் ஒரு நரம்பு வட்டமாய்த் தலை தூக்கியிருக்கின்றது. அதைச் சேஷனென்று சொல்லுகின்றது. அந்தக் குண்டலி வட்ட சேஷனென்னும் நாடி மத்தியில் செம்பினது களிம்பு போன்ற பச்சை மேனியா யொரு சத்தியுண்டு. அதை விஷ்ணுவென்றும், அச்சத்தியில் முன் பின் நடுவென்னும் இடத்தில் அதன் காரணச் சத்து பொன் வண்ணமாயும் அரித்திராவண்ணமாயும் குங்கும வண்ணமாயும் மூன்று உள்ளன. அவற்றைச் சீதேவி, பூதேவி, நீளாதேவியெனச் சொல்லுகின்றது. மத்தியில் ஒரு சத்தியிருப்பதால் விஷ்ணு மார்பில் லக்ஷ்மியை வைத்தாரென்பது.
குண்டலிவட்டமான நாடி மத்தியிலுள்ள பச்சை வண்ணமான சத்தியிலிருந்து ஒரு நாடி உண்டாய் இரண்டு தலையாய் விரிந்து ஒரு தலை மேலும் ஒரு தலை கீழும் செல்லுகின்றது. இந்த நாடிகளின் மூலமாய் அந்தச் சத்து மேலே செல்லும்போது பசுமைவண்ணமாகவும் கீழ்ச் செல்லும்போது பீதவண்ணமாகவும் செல்லுகின்றது. மேலே செல்லுவதினால் ஜீவர்களுக்கு ஜீவிப்பும் அதின் சாரம் கெட்டுக் கீழே செல்வதினால் ஜீவிப்பின்மையும் உண்டாகின்றது. மேலே செல்வதில் ஜீவிப்புண்டாகுவதால் காத்தல் தொழிலை உணர்த்துகின்றது. மேலும் மேலே செல்லுகின்றதை விஷ்ணு வைகுந்தம்போகின்றா ரென்றும் கீழே செல்லுகின்றபோது க்ஷீராப்தியில் இருக்கின்றாரென்றும் சொல்லுகின்றது. கீழே செல்லும் நாடி முன் சொன்ன தொப்புள் நாடியுடன் கலப்புண்டாய் பிரமனுக்கு உஷ்ணத்தைத் தருகின்றது.
அன்றியும் இந்தச் சதுரமான பையின் வலப் பாகத்தில் ஒரு பையுண்டு. அந்தப் பையில் அக்கினி நிரம்பிக் காரணமாயிருக்கின்றது. அது புசித்த வஸ்துக்களின் சத்தைக் கிரகித்துக்கொண்டு அந்தசத்தை மலமாக இடது பாகத்தில் சேர்த்து விடுகின்றது. கிரகித்த சத்தை முன்சொன்ன க்ஷீராப்திப் பையில் சேர்க்கின்றது. இதை வடவாக்கினி என்று சொல்லுகின்றது. மேலும் இந்த வெள்ளை ஜலத்தை அக்கிரமமின்றிச் சமப்படுத்திப் பிரளயம் வாராது காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த உதராக்கினி குறைவுபட்டு க்ஷீராப்தியின் ஜலத்தின் தரங்கெடுமானால் நோயுண்டு.
இந்தப் பையாகிய ஸ்தானத்திற்குமேல் இரண்டரை அங்குலத்தில் இருதயத்தில் மலர்ந்த வாழைப்பூப்போல் ஒரு பையுண்டு. அது வெண்மையாயிருக்கும். இதைக் கைலாய மென்று சொல்லுகின்றது. இந்தப் பையுள் முன் சொன்ன காற்றில் பதினாயிரங் கோடி பங்கிலொரு பங்காக வெகு நேர்மையாய் அக்கினி மயமாய் ஒரு ஆவியிருக்கும். இதற்குக் காரணாக்கினி யென்று பெயர். இவ்வக்கினியைக் காலசந்திரருத்திரமூர்த்தி யென்பர். இப்பையின் அருகில் இடப் புறத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போல் ஒரு பையுண்டு. அந்தப் பை பசுமை வண்ணமாயிருக்கும். அதற்கும் முன் சொன்ன வெண்மைப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய்க் காரணாக்கினி அதிகப்படுத்தாமலும் குறைவுபடுத்தாமலும் சமப்படுத்தி வைக்கும். இந்த மலர்ந்த பைக்கும் கீழிருக்கும் க்ஷீராப்திப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய் அதற்கு உஷ்ணங் கொடுத்து நிலையில் வைக்கும். இதனால் ருத்திரனிடத்தில் விஷ்ணு பிறந்ததாய்ச் சொல்லுகின்றது. இந்த நாடி மூலமாக விஷ்ணு இடமாகிய ஜலத்திலும் பிரமனிடமாகிய இந்திரியத்திலும் உள்ள குற்றங்களைக் கண்டிப்பதால் ருத்திரனைச் சம்ஹார கர்த்தா வென்று சொல்வது.
இந்த அக்கினிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு. அதில் மூன்றாகப் பிரியும் கிளையுண்டு. அது மூல முதல் பிரமரந்திரம் வரையில் இடம் வலம் நடு வென்று கத்தரிமாறலாய்ப் பிராணாபானனுக்கு இடங்கொடுத்து ஊடுருவி நிற்கும். இந் நரம்புகளுக்குச் சோம சூரி யாக்கினி யென்று பெயர்.
இஃதன்றி இக் குண்டலி வட்ட நரம்பினடியில் நின்று இரண்டு நரம்பு, வலத்தில் அஞ்சு கவருடைய தலையாயும் இடத்தில் ஆறு தலையுடைய கவராயும் நிற்கின்றன. வலத்திலுள்ளது கணபதி யென்றும், இடத்திலுள்ளது சுப்பிரமணிய ரென்றும் பெயர் சொல்லுவது. மேற்படி ஐந்து கவருடைய நரம்பிற்கு அடியில் தலையெடுப்பான நரம்பு கீழ் நோக்கி கிருஷ்ணவர்ணமா யிருக்கும். இந்த நரம்பு இடைவிடாது அசைந்துகொண்டிருக்கும். இந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் இதற்குக் கணபதியென்று பெயர். மேற்படி ஐந்து கவருடைய நாடிக்கு இடம் வலம் இரண்டிலும் சித்திதத்துவம் புத்திதத்துவம் உண்டு. இடத்திலுள்ள ஆறு கவருடைய நாடிக்குக் கீழ் அனந்த வண்ணமான நாடி ஒன்றுண்டு. இதற்கு மயூரமென்று பெயர். இந்த நாடியின் அசைவால் எழுபத்தீராயிரம் (72,000) நாடியும் அக்கிரமமின்றி நிலைபெறுகின்ற படியால், இதற்குச் சேனாதிபதி யென்றும் பெயர். மேலும் வலது புறத்து நாடிக்கு அறுபத்திரண்டு மாத்திரையும் இடதுபுறத்து நாடிக்கு நாற்பது மாத்திரையும் அளவு வித்தியாசமிருப்பதால், இவர்களைச் சோதரர்களாகச் சொல்வதுமன்றி, மேற்படி ருத்திராம்சமாகவே சொல்லுகின்றது.
இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள. மகேசுவர ஸ்தானம் முதல் விந்துஸ்தானம் வரையிலும் முன் போல் இடம் நாடி தொழில் வண்ணம் முதலியவு முள்ளன. நாதஸ்தானந்தொட்டுத் துவாதசாந்தம் வரையில் அனுபவவெளியாகிய ஆகாச பேதமயமா யிருக்கும். அதற்குமேல் அதிகாரண மாத்திரமாய் ஆன்மானுபவத்தில் விளங்கும்.
மேலும் பிரமஸ்தானந் தொடங்கிச் சுத்தசிவஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம், இருதயம் வரையில் வாயுநாடி வண்ணமாயும் அதற்கு மேல் அக்கினி வண்ணமாயும் இருக்கும். இது அடியிற் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கணுவாய், ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய், ஆன்மக்காட்சியில் அருகித் தோன்றுவதாய், இரண்டற நிற்கும். இதற்குச் சிவாகார பூரண ஸ்தம்பம் என்று பெயர்.
முன் சொன்ன இருதயாக்கினிப் பை அக்கிரமமாய் விரிந்து, விசேஷ அக்கினி ஜ்வாலை விசிரிம்பித்துக் கீழிருக்கும் க்ஷீராப்திப் பையிலிருக்கும் ஜலத்தைச் சுருட்டிக்கொள்ள, ஜீவனுக்கு மரண காலம் நேரிடும். மேற்படி பை விரிவதற்கு ஆதாரம் அருந்தல் பொருந்தல். இவை சமமானால் மிருத்தியு வராது.
-
மனு முறைகண்ட வாசகம்
"எமன் கையிலகப்பட்ட உயிர் எந்த விதத்தாலுந் திரும்பாதென்று உலகத்தார் சொல்லும் உறுதியான வார்த்தை வீண்போக, முன்னொரு காலத்தில் நமது நகரத்தில் ஓரந்தண னீன்ற சிறுவன் அகாலத்தில் மரணமடைய, அதுபற்றி அவ்வந்தணன் துயர்கொண்டு தமது சமூகத்தில் வந்து, "சிவநெறி திறம்பாமற் செங்கோல் செலுத்துகிற உமது காவலைக் கடந்து அகாலத்திலே அந்தகன் வந்து இரவும் பகலுந் தவஞ்செய்து யான் அருமையாகப் பெற்ற ஒரு பேறான புத்திரனை உயிர்கொண்டு போனானே தலைவனே! இது தகுமோ!" என்று முகமும் மனமுஞ் சோர்ந்து முறையிட்டுக் கொள்ள, அதுகேட்டு மனமுருகி நொந்து, சிவபெருமான் திருவடியன்றி மற்றொன்றிலும் மனம் வையாத தமது வல்லமையால் எமலோகத்தி லிருந்த உயிரை மீட்டுக் கொண்டு வந்து முன்னிருந்த உடலில் விட்டு, அவ்வந்தணனை மகிழ்ச்சி செய்வித்து, அன்றுதொட்டு எமனைத் தாமுள்ளவரையிலும் தமது நகரத்திலும் நாட்டிலும் வரவொட்டாமற் செய்த என் குலமுதல்வராகிய சைவச்சோழரைப்போல, அவ்வளவு பெரிதான காரியஞ் செய்யாவிட்டாலும், இப் பசுங்கன்றின் உயிரொன்றை மாத்திரமானாலும் மீட்டுக்கொடுக்க வலியற்றவனாக விருக்கின்றேனே! அவமிருத்து நேரிட்டபோது சஞ்சீவகரணி என்னுந் தெய்வத்தன்மையுள்ள மருந்தைக் கொடுத்துப் பிழைப்பிக்கச்செய்த என் குலத்தலைவர்களிற் சிலர்போல் அம்மருந்தையாயினும் பெற்றுக்கொள்ளத்தக்க தவஞ்செய்தேனோ! தமது அஜாக்கிரதையினால் பிற உயிர்க்குக் கெடுதி நேரிட்டபோது அது பொறாமல் தம்முயிரை விட்டுவிட்ட சில அரசர்களைப் போல என் அஜாக்கிரதையினால் நேரிட்ட இப் பசுங்கன்றின் முடிவைக் கேட்டறிந்த நான் உயிரையாயினும் விட்டேனோ! அன்னிய தேசத்தரசர் குற்றஞ் செய்தோலைக் கொலை செய்தாரென்று கேட்டாலும் 'குற்றம் வந்ததென்ன! கொலை செய்ததென்ன! என்று குலைநடுங்குகின்ற நல்லோர்கள் மரபில், நான் குற்றம் வரவும் கொலைசெய்யவும் அரசுசெலுத்தி, அந்த நல்லோர்கள் இயல்புக்கு நாணமுண்டாகத் தானோ வீட்டின் வாயிலில் வெள்ளெருக்குப் பூத்ததுபோலத் தோன்றினேன்!
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
24. சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.
-
மனு முறைகண்ட வாசகம்
"நாம் அரசாட்சிசெய்ய ஏற்பட்ட நாள்தொட்டு இந்நாள் வரையிலும் எவ்வுயிரும் எவ்விதத்திலும் யாதொரு குறையுமில்லாமல் வாழ்ந்து மகிழ்ந்திருக்க, நீதியுடன் முறை தவறாது செங்கோல் செலுத்தி வரும்படி சிவானுக்கிரகம் பெற்றோமே' என்பதுபற்றி ஒருநாழிகைக்கு முன் வரையிலும் உண்டாயிருந்த மனக்களிப்பையெல்லாம் மண்ணிற் கவிழ்த்தேனே! 'நாமும் பழிபாவங்களுக்கப் பயந்தே அறநெறி தவறாது அரசுசெலுத்தி வருகிறோம், பழைய தரித்திரனுக்குப் பணங்கிடைத்ததுபோல் நமக்கும் சிவானுக்கிரகத்தால் ஒரு சிறுவன் பிறந்தான், அவனும் கற்றவர் மகிழக் கல்வி கேள்விகளில் நிறைந்து பண்பும் பருவமும் உடையவனானான்; இனி நமக்கென்ன குறை' என்ற எண்ணி எண்ணி இறுமாப்படைந்தேனே! 'புத்திரப்பேறு பெற்றுப் புனிதனானோம்' என்று பூரித்திருந்தேனே! 'நமது புத்திரன் இளவரசுப் பட்டத்திற்கேற்றவனானான், இனிக்கல்யாணஞ் செய்விப்போம்' என்று கனவு கண்டிருந்தேனே! 'நமது புத்திரன் நற்குணங்களை யுடையவனாக விருக்கின்றான், பெற்றெடுத்த நமது பேர் கொண்டுவருவான்' என்று மனோராச்சியம் பண்ணி மகிழ்ந்திருந்தேனே! இளங்கன்று எதிர்வரவுங் கண்கெட்டுக் கருத்தழிந்தவன்போல் தேரை நடத்தித் தீராப்பழிபூண்டானே! ஐயோ! இவன் என் செங்கோலைப் பிடிக்கத்தக்க செல்வப்பிள்ளை யாகாமல் தென்னம்பிள்ளை யானானே!
-
மனு முறைகண்ட வாசகம்
"சிவதரிசனஞ் செய்யப் போகிறவன் தேரூர்ந்தே போகப்படாது; அவ்வாறு போயினும் நாற்புறத்திலும் நடப்போர்களை விலக்கும்படி ஆள்விலக்கிகளைவிட்டு, முன்னே பரிக்காரர் வரவு குறித்துப் போகப் பின்னே மெல்லெனத் தேரை விடவேண்டும்; அப்படிச் செய்யாமல் பாலியப்பருவம் பயமறியாது என்பதற்குச் சரியாகப் பரபரப்பாகத் தேரை நடத்திப் பசுங்கன்றைக் கொன்றான்! ஐயோ! இவன் கல்வியறிவுள்ளவனாக விருந்தும் அறிவழிந்து அரசன் பிள்ளையாகாமல் அணிற்பிள்ளை யானானே! கொடிய பாதகங்களிலெல்லாம் கொலைப் பாதகமே தலையென்று வேதமுதலாகிய கலைகளில் தானும் படித்தறிந்தான், சான்றோர் சொல்லவுங் கேட்டறிந்தான்; அப்படி யறிந்திருந்தும் அப்பாதகஞ் சேரவொட்டாமல் தன்னைக் காத்துக்கொண்டு பட்டப்பிள்ளை யாகாமல் பழிப்பிள்ளையானானே; ஐயோ! புதல்வனைப் பெற்றால் புண்ணியம் பெறலாம் என்றெண்ணிய எனக்கு மலடாயிருந்தாலும் வாழ்வுண்டென்று நினைக்கும்படி நேரிட்டதே! நான் நெடுநாளாகத் தியாகராஜப் பெருமானை வேண்டிக்கொண்டது இப்படிப்பட்ட பெரிய பழிக்காளாகிய பிள்ளையைப் பெறத்தானோ! பிள்ளையென்ன செய்யும்! பெருமான் என்ன செய்வான்! 'மாதாபிதாக்கள் செய்தது மக்களுக்கு' என்னும் பெரியோர் வார்த்தையின்படி நான் செய்த தீவினையே என் புத்திரனுக்க நேரிட்ட தென்று நினைத்து என்னை வெறுத்துக்கொள்ள வேண்டுமென்றாலும், இந்தப் பிறப்பில் என் புத்தியறிந்து ஒரு தீங்குஞ் செய்ததில்லையே! இந்தப் பிறப்பில் இல்லாவிட்டாலும் முற்பிறப்பிலே
-
மனு முறைகண்ட வாசகம்
"ஆ! நான் நீதி தவறாது அரசு செய்கின்றேன் என்பதை நினைத்தால் எனக்கே ஏளனமாக விருக்கின்றதே! சேங்கன்றைத் தெருவிற் சிதைக்கவும் ஒருமித்த என் செங்கோலை அளவுகோலென்பேனோ! அஞ்சனக்கோ லென்பேனோ! எழுதுகோ லென்பேனோ! ஏற்றக்கோ லென்பேனோ! கத்தரிக்கோ லென்பேனோ! கன்னக்கோ லென்பேனோ! குருடன்கோ லென்பேனோ! கொடுங்கோ லென்பேனோ! துடைப்பங்ககோ லென்பேனோ! வைக்கோ லென்பேனோ! அல்லது இன்று இறந்த பசுங்கன்றாகிய பிரேதத்தைப் புரட்டிச் சுடுகின்ற பிணக்கோ லென்பேனோ! என்ன கோலென்று எண்ணுவேன்! இளங்கன்றைக் கொலை செய்யவுஞ் சம்மதித்திருந்த என் ஆக்கினா சக்கரத்தைக் கிரகச்சக்கர மென்பேனோ! வருஷ சக்கர மென்பேனோ! தண்டசக்கர மென்பேனோ! அல்லது இச்சேங்கன்றைச் சிதைத்த தேர்ச்சக்கர கன்றுக்கு அபாயம் நேரிடக் காத்திருந்த என் காவலைச் சிறு பெண் காக்கின்ற தினைக்காவ லென்பேனோ! குருடன் காக்கின்ற கொல்லைக் காவலென்பேனோ! புல்லாற் செய்த புருடன் காக்கின்ற புன்செய்க் காவலென்பேனோ! வரும்படி யில்லான் காக்கின்ற வாயிற்காவ லென்பேனோ! பயிரைக்காக்க வைத்த பண்ணைக்காவ லென்பேனோ! வேலை வேண்டிக் காக்கின்ற வெறுங்காவ லென்பேனோ! அல்லது இக்கன்றை அடக்கஞ் செய்யக் காத்திருக்கின்ற அரிச்சந்திரன்காவ லென்பேனோ! என்ன காவலென்று எண்ணுவேன்! என்ன செய்வேன்! ஐயோ! இப்படிப்பட்ட பாவியாகிய என்னை மனு வென்று பேரிட்டழைப்பது காராட்டை வெள்ளாடென்றும், அமங்கள வாரத்தை மங்களவாரமென்றும், நாகப்பாம்பை நல்லபாம்பென்றும் வழங்குகின்ற வழக்கம் போன்றதல்லது உண்மையல்லவே! இனி, இப்பசுங்கன்று உயிர்பெற் றெழுந்திருப்பதற்கு உபாயம் என் புத்திரனுயிரையன்றி யென்னுயிரையும் என் மனையாளுயிரையும் என்னரசாட்சியும், எனக்கு உரித்தாகிய எல்லாப் பொருள்களையுங் கொடுத்துவிட்டால் நேரிடுமென்று சொல்வோருண்டானால், இதோ கொடுத்துவிடுகிறேன். அவ்வாறு சொல்வோரு மில்லையே! இதற்கு நேரிட்ட துக்கமும் எனக்கிதனாலுண்டாகிய துயரமும் எப்படித் தீருமோ! இப்படி யென்றறியேனே! என்ன செய்வேன்!" என்று பலவிதமாகப் பரிதபீத்திருந்தார்.
-
மனு முறைகண்ட வாசகம்
இந்தப் பிரகாரம் பரிதபித்து வருந்துகின்ற மனுச்சக்கரவர்த்தியை அருகிலிருந்த அமைச்சர்கள் நோக்கிக் கைகுவித்துத்தொழுது நின்று, "ஓ மனுநீதி தவறாத மஹாராஜனே! விதி வசத்தாலே வலிய வந்து மடிந்த இளங் கன்றைக் குறித்து நீர் துன்பப்படுவது உயிர்களிடத்து உமக்குள்ள காருண்ணியத்துக்கு இயர்பேயென்று எண்ணி இதுவரையும் எதிரொன்றுஞ் சொல்லாது சும்மா இருந்தோம்; இனிக் காரியக் கெடுதியில் வாய்மூடிக் கொண்டிருப்பது மந்திரிகளுக்கு அழகல்லவென்றபடியால், நாங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டருளவேண்டும். உமது புத்திரன் சீவகாருண்ணியமே தேகமாகக் கொண்டவன். தான் பூமியதிராது எந்தச் செந்துக்கள் எதிர்வந்து அகப்பட்டுக் கொள்ளுமோவென்று கீழ்நோக்கி அஞ்சி யஞ்சி மெல்லென நடக்கின்றபோது, வேறோர் அதிர்ச்சியினால் நடுங்கிச் சிற்றெறும்புகள் விரைவாக ஊர்ந்து போகின்றதைப் பார்த்துத் திடுக்கிட்டு, 'ஓகோ என்ன பாவம்! இந்த உயிர்களுக்க நடுக்கம் உண்டாக நடந்தோமே' என்று எண்ணி முகஞ்சோர்ந்து பிரமைகொண்டு நிற்க நாங்கடள அனேக முறை பார்த்திருக்கின்றோம். அப்படிப்பட்ட கிருபையுள்ளவன் இந்தக் கன்றை அசாக்கிரதையினால் கொன்றானென்று எண்ணுவதற்கு இடமில்லை. அன்றியும் அவருடன் சூழ்ந்து போன பிராமணர் முதலானோர்களுக்கும், தேரைக் சூழ்ந்துபோன எங்களுக்கும், தேர்க்குமுன் நடந்த ஜனங்களுக்கும், தெருவில் நின்று பார்த்திருந்த பிரஜைகளுக்கும் இலேசமுந் தெரியாதபடி அக்கன்று மாயமாகக் குதித்துவந்து மடிந்தது'; அன்றியும் தேர்க்கு முன்னே யானைவீரத் குதிரைவீரர் முதலானோர் அணியணியாக யூகம் வகுத்ததுபோல நெருங்கிப்போக, விருது பிடிப்போர், எச்சரிக்கை சொல்வோர்,கட்டியங் கூறுவோர், பட்டாங்கு படிப்போர், சோர்வு பார்ப்போர், ஆள்விலக்கவோர் முதலானவர்கள் நடக்க, இத்தனைபேரையுங் கடந்து, தேர்க்குஙச சமீபத்தில் சிங்கக்குட்டியாயிருந்தாலும் வரமாட்டாது; இதுவோ கோல்பிடித்தவனைக் கண்டால் கூப்பிடுது‘ரம் ஓடுகின்ற இயல்பையுடைய இளங்கன்று; இந்தக் கன்று அந்தக் காவலை யெல்லாங் கடந்து தேர்க்குச் சமீபத்தில் எதிரே துள்ளியோடி வந்ததென்றால், இந்திரசால மென்றுதான் எண்ணவேண்டுவதாக விருக்கின்றது! ஆதலால் அக்கன்றை அதன் விதியே இப்படிப்பட்ட ஆச்சரிய மரணஞ் செய்வித்ததன்றி உமது புத்திரன் செய்வித்ததல்ல, இந்தக் காரியம் இப்படியிருக்க, புத்திரன் கொன்றானென்று அவனை நோவதும் அவனைப் பெற்றதனாற் பழி வந்ததென்று உம்மை நீர் நோவதும், எய்தவன் இருக்க அம்மை நோவதுபோலவும் அம்பு செய்து கொடுத்த கருமானை நோவதுபோலவும் அல்லவோ இருக்கின்றது? நீர் சகல கலைகளையுங் கற்றுக் கேள்வியில் மிகுந்து, அரசர்களெல்லாம் புகழ்ந்து கொண்டாடத்தக்க தன்மையை யுடையவர்; உமக்கு இது விஷயத்தில் நாங்கள் விரித்துச் சொல்ல வேண்டுவதென்ன? இனித் துன்பப்படுவதை விட்டு, 'உயிர்க் கொலை தம்மை யறியாது நேரிட்டாலும் பிறர் செய்யக் கண்டாலும் அதற்குத்தக்க சாந்தி செய்துகொள்ள வேண்டும்' என்னம் விதிப்படி வினைவசத்தால் நேரிட்ட இந்தக் கன்றின் கொலைக்கு முன்னிலையாகவிருந்த உமது புத்திரனையும் பெரியோர்களைக் கொண்டு இதற்குத் தக்க பிராயச்சித்தத்தை யறிந்து செய்விக்க வேண்டுவதே உமக்க முறை" என்று சொன்னார்கள்.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர் வியர்வு, துடிப்பு, நகை முதலான கோபக்குறிகள் தோன்ற மந்திரிகளைப் பார்த்து, "அமைச்சர்களே! உங்கள் நியாயம் நன்றாயிருந்தது; நீங்கள் சொல்லிய நீதி உங்களுக்கே ஒப்பாகுமல்லது தருமதேவதை சம்மதிக்குமோ! கன்றையிழந்து வருந்துகின்ற இப்பசுவின் சஞ்சலத்தையாவது சாந்தப்படுத்துமோ? இப்படி நீங்கள் சொல்லியது என் முகத்தைக் குறித்தோ? என் புத்திரன் உயிருக் கிரங்கியோ? அல்லது உங்கள் ஜ“வனத்தை எண்ணியோ? எது பற்றியோ? உலகத்தையாளும் அரசன் ஆசை பற்றியாவது வெகுளி பற்றியாவது தாட்சண்ணியம் பற்றியாவது உறவு பற்றியாவது நடுநிலையாக நியாயங்கண்டு சொல்லாமல் மாறபட்டால், அதை மறுத்து, 'இது விஷயத்தில் அரசன் நம்மைக் கொல்லுவானாயினுங் கொல்லட்டும், அவனுக்கு உறுதி கூறுவதே நமக்குக் கடன்' என்று நிச்சயித்துக்கொண்டு, நியாயங்கண்டு நடுநிலையாகச் சொல்வது மதியுடைய மந்திரிகளக்குத் தருமமாக விருக்க, நீங்கள் அதை நினையாமல் இப்படிச் சொல்லியது என்ன நினைத்தோ? சந்திரசூரியர் திசைமாறினாலும், சமுத்திரந் தடை மீறினாலும், மகாமேரு நிலைகுலைந்தாலும் மனங் கலங்காது விவகாரங்களிற் பழுதுவாராது பாதுகாக்கின்ற குணத்தையுடைய நீங்கள், இன்று நீதியில்லாத சில குறும்பரசனைக் கூடி, அவ்வரசர் து‘ளியென்றால் நிர்த்து‘ளியென்றும், கரும்பு கசப்பென்றால் எட்டிக்காய்போற் கசப்பென்றும், தாயைக் கொலைசெய்வது தக்கதென்றால் வேதத்தின் முதற்காண்டத்தில் விதித்திருக்கின்ற தென்றும், வெள்ளத்திற் கல் மிதக்கமோவென்றால் ஆற்றில் அம்மி மிதக்கக் கண்டோமென்றும்ட, காக்கை வெளுப்பென்றால் நேற்றைப்பொழுதில் நிற்கக் கண்டோமென்றும், கல்லின்மேல் நெல்லு முளைக்குமென்றால் கொத்தாலாயிரங் குலையாலாயிர மென்றும், கள்ளனைப் பிடிக்கலாமோ வென்றால் பிடித்தால் பெரும் பாவசமல்லவோ வென்றும், பொய் ஆயிரமட்டுஞ் சொல்லலாமோ வென்றால் ஐயாயிரமட்டுஞ் சொல்லலாமென்று விதியிருக்கிறதென்றும், பெண்சாதியுள்ளவனுக்குப் பிள்ளை கொடுப்பது ஆரென்றால் ஐயா! பெண் கொடுத்தவனே பிள்ளை கொடுக்க வேண்டுமென்றும், ஒருவன் மனையாள் மற்றொருவனைக் கூடலாமோ வென்றால் அடக்கத்தில் ஆயிரம் பேரோடு கூடினாலுங் குற்றமில்லை யென்றும், இந்தக்கழுவில் இவனை யேற்றலாமோ வென்றால் கழுவுக்குத்தக்க கனமில்லை யென்றும், என் பிள்ளையும் எச்சரிக்கைக்காரன் பிள்ளையும் ஒருவனை யொருவன் உதாசினமாகத் திட்டினாராம் இதற்கென்ன செய்யலா மென்றால் உமது சற்புத்திரன் வாய்க்குச் சர்க்கரையிட வேண்டும் மற்றவன் வாய்க்கு மண்ணிட வேண்டுமென்றும் சொல்லுகின்ற துர்மந்திரிகளைப் போல, நியாயம் பாராது, நயிச்சிய வார்த்தைகளைச் சொன்னீர்கள்; இது காலவேற்றுமையென்றே யெண்ணுகிறேன்.
-
மனு முறைகண்ட வாசகம்
"தன்னைக் கொடுத்தாவது தருமத்தைத் தேட வேண்டுமென்னும் பெரியோர் வார்த்தையைப் பிடிப்பது சற்குணமுடையோர்க்குத் தகுதியென்றும், தாய் தந்தை யிடத்திலாயினுந் தராசுக்கோல்போலச் செப்பமாக நின்று தீர்ப்புக்கொடுக்க வேண்டுவது அரசர்க்கு அவசியம் வேண்டிய சற்கருமமென்றும் எனக்கு அடிக்கடி அறிக்கையிட்ட நீங்கள், இன்று, அதோகதியில் தள்ளிவிடத்தக்க அநியாயத் தீர்ப்பை யங்கீகரிக்கப் போதிக்கின்றீர்கள். இது உங்களிடத்து நேரிட்ட அவஸ்தை வச மென்றே யெண்ணுகிறேன். ஒருவரிடத்துத் தண்டனை விதிக்கும்போது எவ்வுயிர்களும் தன்னுயிர்போல் எண்ணுவதும், எந்தப்பொருள் எந்தப்பிரகாரமாயிருந்தாலும் அந்தப் பொருளினுண்மையை யறிந்து கொள்வதும், உருவுநோக்காது அறிவை நோக்குவதும், ஊழ்வினை நோக்காது செய்வினை நோக்குவதுமாகிய இப்படிப்பட்ட இலக்கணங்களுக்குப் பொருந்த விதிக்க வேண்டுமென்று எனக்கு அறிவித்துவந்த நீங்கள், இன்று என் புத்திரன் இரக்கமுள்ளவனென்றும், அதவன் அசாக்கிரதையினால் கொன்றதல்லவென்றும், பழவினையாற் பசுங்கன்று மடிந்ததென்றும், அதனால் அதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விக்க வேண்டுமென்றும், வாதியை மாத்திரம் வரவழைத்துக் கொண்டு நடுக் கொள்ளைக்காரன் நியாயந் தீர்த்தா னென்பது போற் சொல்லி நின்றீர்கள். ஓஹோ! அமைச்சர்களே! உங்களை, 'அந்நாளிருந்த அமைச்சர்களல்ல, இந்நாளில் என்னைக்கெடுக்க நினைத்துக்கொண்டு எங்கே யிருந்து வந்தவர்களோ!' என்று எண்ணுகின்றேன். ஐயோ! எனக்கு இப்படிப்பட்ட அநியாயத்தைக் கற்பித்தோ இம்மை மறுமை யின்பங்களை வருவிப்பீர்கள்! என்றும் மீளாத சிவகதியை யடையத் தக்க உறுதி வார்த்தைகளைப் பேசிய நீங்கள், இன்று, என்றும் மீளாத அவகதியை யடையத்தக்க இழிவுள்ள வார்த்தைகளைப் பேச எங்கே கற்றுக்கொண்டீர்களோ! ஆ! ஆ!! இந்த ஓரவஞ்சனையை உற்று நினைக்குந்தோறும் நெஞ்சந் திடுக்கிடுகின்றதே! உங்கள் சொற்படி இது காரியத்தில் உடன்பட்டேனானால் தருமமும் தவமும் சலிப்படையுமே! இக்காலத்தில் எனக்கு மேற்பட்டவர்களில்லை யென்று வழக்கழிவு செய்து வஞ்சித்துப் பேசுவேனானால், காலம் போகும் வார்த்தை நிற்குமே! மனுநு‘லில் சொல்லிய நீதியின்படி நடத்துகின்றபடியால் மனுச்சோழன் மனுச்சோழனென்று நெடுந்து‘ரம் நீண்ட பெயரைச் சுமந்தநான் இதற்குச் சம்மதித்தேனானால், எழுத்தறியாதவன் ஏட்டைச் சுமந்தது போலவும், கண்ணில்லாதவன் கண்ணாடியைச் சுமந்தது போலவும், வாசனையறியாதவன் மலரைச் சுமந்ததுபோலவும் வீணாகவே இந்தப் பெயரை எடுத்துக்கொண்டானென்று ஏழுலகத்தாரும் இகழ்ந்து பேசுவார்களே! இன்றைக்கு என் புத்திரன் செய்த இந்தக் கொடுங் கொலையாகிய பாதகத்துக்குப் பரிகாரஞ் செய்து, இலேசாக விட்டு, நாளைக்கு மற்றொருவன் இதைப் பார்க்கினுஞ் சிறிய கொலை யொன்று செய்யக் கண்டு, அவனைக் கொலை செய்விப்பேனானால், 'தருமமறியாத இவ்வரசன் தனக் கொன்று பிறர்க்கொன்று செய்கின்றான் என்று பார்த்தவர்களெல்லாம் பழித்துப் பேசுவார்களே; அல்லது 'தன் வீட்டு விளக்கென்று முத்தமிட்டால் சுடாது விடாது' என்பது போல என்புத்திரன் செய்த கொலை யென்று ஆசையால் அடக்கிக் கொள்வேனானால், அது பற்றி வரும் பழிபாவங்கள் என்னை யடையாமலிருக்குமோ? ஆதலால், இப் பசுவானது அருமையான இளங்கன்றை இழந்து வருந்துகின்றதைத் தவிர்க்க வழியில்லாதவனாகிய நானும், இந்தப் பசுவைப்போல நெடுநாளாக வருந்தி அருமையாகப் பெற்ற என் புத்திரனைப் பழிக்குப் பழியாகக் கொன்று வருத்தங் கொள்வதே தகுதி" என்று சொல்லினார்.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்ட அரசன் "மந்திரியே" நீர் பயனைத் தரும் விருக்ஷத்திலுள்ள பழத்தைப் பாராது பிஞ்சைப் பிடித்ததுபோல் பிடித்தீர். நன்றாயிருந்தது உமது வார்த்தை! அறிவின் உயர்வு தாழ்வுகளைப் பற்றிப் புண்ணிய பாவங்கள் ஏறிக் குறையுமென்றுபூர்வபாகத்திற் சொல்லிய சுருதி, உத்தரபாகத்தில் பரமேசுவரன் ஆன்மாக்கள் தோறும் விகற்பமில்லாமல் நிறைந்திருக்கின்றபடியால், மாயையின் காரியமாகி வேறுபட்ட அறிவை நோக்காமல், அப்பரமேசுவரனை நோக்கி எல்லா உயிர்களையும் சமமாக எண்ணி நடக்க வேண்டும் என்ற உத்தரபாகத்தின்படி, பிறப்பு, குணம், சாதி, தொழில் முதலான விகற்பங்களை நாடாது உயிர்க் கொலையினிடத்துச் சமானமாகத் தண்டிப்பதே தகுதி; என் புத்திரன் தேரிலேறிக் கொண்டு செல்வச் செருக்கினால் மறதி பற்றியே இப் பசுவின் கன்றைக் கொன்றான், ஆதலால் இவன் காக்கை ஏறிப் பனம்பழம் விழுந்தது போல வியாஜமானவனுமல்லன், அமுதமூட்விஷமானதுபோல் நன்மை செய்விக்கப்போய்க் கொலைக்குக் காரணமானவனுமல்லன், ஆனை மதப்பட்டு அடவி யழித்தது என்று நீர் சொல்லிய நியாயத்துக்குச் சரியாக விருக்கின்றான், ஆதலால் இவனைக் கொல்வதே முடிவு" என்று சொன்னார்.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர் "மந்திரி! நீர் சொன்னது பால்வேண்டி யழுகின்ற குழந்தைக்குப் பழத்தை எதிர்வைத்துப் பராக்குக் காட்டுவது போலிருக்கின்றது, விதிமாறாட்டமென்னுங் குற்றம் வருவதாகத் தோன்றுகின்ற தென்று சொன்னீர். அந்த மனுநு‘ல் அநித்தயமாகிய தேகத்தில் அபிமானமும் அசுத்தமாகிய பிரபஞ்சபோகத்தில் ஆசையும் வைத்த கர்மிகளுக்கே அவ்விதி கூறிய தல்லது, நித்தியமாகிய சிவத்தில் அபிமானமும் சுத்தமாகிய சிவபோகத்தி லாசையும் வைத்த என்பிதா மூதாதை முதலானவர்களுக்குக் கூறியதல்ல. உயிர்க்கொலை நேரிட்டால் உயிர்விடக் கடவரென்றே குறிப்பினாற் கூறியிருக்கின்றது. என் பிதா மூதாதைக்கு எவ்விதியோ அவ்விதியே எனக்கும் என் புத்திரனுக்கும் வேண்டத்தக்கது. ஆதலால் விதிமாறாட்ட மாகாது. இந்த நியாயத்தால் என் புத்திரனை யிழந்து விடுவதே முடிவு" என்று சொன்னார்.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 094. தனித் திருவிருத்தம் taṉit tiruviruttam
38. பொன்அ ளிக்கும்நற் புத்தியுந் தந்துநின்
பொன்அ ளிக்கும்நற் புத்தியுந் தந்துநின்
தன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே
மன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே
என்னை நான்பல கால்இங்கி யம்பலே.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்ட மற்றொரு மந்திரியானவர் மகாராஜனை வணங்கி "உலகந் தோன்றியது முதல் இது பரியந்தம் தெய்வ கடாக்ஷத்தினாலும் வல்லமையினாலும் நீதியுடன் உலகாண்ட அரசர்கள் தாங்கள் ஆளுங்காலங்களிற் பசுமுதலான மிருகவர்க்கங்களுள் ஒவ்வொன்றை அகங்காரத்தால் அடித்துக் கொன்ற அந்நியமானவர்களையும் பிராயச்சித்தஞ் செய்வித்தார்களே யல்லது, கொலை செய்வித்தவர்கள் உண்டென்று கேட்டதில்லை. அப்படியிருக்க, உமது புத்திரன் இந்தப் பசுவின் கன்றைக் கொல்லவேண்டுமென்று கறுவுகொண்டு கொன்றவனல்லன். நீரெப்படி அவனைக் கொலைசெய்யும்படி தீர்ப்பிடலாம்? அவ்வாறு தீர்ப்பிட்டால் முன்னோர் செய்கைக்கு முரணான தென்னுங் குற்ற முண்டாகுமே?" என்றார். அதுகேட்டு மனுச்சோழரானவர் "மந்திரி! நீர் மரபறியாதவன் மணம் பேச வந்ததுபோற் பேசவந்தீர். முன்னோர் செய்கைக்கு முரணான தென்னுங் குற்றம் வருமே யென்றீர். ஆனால் நான் சொல்வதை நன்றாகக் கேளும். பூர்வம் என் முன்னோர்கள் ஆளுங் காலங்களில் இப்படிப்பட்ட கொலை நேர்ந்ததேயில்லை. ஏகதேசங்களில் ஒவ்வொரு கொலைப்பாதகம் நேரிட்டபோது தம்முயிரையுங் கொடுத்துப் பழிக்கு ஈடுகட்டி யிருக்கின்றார்கள். அவர்கள் நிற்க, மற்ற அரசர்களோ வென்றால் தாங்கள் ஆளுங் காலங்களில் தேசாசார முதலான கற்பனைகளைப்பற்றி நு‘தன நு‘தனமாக நியாயங்களை யேற்படுத்திக்கொண்டு அவைகளின்படி நடத்தினார்கள். அவ்வரசர்கள் என்னொடு சேர்க்கப்பட்டவர்களல்லர். ஆதலால் என் தீர்ப்பின்படி நடத்துவதே துணிவு" என்றார்.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்டு மற்ற மந்திரிகளெல்லாம் சேர்ந்து வணங்கி நின்று, "மஹாராஜனே! கூறியதே கூறுகின்றார்களென்று கோபஞ் செய்யாமல் யாங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டருள்வீராக; இந்தப் பசுவோ ஐயறிவுள்ள மிருகவர்க்கத்துள் ஒன்று; இது பெற்ற கற்றோ பால் கொடுத்தற்குரிய பசுவாகத்தக்கதன்று. ஏருழுதற்குரிய எருதாகத்தக்க சேங்கன்று; உமது புத்திரனோ ஆறறிவுள்ள ஆண்மக்களிற் சிறந்த நல்லறிவுடையவன்; அவனோ அக்கன்றைக் கொல்ல வேண்டுமென்று கொன்றவனல்லன்; இக்கொலையோ கன்றினுடைய ஊழ்வினையென்று உலகமெல்லாஞ் சொல்லும்; ஆதலால் இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதேமுறை" என்று சொன்னார்கள்.
-
மனு முறைகண்ட வாசகம்
"இதன் கன்றோ பால்கொடுத்தற்குரிய பசுவாவதில்லை, ஏருழுதற்குரிய எருதாகத் தக்க சேங்கன்று' என்று சொன்னீர்க தேவர்களெல்லாம் பிறப்பதற்குத் தவஞ் செய்கின்ற மகத்துவ முள்ள இந்தத் திருவாரூரிலே பிறந்த எல்லா உயிர்களும் சிவகணங்க ளென்கிற சித்தாந்தப்படி, இந்த க்ஷேத்திரத்திலே பிறந்த இக்கன்றைச் சிவகணமென்று கொள்வதை விட்டு, சேங்கன்றென்று சொல்லப்படுமோ? 'புத்திரனோ ஆறறிவுள்ள ஆண் மக்களிற் சிறந்த நல்லறிவுள்ளவன்' என்றீர்க சிவதரிசனஞ் செய்யத் தேரூர்ந்து போய்ச் செல்வ மறைப்பினாற் கண்மறைந்து கன்றைக் கொன்றவன் நல்லறிவுள்ளவனென்று சொல்லப் படுவனோ? கன்றிறந்ததை ஊழ்வினையென்று உலகஞ் சொல்லு மென்றீர்கள்; பிராரத்துவ வாதிகளுக்கல்லாமல், காமக் குரோதாதிகளாற் பாவங்களைச் செய்வதற்குச் சீவனே ஆகாமிய கர்த்தாவென்று கொள்ளுகிற உத்தமமார்க்கத்தை யுடையோர்க்கு ஊழ்வினை யென்று சொல்லத் தகுமோ? 'இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதே முறை' யென்றீர்கள்; மலையை யெடுத்துண்டு வயிறு நோகின்றவனுக்குச் சுக்கிடித்துக் கொடுத்துச் சொஸ்தப் படுத்துவார்களோ? அதுபோலக் கொலைப்பாதகஞ் செய்தோர்க்குப் பிராயச்சித்தஞ் செய்வித்துப் பாவநிவர்த்தி செய்யப்படுமோ? அவ்வாறு செய்வேனானால் என்றும் மீளா நரகத்தில் என் புத்திரனை விழுத்துவதுமன்றி, யானும் விழுந்து வருந்துவேன்; இவ்வுலகத்தினும் மீளாத பழிக்கு ஆளாகச் சமைவேன்; அன்றியும் எண்ணிறந்த பெருமை பெற்ற இரவி குலத்திற்கம் என்னை யடுத்திருக்கின்ற உங்களுக்கும் ஓரிழுக்கு வார்த்தையும் உண்டாகும். ஆதலால், இனி என் சொல்லுக்கிரண்டில்லை; இந்தப் பசுவின் கன்றைக் கொன்ற பழிக்கு ஈடாக என் புத்திரனைக் கொலை செய்வதே நிச்சயமாகிய தீர்ப்பு" என்று சொல்லிவிட்டு, பின்பு மந்திரிகளுக்குள் கலாவல்லபன் என்கிற மந்திரியைப் பார்த்து "மந்திரி! என் புத்திரனை யழைத்துப்போய் அந்தக் கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கடத்தி, நீ தேரிலேறிக் கொண்டு அவனுடம்பின்மேற் தேர்ச்சக்கர மேறும்படி செய்து கொலை செய்து வருவாய்" என்று கட்டளையிட்டார். அப்போது மற்ற மந்திரிகளெல்லாம் கைநெரித்துக் கொண்டு கண்களிலே நீரரும்ப மனங்கலங்கிப் பிரமைகொண்டு நின்றார்கள்.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது - அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது - அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன - மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது - சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன - வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன - கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது - காது கும்மென்று செவிடுபடுகின்றது - நா உலர்ந்து வறளுகின்றது - நாசி குழைந்து அழல்கின்றது - தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது - கை கால் சோர்ந்து துவளுகின்றன - வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது - பற்கள் தளருகின்றன - மலசலவழி வெதும்புகின்றது - மேனி கருகுகின்றது - ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன - நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது - மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது - ஈரல் கரைகின்றது - இரத்தமும் சலமும் சுவறுகின்றன - மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்றெரிகின்றது - தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன - உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்ட அரசன் அளிந்த புண்ணில் அம்பு பட்டதுபோல் துடிதுடித்து மிகவும் மனங் கலங்கி "ஓஹோ இதென்ன பாவம்! இதென்ன பாவம்! ஐயோ! கலாவல்லபனென்கிற மந்திரியானவன் நானிட்ட ஏவலைச் செய்வதற்குச் சம்மதித்தவன்போல் சென்றது 'நம் அரசனுக்குக் கன்றைப்பற்றி வந்த பழி மாத்திரம் போதாது, நாமும் பழி சுமத்துவோம்' என நினைத்துத்தானோ! எனக்கு நேரிட்ட இடரை யறிந்தும் எரியுங் கொள்ளியை யேறத்தள்ளுவது போலவும், நீண்டெரியும் நெருப்பில் நெய்விடுவது போலவும், அவ்விடருக்குமே லிடருண்டாகும்படி செய்தானே! கப்பல் உடைந்து கலங்கும்போது மந்திரி பழியும் வளைத்துக் கொண்டதே! எனக்கு வந்த துன்பமெல்லாந் தனக்கு வந்ததாக வெண்ணி, என்னை இரவும் பகலும் காத்திருந்த மதியுள்ள மந்திரியை யினி எக்காலத்திற் காண்பேன்! இதைக் கேட்டவர்களெல்லாம் 'இதென்ன கொடுமையோ! கொள்ளை கொண்டவனை விட்டுக் குறுக்கே வந்தவன்மேற் குற்றம் நாட்டியதுபோலவும், கொண்ட மனையாளிருக்கக் கூலிவாங்க வந்தவளைத் தாலிவாங்கச் சொன்னது போலவும், பசுங்கன்றைக் கொன்ற தன் புதல்வனிருக்கவும், அவனைவிட்டு அப்பழியை அமைச்சன்மேல் வைத்து அவனுயிரை வாங்கச் சொன்ன இவ்வரசன் அநியாயக்காரன்' என்று இகழ்ச்சி செய்வார்களே! அறிவில்லாதவன் செய்த காரியம் பயன்படாதது மாத்திரமோ? பழியும் பாவமும் கொடுக்குமென்ற பெரியோர் வார்த்தைக்கு இலக்காயினேன்! ஐயோ! நான் என்ன காரியஞ் செய்தேன்! என்ன காரியஞ் செய்தேன்!" என்றும், 'திருவாரூர்ப் பூங்கோயிலினிடத்தெழுந்தருளிய தெய்வமே! அடுத்தவர்களுக்கு அருள்செய்கின்ற ஆண்டவனே! உன்னை நம்பியிருக்கின்ற அடியேனை இப்படிப்பட்ட சோதனையுஞ் செய்யலாமோ! உன் திருவடிகளுக்கு ஆளாகியிருக்கிற அடியேனை இப்படிப்பட்ட பழிக்கும் ஆளாக்கலாமோ! என்றும் பலவிதமாகப் புலம்பிப் பரிதபித்துக்கொண்டு, "பின்னே துக்கம் தருவதான காரியங்களை முன்னே அறிந்து அக்காரியத்தைச் செய்யாதுவிடவேண்டும்; ஆலோசித்தறியாது செய்துவிட்டால் அதுபற்றித் துயரப்படாமல் மேல் செய்யத்தக்க காரியங்களை ஆலசியப்படுத்தாமல் செய்ய வேண்டுமாதலால், வருவது தெரியாது மந்திரியை யனுப்பிய நாம் துக்கப்படுவதிற் பயனென்ன? இனி நாமே போய்ப் புத்திரனைத் தேர்க்காலி லு‘ர்ந்து, மந்திரி பழிக்கு நம்முயிரைக் கொடுத்துவிடுவோம்" என்றெண்ணி, அரண்மனைக்குப் புறத்தில் வந்து, தமது புத்திரனை யழைத்து வரும்படி காவற்காரர்களுக்கக் கட்டளையிட்டார்.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம் - பசி என்கிற விஷக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே சீவகாருணியம் - கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய சீவதேகங்களென்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே சீவகாருணியம் - கடவுள் இன்பத்தைப் பெறுகின்ற நிமித்தம் தேகங்களிலிருந்து குடித்தனஞ் செய்கின்ற சீவரது தத்துவக் குடும்ப முழுதும் பசியினால் நிலை தடுமாறி அழியுந் தருணத்தில் ஆகாரங்கொடுத்து அக்குடும்ப முழுதும் நிலைபெறச் செய்வதே சீவகாருணியம் - பசி என்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாய்ந்து கொல்லத் தொடங்குந் தருணத்தில் அப்புலியைக் கொன்று அவ்வுயிரை இரட்சிப்பதே சீவகாருணியம் - பசி என்கிற விஷம் தலைக்கேறிச் சீவர் மயங்குந் தருணத்தில் ஆகாரத்தால் அவ்விஷத்தை இறக்கி மயக்கந் தெளியச் செய்வதே சீவகாருணியம் - பசி என்கிற கொடுமையாகிய தேள் வயிற்றிற் புகுந்து கொட்டுகின்றபோது கடுப்பேறிக் கலங்குகின்ற ஏழைகளுக்கு ஆகாரத்தால் அக்கடுப்பை மாற்றிக் கலக்கத்தைத் தீர்ப்பதே சீவகாருணியம் - 'நேற்று இராப்பகல் முழுதும் நம்மை அரைப்பங்கு கொன்றுதின்ற பசியென்கிற பாவி இன்றும் வருமே! இதற்கு என்ன செய்வோம்!' என்று ஏக்கங் கொள்கின்ற ஏழைச் சீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் சீவகாருணியம் - 'வெயிலேறிப் போகின்றதே, இனிப் பசியென்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! இந்த விதி வசத்திற்கு என்ன செய்வது!' என்று தேனில் விழுந்த ஈயைப்போல, திகைக்கின்ற ஏழைச் சீவர்களுடைய திகைப்பை நீக்குவதுதான் சீவகாருணியம் - 'இருட்டிப் போகின்றதே, இனி ஆகாரங் குறித்து எங்கே போவோம்! யாரைக் கேட்போம்! என்ன செய்வோம்!' என்ற விசாரத்தில் அழுந்திய ஏழைச் சீவர்களது விசாரத்தை மாற்றுவதே சீவகாருணியம் - 'நடந்து நடந்து காலுஞ் சோர்ந்தது, கேட்டுக்கேட்டு வாயுஞ் சோர்ந்தது, நினைத்து நினைத்து மனமுஞ் சோர்ந்து இனி இப்பாவி வயிற்றுக் கென்ன செய்வோம்!' என்று கண்ர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துக் கண்ரை மாற்றுவதே சீவகாருணியம் - 'பகற்போதும் போய்விட்டது, பசியும் வருத்துகின்றது, வேறிடங்களிற் போக வெட்கந் தடுக்கின்றது, வாய் திறந்து கேட்க மானம் வலிக்கின்றது, வயிறு எரிகின்றது, உயிரை விடுவதற்கும் உபாயந் தெரியவில்லை; இவ்வுடம்பை ஏன் எடுத்தோம்!' என்று மனமும் முகமும் சோர்ந்து சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனங் கண்ட ஊமையைப் போல் மனம் மறுகுகின்ற மானிகளாகிய சீவர்களுக்கு ஆகாரங்கொடுத்து மானத்தைக் காப்பதுவே சீவகாருணியம் - 'நாம் முன் பிறப்பில் பசித்தவர்கள் பசிக் குறிப்பறிந்து பசியை நீக்கியிருந்தால், இப்பிறப்பில் நமது பசிக்குறிப்பறிந்து பசியை நீக்குவதற்குப் பிறிதொருவர் நேர்வார்; அப்போது அப்படி நாம் செய்ததில்லை, இப்போது நமக்கிப்படிச் செய்வாருமில்லை' என்று விவகரித்துக்கொண்டு தூக்கம் பிடியாமல் துக்கப்படுகின்ற ஏழைச் சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்கித் தூக்கம் பிடிக்க வைப்பதே சீவகாருணியம். தேக முழுதும் நரம்புகள் தோன்றப் பசியினால் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமற் கடவுளை நினைத்து நினைத்து நெருப்பிற் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல், அடிவயிற்றிற் கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகி களுக்கு ஆகாரங் கொடுத்து அந்தப் பசி நெருப்பை ஆற்றுவதே சீவகாருணியம் - 'நேற்றுப் பட்டினி கிடந்தது போல் இன்றும் பட்டினி கிடப்பது எப்படி? நாம் பாலிய வசத்தால் இன்றும் பட்டினி கிடக்கத் துணிவோ மாயினும் பட்டினி சகியாத நமது ஏழை மனைவி வயிற்றுக்கு யாது செய்வோம்? இவள் பசியைக் குறிப்பதும் பெரிதல்ல, வார்த்திப திசையால் மிகவுஞ் சோர்ந்த நமது தாய் தந்தைகள் இன்றும் பட்டினி கிடந்தால் இறந்து விடுவார்களே! இதற்கென்ன செய்வோம்? பசியினால் அழுதழுது களைத்த நமது புத்திரர்களது சோர்ந்த முகத்தை எப்படிப் பார்ப்போம்?' என்று எண்ணி எண்ணிக் கொல்லன் உலையிலூத மூண்ட நெருப்பைப் போல், பசி நெருப்பும் பயநெருப்பும் விசாரநெருப்பும் உள்ளே மூண்டபடியிருக்கக் கன்னப்புடையில் கைகளை வைத்துக் கொண்டு கண்களில் நீர் கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்து வருத்தத்தை மாற்றுவதே சீவகாருணியம் - 'கண் கை கால் முதலிய உறுப்புக்களிற் குறைவில்லாதவர்களாகி ஆகாரஞ் சம்பாதிக்கத் தக்க சக்தி யுள்ளவர்களும் பசியால் வருந்தி இதோ படுத்திருக்கின்றார்கள்; குருடும் செவிடும் ஊமையும் முடமுமாக விருக்கின்ற நமக்கு ஆகாரம் எந்த வழியாற் கிடைக்கும்! பசி எப்படி நீங்கும்!' என்று தனித்தனி நினைத்து நினைத்துத் துக்கப்படுகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்குவதே சீவகாருணியம் - பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம் - சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசிநிவர்த்தி செய்து கொள்ளத் தக்க மிருகம் பறவை ஊர்வன தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசிவந்தபோது பசிநிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம்.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்டு வீதிவிடங்கனைச் சூழ்ந்திருந்த உறவினர் சினேகர் முதலானோ ரெல்லாம் "இப்படிப்பட்ட அவதி நேரிடத்தானோ தியாகேசர் கோயிலுக்குப் போகத் தொடங்கியது! எள்ளளவும் இப்படிவரும் என்று அறியோமே! இதற்கு என்ன செய்வோம்! என்று அழுது சோர்ந்தார்கள். அந்தப் பிரகாரமே அரண்மனையிலுள்ள மற்றவர்களும் புலம்பி ஆவலித்தார்கள். இந்த அழுகையொலியை வீதிவிடங்கன் தாயானவள் கேட்டு இதென்ன காரணமென்று விசாரித்து, இன்ன காரணமென்று அறிந்து, கொழுகொம்பற்ற கொடியைப்போல் கீழே விழுந்து மூர்ச்சையடைந்து, சற்றே அறிவுவரத் தெளிந்து "பாவியாகிய விதி என் பாக்கியத்தை யழித்ததே! தீமையாகிய வினைப்பயன் என் செல்வத்தை யழித்ததே! வஞ்சமாகிய ஊழ் என் வாழ்வை யழித்ததே! பலநாள் வருந்திப் பெற்ற என் வயிறு பற்றுகின்றதே! பகீரென்று பதைக்கின்றதே! ஐயோ! என் புத்திரன் செய்த குற்றத்திற்கு என்னைக் கொன்றாலாகாதோ!" என்று பலவிதமாகச் சொல்லிக் கைநெரித்துக்கொண்டு கண்ர் விட்டுக்கொண்டு வயிறு பிசைந்துகொண்டு மாரடித்துக்கொண்டு வாயில் அறைந்து கொண்டு மனம் பதைத்துக்கொண்டு மண்ணிற் புரண்டு கொண்டு கோ வென்று அழுதழுது புலம்பினாள்.
-
நித்திய கரும விதி
புத்தி அதற்குப் பொருந்தும் தெளிவளிக்கும் சுத்த நரம்பினறற் றூய்மையுறும் - பித்தொழியும் தாலவழி வாதபித்தம் தத்தநிலை மன்னுமதி காலை விழிப்பின் குணம் - பதார்த்தகுண சிந்தாமணி
-
நித்திய கரும விதி
அதிகாலையில் விழிப்பதால் புத்தி மனத்துடன் பொருந்தும்; தெளிவு உண்டாகும்; நரம்புகள் எல்லாம் சரியான நிலையை அடைந்து தூய்மையை அடையும்; வாதபித்த சிலேத்துமங்கள் தத்தம் நிலையில் சேரும்.
-
மனு முறைகண்ட வாசகம்
அப்படி நின்ற புதல்வனை மனுச்சக்கரவர்த்தியானவர் நேரே பாராதவராய் வேறொருவன் முகத்தைப் பார்த்து, "இவன் இளங்கன்றை யெவ்வாறு கொன்றானோ, அவ்வாறு கொலை செய்யப்படுதற்குத் தக்க குற்றவாளி யாயினான்" என்றார். அப்பொழுது புத்திரன் "பசுங்கன்றை கொன்ற அப்போதே உயிர்விட்டுப் பழிக்குப்பழி சரிகட்டுவேன்; ஆனால் தேவரீர் கட்டளை எதிர் பார்த்திருந்தேன்" என்று விண்ணப்பம் பண்ணிக்கொண்டான். உடனே அரசரானவர் கொலை வீரர்களை அழைப்பித்து, "இந்தக் குற்றவாளியை ஏற்பாட்டின்படி கடுங்காவல் செய்து கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கொண்டு போய்க் கிடத்துங்கள்" என்று கட்டளையிட்டார். அந்தக் கட்டளைக்கு அஞ்சி அவ்வீரர்கள் உருவிய கத்தியோடு சூழ்ந்து நடுவே இராஜபுத்திரனைக் காவல் செய்து நடத்திக்கொண்டுபோக, மனுசக்கரவர்த்தியும் மலை போல் உயர்ந்த ஒரு தேரிலேறிக்கொண்டு பின்னே நடந்தார்.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகண்ட அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் "இந்த இராஜகுமாரனுக்கு ஐசுவரியமும் அழகும் அறிவும் குறைவில்லாது கொடுத்த தெய்வம் இடையிலே இந்தப் பழிக்கு ஆளாகச் செய்து, நல்லவிதி நடுவே யிருக்கக் கோணியவிதி குறுக்கே வந்ததென்று சொல்வதற்குச் சரியாக்கியதே! இன்பத்தை யனுபவிக்கின்ற இளமைப் பருவத்தில் எடுக்கப்படாத பழி வந்து சூழ்ந்து, சோறுண்ணும்போது தொண்டை விக்கிக் கொண்டதென்பதுபோல் துன்பத்தை யுண்டுபண்ணியதே! கல்யாணக் கோலங்கொள்வதற்கு இசைந்துவரும் பருவத்தில் செல்வத் திருமேனிக்குத் தீங்கு உண்டாகும்படி, வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி யுடைந்ததென்பதுபோல் நேரிட்டதே! சிவதரிசனத்துக்கப் போனவிடத்தில் சேங்கன்றின் பழி வந்து, கிணறு வெட்டப் போனவிடத்தில் பூதம் புறப்பட்டதுபோல் தோன்றியதே! கடைகொள்ளப் போகும்போது கள்ளன் எதிர்ப்பட்டதுபோல், அருள் பற்றுவரப் போகும்போது இந்தப் புத்திரனுக்கு அந்தக் கன்றானது எமனைப்போல் எங்கேயிருந்து எதிர்ப்பட்டதோ! இந்தக் குமாரனைப் பற்றி நமக்கெல்லாமுண்டாகிய இரக்கம் பழிவாங்கவந்த பசுவுக்கும் உண்டாயிருக்குமானால், ஆராய்ச்சிமணியை யசைத்து முறையிட்டுக் கொள்ளாதே! ஐயோ! இந்தப் பசுவானது சூரியவமிசத்தை யழிக்கத் துசங் கட்டிக்கொண்டதே! இனி நம்மரசனுக்குப் பிற்காலத்தில் நீதியுடன் அரசாட்சி செய்யத்தக்க அரசனைப் பெறாமல் எல்லா உயிர்களும் நிலைதடுமாறி நின்று மயங்குமே; இந்த இராஜபுத்திரன் முன்பு சேனை சூழத் தேரிலேறி வந்த மங்கலமாகிய கோலத்தைக் கண்டு மகிழ்ச்சி யடைந்த நாம் இப்போது இப்புத்திரன் காவல்சூழக் காலால் நடந்து வருகின்ற பரிதாபமாகிய கோலத்தைப் பார்ப்பதற்கு என்ன பாவஞ் செய்தோமோ! இந்தப் புத்திரனுயிர்க்கு ஈடாக நம்முயிரை யெல்லாங் கொடுத்துவிடுவோமென்றாலும் அரசன் சம்மதிக்கமாட்டாரே! இந்தப் புத்திரன் உயிரிழந்தால் பின்பு அரசனும் உயிரிழப்பார், பின்பு நாமிருந்து என்ன செய்வது! இதற்குமுன் இறந்து விடுவதே சுகமாக விருக்கின்றதே! ஆ! ஆ!! நம்மரசனைப் போல இப்படிப்பட்ட அருமையான நீதியோடு அரசு செய்கிறவர்கள் முன்னுமில்லை பின்னுமில்லையே! தியாகராஜப் பெருமான் நமது இராஜனுடைய மனத்தைச் சோதிக்கும்படியாகவே இப்படிச் செய்வித்ததாகத் தோன்றுகிறதே! தரும தேவதை நமது அரசனது உண்மையாகிய நீதியின் தன்மையைச் சோதிக்கும்படி இவ்விதஞ் செய்ததாகத் தோன்றுகின்றதே!" என்று பலவிதமாக அவரவர்களுந் தங்கள் தங்களுக்கு நேரிட்ட ஆபத்தென்று நினைத்தம் புலம்பியும் அதிசயித்தும் நின்றார்கள்.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
எல்லாச் சீவர்களும் கடவுள் இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும் அவரவர் இடங்களிற் கடவுள் அருள்விளக்கம் விளங்குதலாலும், சமுசாரிகளுள் தமது தாய் தந்தை புணர்ந்தோர் மக்கள் துணைவர் முதலிய குடும்ப மட்டில் பசியாற்றிக் கொள்ளத் தக்க அற்பசக்தியுள்ள சமுசாரிகள் தாய் பிதா மக்கள் துணைவர் முதலிய குடும்பத்தாரைப் பசியினாற் பரிதபிக்க விட்டு அயலார்க்குப் பசியாற்றத் தொடங்குதலும், தம்மிடத்துப் பசித்து வந்த அயலாரை அந்தப் பசியால் பரிதபிக்க விட்டுத் தம் குடும்பத்தார் பசியை யாற்றத் தொடங்குதலும், கடவுளருளுக்குச் சம்மதமல்ல. ஆதலால், தமது குடும்பச் செலவைக் கூடியமட்டில் சிக்கனஞ் செய்து இருதிறத்தார் பசியும் நீக்குதல் வேண்டுமென்றும்; அற்பசத்தியினுங் குறைபட்டுத் தமது குடும்பம் மட்டிலும் பசியாற்றுவிப்பதற்குப் பிரயாசையால் மிகச் சிறிய முயற்சியுடைய சமுசாரிகள் தமது குடும்ப மட்டிலாவது பசியாற்றுவித்துக் கொண்டு, தம்மிடத்துப் பசித்துவந்த அயலார் விஷயத்தில் மிகவும் தயவுடையவர்களாகி அவர் பசியை மற்றொருவரைக் கொண்டாவது ஆற்றுவிப்பதற்குத் தக்க முயற்சி யெடுத்துக் கொள்ளவேண்டு மென்றும்; இயல்புள்ள பிரபல சமுசாரிகள் தங்கள் தங்கள் வருவாய்க்குத் தக்கவரையில் தாய், பிதா, புணர்ந்தோர், மக்கள், துணைவர், உறவினர், சினேகர், அதிதிகள், பெரியர், அடிமைகள், அயலார், பகைவர் முதலியவர்களுக்கும், தமது குடும்பத்திற்குச் சகாயமாகத் தேடிய பசு, எருது, எருமை, ஆடு, குதிரை, தாவர முதலிய பிராணிகளுக்கும், பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ண வேண்டுமென்றும்; விவாகம் புத்திரப்பேறு தெய்வம் படைத்தல் முதலிய பலவகைச் செய்கைகளில் வேறு வேறு சடங்குகளும் வேறு வேறு வினோதங்களும் வேறு வேறு பெருமைப்பாடுகளும் குறித்துப் பொருட் செலவு செய்தலை அமைத்து, விவாக முதலிய அந்தந்தச் செய்கைகளிலும் பசித்த சீவர்களுக்குப் பசியை ஆற்றுவித்து இன்பத்தை யுண்டுபண்ணுகின்ற சிறப்பினையே செய்யவேண்டுமென்றும், அப்படிச் செய்யில் பசித்தவர் பசி நீங்கி அடைந்த இன்பத்திலும் அனேக மடங்கு அதிகமான இன்பத்தைத் தாம் அடைவார்களென்றும் சத்தியமாக அறியவேண்டும்.
-
மனு முறைகண்ட வாசகம்
இந்தப் பிரகாரமாகச் சொல்லிக்கொண்டு நிற்க, மனுச்சக்கரவர்த்தியானவர் அந்தப் பசுங்கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் போய், தமது புத்திரனைக் காவல் செய்து முன்னே நடத்தி வந்த கொலைவீரத்களைப் பார்த்து "இனிக் காலதாமதம் பண்ணாமல் இந்தப் பசுங்கன்றை யெடுத்து அப்புறத்தே வைத்து, அவ்விடத்தில் இவ்வீதிவிடங்கனைக் கிடத்தி வையுங்கள்" என்று கட்டளையிட்டார்.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகண்ட தேவர்களெல்லாம் "அருமையாகப் பெற்ற புத்திரனை நோக்காமல் புண்ணியத்தை நோக்கிய கண்ணியவானே! உனக்குச் சுபகர முண்டாவதாக!" என்று வாழ்த்திக் கற்பகப் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் அதிர்ந்தன. அந் நகரத்தா ரெல்லாம் "இப்படிப்பட்ட நீதி செலுத்துகின்ற மஹாராஜனை என்ன தவஞ்செய்து பெற்றுக் கொண்டோம்" என்றும், ஐயோ! இனி எக்காலத்தில் வீதிவிடங்கனைக் காண்போம்" என்றும் இன்பக் கண்¬ரும் துன்பக்கண்¬ரும் விட்டுக்கொண்டு நின்றார்கள். உடனே மனுச்சக்கரவர்த்தியானவர் மந்திரியின் பழிக்காகத் தன் உயிரைக் கொடுக்கத் துணிந்து தேரிலிருந்து கீழே யிழிந்தார். அப்போது ஸ்ரீகண்டர், அனந்தேசர், காலச்செந்தீயுருத்திரர், துவாதசருத்திரர், ஏகாதசருத்திரர், புத்தியட்டகர், கூர்மாண்டர், ஆடகர், சதவுருத்திரர், அஷ்டமூர்த்திகள், நீலலோகிதர், கங்காளகபாலர், அசுவாரோகணர், அஷ்டபயிரவர், வீரபத்திரர், சக்ரதரர், நான்முகர் முதலான பதமூர்த்திகளும், கபாலிகன், அசன், புதன், வச்சிரதேகன், பிநாகி, கிருதசாதிபன், உருத்திரன், பிங்கலன், சாந்தன், க்ஷயாந்தகன், பலவான், அதிபலவான், பாசாத்தன், மகாபலவான், சுவேதன், ஐயபத்திரன், தீர்க்கபாகு, ஜலாந்தகன், மேகவாகனன், சௌமியகேசன், சடாதரன், லட்சுமிதரன், ரத்நந்திரன், ஸ்ரீதரன், பிரசாதன், பிரகாசன், வித்தியாதிபன், ஈசன், சர்வஞ்ஞன், பலிப்பிரியன், சம்பு, விபு, கணாத்தியக்ஷன், கிரியக்ஷன், திரிலோகனன் முதலான பதத்தலைவர்களும்; இந்திரர், சந்திரர், சூரியர், முதலான தேவர்களும்; வசிட்டர், அகத்தியர், புலத்தியர், பராசரர், வியாசர் முதலான முனிவர்களும், கண்ணுவர், கருக்கர், சதானந்தர் முதலான இருடிகளும்; அசுரர், அந்தரர், ஆகாயவாசிகள், விஞ்சையர், வித்தியாதரர், கருடர், காந்தருவர், இயக்கர், கின்னரர், கிம்புருடர், சித்தர், நிருதர், பூதர், பைசாசர், போகபூமியர், உரகர் முதலான கணங்களும்; நந்தி, பிங்கிருடி, சண்டன், பிரசண்டன், சங்குகன்னன், வாணன், அந்தகன், கும்போதரன், விரூபாக்ஷன் முதலான பிரமத கணங்களும் சூழ்ந்து துதித்து வரவும்; பேரிகை, மத்தளம், தாளம், சங்கம், சச்சரி, தடாரி, முதலான வாத்தியங்கள் முழங்கி வரவும்; "எல்லாம் வல்ல இறைவன் வந்தான்! நல்லோர்க்கருளும் நாயகன் வந்தான்! முப்புரமெரித்த முன்னோன் வந்தான்! தப்பிலார்க் கருள்செயுந் தயாநிதி வந்தான்; வள்ளல் வந்தான்! மஹாதேவன் வந்தான்! எள்ளிலெண்ணெய்போ லிருப்பவன் வந்தான்! அன்பர்க்கருளும் ஐயன் வந்தான்! இன்பங்கொடுக்கும் இறைவன் வந்தான்! முத்தொழில் நடத்தும் முதல்வன் வந்தான்! பத்தர்கள் புகழும் பதத்தோன் வந்தான்! தேவர்கள் போற்றுந் தியாகன் வந்தான்! மூவர்கள் வாழ்த்தும் முக்கணண் வந்தான்!" என்று சின்னங்கள் பிடித்து வரவும்; தும்புருநாரதர் யாழிசை பாடிவரவும்; உருத்திரகணிகையர் நடனஞ்செய்து வரவும்; ஒற்றை வெண்குடை, சாமரை முதலான மங்கல விருதுகள் நெருங்கி வரவும்; ஆனைமுகக் கடவுளும் ஆறுமுகக் கடவுளும் இருபக்கங்களினு மிசைந்து வரவும்; உலகமாதாவாகிய உமாதேவியார் இடது பக்கத்திலிருக்க, சடாமகுட திரிநேத்திர காளகண்ட சதுர்ப்புஜம் முதலானவை விளங்க, தர்மசொரூபமாகிய இடபவாகனத்தின்மேல் சர்வ மங்கல சக்தியே திருமேனியாகக் கொண்ட தியாகராஜப் பெருமான் எழுந்தருளி, மனுச்சோழ ராஜனுக்கு முன் தரிசனங் கொடுத்தருளி, குளிர்ந்த நிலவு துளம்பி வீசுகின்ற புன்னகைகாட்டி, அரசனுக்கு ஜில்லென்று உடம்பும் உள்ளமும் உயிரும் குளிரும்படி செய்வித்து, கருணை யென்னும் வெள்ளம் நிறைந்து பொங்கித் ததும்பிப் பெருக்கெடுத்து ஒளி கொண்டோங்கி மடைதிறந்தோடுகின்ற மலர்போன்ற திருக்கண்களால் அருள்நோக்கஞ் செய்து, அவ்வரசனுக்குண்டாயிருந்த விடாய் முழுதுந் தீர்த்து, "நம்மிடத்து நம்பிக்கையும் பேரன்பும் வைத்து மனுநீதிதவறாது அரசாட்சி செய்கின்ற மனுச்சோழனே! நீ நடத்துகின்ற நீதியின் பெருமையை உலகத்தவர் செவ்வையாகத் தெரிந்து கொள்ளும்படி நாமே இவ்வாறு சோதித்தோம், இனி ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்" என்று திருவாய் மலர்ந்தருளி, இறந்துகிடக்கின்ற பசுங்கன்றும் கலாவல்லபனென்னும் மந்திரியும் வீதிவிடங்கனென்னும் இராஜ குமாரனும் உயிர் பெற்று எழுந்திருக்கும்படி கடாக்ஷத்தருளினார்.
-
மனு முறைகண்ட வாசகம்
இப்படி அவரவர்களும் அளவில்லாத ஆனந்தமுடையவர்களாய் இழந்துவிட்ட பொருள் எதிர்வரப் பெற்றவர்கள்போல் சந்தோஷகோஷஞ் செய்து நிற்க, மனுச்சக்கரவர்த்தியானவர் கங்கையும் இளம்பிறையும் விளங்குகின்ற சடாமகுடத்தையும், திரிபுண்டரமுந் திலகமும் திருநோக்கும் விளங்குகின்ற நெற்றியையும், அருள் ததும்பி வழிகின்ற திருநோக்கங்களையும், சங்கு குண்டலமணிந்து தாழ்ந்த செவிகளையும், நறுங்குமிழ் போன்று விளங்குகின்ற நாசியையும், வேதமாகிய தெள்ளமுதத்தைக் கொள்ளைகொண்டு உண்ணும்படி அன்பர்களுக்கு அருளிச் செய்கின்ற செம்பவளம் போன்ற திருவாய் மலரையும், வானவர்க்கு உயிர் கொடுத்த மணிகண்டத்தையும், கொன்றைமாலை யணிந்து குலவரைகள்போல் உயர்ந்த திருத்தோள்களையும், மானும் மழுவும் வரதமும் அபயமுங் கொண்ட மலர்க்கரங்களையும், சிவந்துமெல்லென்று திருவருள் பழுத்து ஆனந்தமொழுகிப் பத்தர்கள் மனத்தில் தித்தித்திருக்கும் பாதமலர்களையும், செம்பவளமாலை போன்ற திருமேனியையும், பச்சைக்கொடி படர்ந்ததுபோன்று பார்வதியார் மகிழ்ந்து விளங்குகின்ற பாகத்தையும் கண்குளிரக் கண்டு களிப்படைந்து ஆனந்தநீர் ஊற்றுநீர் போலச் சுரந்து சுரந்து விழுந்து விழுந்து மார்பினிடத்து வண்டலாடவும், உடல் குழைந்து விதிர்விதிர்த்துச் சிலிர்சிலிர்த்து மயிர்க்கூச்செறிந்து என்பு நெக்குவிட்டுருகியும், மனங் கனிந்துகனிந்து கசிந்துகசிந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து படபடவென்று பதறிப்பதறி உருகியுருகி ஆனந்த வெள்ளத்தி லழுத்தியழுந்திப் பரவசமாகியும், "சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிற்பர தற்பர சிற்குண சின்மய சிவசிவசிவ" என்று வாய்நீர்சுரந்து பாடிப்பாடி நாக்குழறித் தழும்பேறியும், "ஹர ஹர" என்று ஆனந்தக் கூத்தாடியும், தண்டுபோல் அனந்த முறை கீழே விழுந்து விழுந்து வணங்கி உடம்பிற் புழுதியாடியும், குளிர்ச்சி பொருந்திய சந்திரபிம்பம் போன்ற முகத்தின்கண் முத்துமாலை யணிந்ததுபோல வியர்வரும்பி இளநகை தோன்றி மலர்ந்து விளங்கக் கைகளைக் கூப்பிச் சிரசின் மேல் வைத்துக்கொண்டு, அன்பே வடிவமாகி நின்று, "பிரமன் முதலாகிய பெரிய தேவர்களெல்லாம் அரியதவஞ் செய்தும் கனவினுங் காண்பதற் கருமையாகிய கடவுளே! அன்பு அணுவளவு மில்லாத அடியேனுக்கு அருமையாகிய திருமேனியை நனவிலே எளிதாகத் காட்டியருளிய தேவரீர் பெருங்கருணையை யென்னென்று துதிப்பேன்! பொய்யுலகத்தை மெய்யென்று நம்பிப் புன்மையாகிய போகத்தை விரும்பி, புவியாண்டு மீளாநரகில் விழத் துணிந்திருந்த அஞ்ஞானத்தையுடைய அடியேனையும் ஓர் பொருளாகத் திருவுள்ளத்திற் கொண்டு காட்சி கொடுத்தருளிய கருணைக் கடலே! கண்ணுண் மணியே! கரும்பின் சுவையே! கற்பகக் கனியே! கருணாநிதியே! தேவரீர் திருவருட்பெருமையை யென்னென்று சொல்லுவேன்! யான் என்கின்ற ஆணவப் பேயும், எனதென்கின்ற இராட்சதப் பேயும், மாயையென்கின்ற வஞ்சப் பேயும், பெண்ணாசை யென்கின்ற பெரும்பேயும், மண்ணாசை யென்கின்ற மானிடப்பேயும், பொன்னாசை யென்கின்ற பொல்லாப் பேயும், குரோத மென்கின்ற கொள்ளிவாய்ப்பேயும், உலோப மென்கின்ற உதவாப்பேயும், மோகமென்கின்ற மூடப் பேயும், மதமென்கின்ற வலக்காரப்பேயும், மாச்சரிய மென்கின்ற மலட்டுப்பேயும், மனப்பேயோடு கூடி இரவும் பகலும் ஆட்ட, ஆடியாடி யிளைக்கின்ற அடியேனைக் காத்தருளத் திருவுள்ள மிரங்கித் தரிசனங் கட்டளையிட்டுத் துன்பத்தை நீக்கி யின்பத்தை யளித்த எம்பெருமானே! என்னாண்டவனே! என் தந்தையே! என் தாயே! என் குருவே! என் தெய்வமே! என் குலதெய்வமே! என்னுயிர்த் துணையே! என்னறிவுக் கறிவாகிய இறைவனே! தேவரீர் திருவடிப்புகழை வேதங்களு மறியாது விழித்துக் கொண்டு தேடித்தேடி இளைக்கின்றன வென்றால், கிருமி கீடங்களிலுங் கீழ்ப்பட்ட அசேதனனாகிய அடியேன் எப்படியறிந்து துதிப்பேன்! தேவரீர் திருவடிக் காட்சி பலிக்கும்படி செய்வித்த இந்தப் பசுவுக்குங் கன்றுக்கும் என்னை யடிமையாகக் கொடுப்பேன் அல்லது வேறென்ன கைம்மாறு செய்வேன்! தேவரீர் திருமேனிக்காட்சி கிடைப்பதற்குக் காரணமாகிய வீதிவிடங்கனென்னும் புத்திரன் இன்றுதான் எனக்குப் புத்திரனாயினான்! தேவரீரது திருவருட் கோலத்தைக் காணப்பெற்ற அடியேனுக்கு இனி என்னகுறை இருக்கின்றது! அன்பர்களுக்கு இன்பமளிக்கின்ற ஆண்டவனே! தேவரீர் கிருபாநோக்கஞ் செய்யப் பெற்று உடல்பூரித்தேன்! உள்ளங்குளிர்ந்தேன்! உயிர் தழைத்தேன்! பசுங்கன்றும் மந்திரியும் மைந்தனும் உயிர்பெற்று எழுந்திருக்கவும் வரம்பெற்றேன்! வாழ்வடைந்தேன்! துக்க மெல்லாம் நீங்கினேன்! சுகப்பட்டேன்! மனத்துக்கு அடங்காத மகிழ்ச்சிகொண்டு நின்றேன்! இனி அடியேனுக்குத் தேவரீர் திருவடியினிடத்துத் தவறாத தியானமும் சலியாத அன்பும் தந்தருளி யென்னை அடிமை கொள்ளவேண்டும். குற்றஞ் செய்தாலும் குணமாகக் கொள்கின்ற குணக்குன்றே! பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த பரம்பொருளே! புலிமுலையைப் புல்வாய்க்குக் கொடுத்த புண்ணியமூர்த்தியே! கல்லடிக்கும் வில்லடிக்குங் கருணைபுரிந்த கருத்தனே! திருவாரூர்ப் பூங்கோயிலி லெழுந்தருளிய தியாகராஜப் பிரபுவே! போற்றி! போற்றி!" என்று தோத்திரஞ் செய்து தொழுதுநின்றார்.
-
மனு முறைகண்ட வாசகம்
அது கண்டு மனுச்சக்கரவர்த்தியானவர் பின்பும் கீழ் விழுந்து நமஸ்கரித்துத் தொழுது தோத்திரஞ் செய்துகொண்டு, அப்பசுவையுங் கன்றையும் உபசாரத்துடன் நல்ல புல்லுள்ள விடங்களில் மேய்த்து மிகுந்த சுகத்திலிருக்கும்படி செய்வித்து, கலாவல்லபனைக் கட்டியணைத்துக் கொண்டு "என் புத்திரன் பழிக்கு ஈடாகச் செய்தற்கரிய செய்கையைக் செய்துகொண்ட அன்புள்ள அமைச்சனே! உன்போ லெனக் கினியவர்கள் உண்டோ!" என்று உபசரித்து, பின்பு மைந்தனும் மந்திரியுந் தாமுமாகக் கமலாலயமென்னும் கோயிலுக்குச் சென்று, ஆசாரத்தோடும் அன்போடும் விதிப்படி சிவபெருமானைத் தரிசனஞ் செய்து அபிஷேகாதி சிறப்புகளும் அனேகம் திருப்பணிகளஞ் செய்வித்துத் தொழுது வணங்கித் துதித்து வலங்கொண்டு விடை கொண்டு புறப்பட்டு, அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் மனங்களித்து வாழ்த்திப் புகழும்படி மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியை வலமாக வந்து, அஷ்டமங்கலங்க ளேந்திய சுமங்கலிகளும் அதுகண்டு மனுச்சக்கரவர்த்தியானவர் பின்பும் கீழ் விழுந்து நமஸ்கரித்துத் தொழுது தோத்திரஞ் செய்துகொண்டு, அப்பசுவையுங் கன்றையும் உபசாரத்துடன் நல்ல புல்லுள்ள விடங்களில் மேய்த்து மிகுந்த சுகத்திலிருக்கும்படி செய்வித்து, கலாவல்லபனைக் கட்டியணைத்துக் கொண்டு "என் புத்திரன் பழிக்கு ஈடாகச் செய்தற்கரிய செய்கையைக் செய்துகொண்ட அன்புள்ள அமைச்சனே! உன்போலெனக் கினியவர்கள் உண்டோ!" என்று உபசரித்து, பின்பு மைந்தனும் மந்திரியுந் தாமுமாகக் கமலாலயமென்னும் கோயிலுக்குச் சென்று, ஆசாரத்தோடும் அன்போடும் விதிப்படி சிவபெருமானைத் தரிசனஞ் செய்து அபிஷேகாதி சிறப்புகளும் அனேகம் திருப்பணிகளஞ் செய்வித்துத் தொழுது வணங்கித் துதித்து வலங்கொண்டு விடைகொண்டு புறப்பட்டு, அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் மனங்களித்து வாழ்த்திப் புகழும்படி மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியை வலமாக வந்து, அஷ்டமங்கலங்க ளேந்திய சுமங்கலிகளும் அந்தணர் அமைச்சர் முதலானவர்களும் வாழ்த்தி மங்கலச் செய்கைகளோடு எதிர்கொள்ள அரண்மனையிற் சென்று, வேதியர், துறவினர், விருந்தினர், உறவினர், முதலானேர்களுக்கு அவரவர்க்குத் தக்க வரிசைகளைச் செய்து மகிழ்வித்து, கற்புநிலை தவறாத மனைவியார் மனங்குளிர்ந்து களிக்கும்படி மைந்தனைக் காண்பித்து, மந்திரி முதலானவர்கள் குழச் சிவானுக்கிரகத்தால் சிங்காசனாதிபதியாய் உலகத்தையெல்லாம் ஒருகுடைநிழலில் வைத்து அறநெறிப்படியே அரசாட்சி செய்திருந்தார்.
-
அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்
புத்திமதி தெரிவிக்க வேண்டல்
-
அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்
அவிடத்திய சுபயோக க்ஷேமாதிசயத்தை அடிக்கடி கேழ்க்க ஆவலுள்ளவனாக யிருக்கிறேன். நீங்க ளனுப்பிய கடிதமும் ரூபாயும் வந்து சேர்ந்து அதிலுள்ள மிச்ச ரூ 9ஐயும் அனுப்பித்திருக்கிறேன். யென்னாலாகவேண்டியவைகளுக் குத்தரவாக பலவாறு பிரார்த்திக்கின்றனன். மகாராஜராஜஸ்ரீ வேலுமுதலியாருக்கும் மகாராஜராஜஸ்ரீ நாயினா ரெட்டியாருக்குந் தங்கள் கடிதத்தைக் காண்பித்தேன். மகாராஜராஜஸ்ரீ வேலுமுதலியார் நாளையதினம் காலமே பிரயாணப்பட்டுப் போரார்கள். நானும் ரெட்டியாரும் திண்டிவனம் வரையில் போய் வழி விட்டுவிட்டு வருகிறோம். யெனக்கு வேண்டிய புத்திமதிகளை அடிக்கடி தெரிவித்தனுக் கிரகிக்கும்படி தங்களுடைய சரணாரவிந்தங்களை அஷ்டாங்க பஞ்சாங்க யோகாங்கமாய் பிரார்த்திக்கின்றனன்.
-
அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்
எதிர் பார்த்துக்கொண்டிருந்த யேழையின் வினைவிலக விளங்கிய விளக்கமான தங்கள் கடிதம் கிடைத்தது அற்ப புத்திக் கனுகுணமாயடிக்கடி வாசித்து வாசித்து வணங்கா நிற்க்கின்றேன்.
-
உபதேசக் குறிப்புகள்
94. ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்
சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.
ஷடாந்த சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது? வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம்: வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.
இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரசசுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள் அநந்நியமாய் விளங்கும்; அந்நியமல்ல. மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை எனில், சமய சன்மார்க்கம் மதசன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.
மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரச முளதோவெனில்: உளது. யாதெனில்: வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.
இதன் தாத்பரியம் யாதெனில்: சமரசம் என்பதற்குப் பொருள் - எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.
சன்மார்க்கம் என்பதில் வகை தொகை விரிவு அனந்தம். இதன் தாத்பரியம் யாதெனில்: சமய சன்மார்க்கத்தின் பொருள் குணத்தினது லக்ஷியத்தை அனுசந்தானஞ் செய்வது. குணமென்பது யாது? சத்துவகுணம். இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவ குணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய மார்க்கம் யாதெனில்: சத்போதம், சத்கர்மம், சத்சங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சற்சனம், சற்செய்கை முதலியனவும் சத்துவ சம்பந்தம் உடையன. இதனியல்பாவன: கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரியநிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.
சமயாதீத மாவது மதம். மத சன்மார்க்கத்தின் பொருள் நிர்க்குண லக்ஷியஞ் செய்வது. நிர்க்குணமாவது பூர்வகுண மாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல். யாதெனில்: சோகம், சிவோகம், தத்வமசி, சிவத்துவமசி என்னும் வாக்கியத்தில் முக்கியானுபவம். அனுபவம் என்பது யாது?.... சத்துவகுண நிர்க்குண லட்சியத்திற்கு மார்க்கம் நான்கு: எவை எனில் சத்துவ குணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், இரண்டாவது புத்திரனாகப் பாவித்தல், மூன்றாவது சிநேகிதனைப் போலப் பாவித்தல், நான்காவது தன்னைப்போலப் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரனாதல், சிநேகனாதல், கடவுளேதானாதல். இது சத்துவகுண லட்சியார்த்த மாகிய மத சன்மார்க்க முடிவு.
சத்துவகுண விளைவு என்பதற்குப் பொருள் சத்துவகுணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞானசித்தியைப் பெறுதல். நெல்லை விதைத்தான் என்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்த்து அனுபவிக்கிற பரியந்தம் அடங்கியிருப்பதுபோல் சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருளெனக் கொள்க. குண நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம். இம் மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.
சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்: சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்களைக் கடந்தது. சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலை பெறில் விளங்கும். ஏகதேசத்தில் ஒருவாறு பூர்வம் என்பதற்குப் பொருள்: சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவ மீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களி லொவ்வொரு கிருத்தியத்தின் விரிவு ஐந்தாக விரிந்த கர்த்தர் பேதம் இருபத்தைந்தாக விரிந்த மஹாசதாசிவாந்த அனுபவ காலத்தை அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு எவ்வளவோ அக்கால அளவு சுத்த மகா சதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியா யிருப்பது. சத்தென்பது பரிபாஷை அது அனந்த தாத்பர்யங்களைக்கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பது யாதெனில்: துவாரம், வழி, வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். ஆதலால், எவ்வகையினும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீதஅதீதம், லட்சியாதீதஅதீதம், வாச்சியாதீதஅதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்.
மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள்: எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யக்ஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மேற்குறித்த மார்க்கத்தின் முடிபு. ஒருவாறு.
சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழூஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திர வாசக பதவர்ணாதிகளை உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும், காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட் ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின் உண்மை ஆன்ம அனுபவத்திலும் வகர தகர வித்தையிலும் விளங்கும்.
மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.
சன்மார்க்க சங்கம்
சமரச வேத சன்மார்க்க சங்க மென்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சத்புத்திர மார்க்கம், மித்திர மார்க்கம், சன்மார்க்கம்.
சத்திய மார்க்கம்
ஷடாந்தங்களினது அனுபவம் ஒன்றானாலும் காலம் இடம் முதலியவற்றால் அவை வேறுபடும். ஆதலால் ஷடாந்தங்களு மிப்போது வெளிக்கு வியாபகமில்லாம லிருக்கின்றன. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இந்த 2-ல் வேதாந்தத்தில் போதாந்தமும் யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்தமும், கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. ஆதலால் வேதாந்த சித்தாந்தமே சிறந்தது. வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீத சுத்த சன்மார்க்கமே நீடூழி அழியாத சத்திய மார்க்கம்.
சமரசம்
சமரசமென்பது யாது? எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாயிற்று. இதற்கு நியாயம்: விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த விந்துவானது போலும்: சிவம் பரசிவம் இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது போலும்; சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இவ்விரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். ஆகவே ஷடாந்த சமரசசுத்த சன்மார்க்க மென்று மருவியது.
சத்துவகுண லட்சியம்
சன்மார்க்க மென்பது யாது? அது 3 வகைப்படும். சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.
சமய சன்மார்க்கமாவது சத்துவகுண லட்சியானு சந்தானம். சத்துவகுண சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய சேர்க்கை யெல்லாம் சன்மார்க்கம். அதாவது சத்போதம், சத்கர்மம், சத்ஸங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சத்ஜனம், சத்செய்கை முதலியவை சத்துவகுண சம்பந்தமானவையாம். சத்துவகுண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்ணியம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இந்த உண்மையைக் கொண்டு சத்துவ குணத்தின் வாச்சியத்தை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்.
சமயாதீத மத சன்மார்க்கம் - நிர்க்குண லட்சியமாகிய சத்துவ குணத்தின் லட்சியார்த்தத்தைக் கொள்வது மத சன்மார்க்கம். அதாவது சோகம், சிவோகம், அவன், அவள், நான் என்னும் அனுபவம். அதாவது சத்துவகுணத்திற்கு மார்க்கம் 4. சத்துவகுணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், 2-வது புத்திரனைப் போல் பாவித்தல், 3-வது சினேகிதனைப்போல் பாவித்தல், 4-வது தன்னைப் போல் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாகுதல், புத்திரனாகுதல், சிநேகிதனாகுதல், கடவுளே தானாகுதல். இது சத்துவ குண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கத்தின் முடிபு. சத்துவ குணத்தின் விளைவென்று சொன்னதற்குப் பொருள் சத்துவ குணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வசித்தியோடு ஞானதேகம் பெறுகிறவரையில் உள்ள அனுபவம் நெல் விளைத்தா னென்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்க்கிறவரையில் அதன் தாத்பரிய மடங்கி யிருப்பது போல்.
சுத்தம்
சுத்த சன்மார்க்கமாவது குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதங்களினது அனுபவமன்று. சுத்த சன்மார்க்க மென்பது சத் சன்மார்க்கமேயாம். சுத்தமென்பது ஒன்றுமில்லாதது. ஆதலால், சுத்தமென்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன் வந்தமையால், முன் சொன்ன சமயமதங்களைத் தாண்டினது. அதன் அனுபவங்களையும் கடந்தது.
சத்மார்க்கம்
சத்மார்க்கம் என்பதற்குப் பொருள் 4 வகை: பூர்வம், பூர்வ பூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். ஆதலால் இதன் முக்கிய லக்ஷ்யம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும். பூர்வம் என்பதற்குத் தாத்பரியம் ஒருவாறு: சிருஷ்டி, ஸ்திதி, சம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்திய தத்துவங்களைக் கர்த்தாவாக வழங்கி வருகிற பிரமா விஷ்ணு ருத்திரன் மயேசுரன் சதாசிவமென்னும் தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, மேற்படி ஸ்திதி, மேற்படி சம்மாரம், சிருஷ்டியில் திரோபவம், மேற்படி அனுக்கிரஹம் இதுபோல் 5 ஆக விரிந்த தத்துவங்கள் 25. இந்த இருபத்தைந்தையும் அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய காலம் எவ்வளவோ அவ்வளவு கால பரியந்தம் மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்த தேகியாக இருப்பது. வருஷம் தொகை மொத்தம் ஒரு கோடி அறுபது லக்ஷம்.
சத்தென்பது பரிபாஷை. குழூஉக்குறிப் பெயர். அனந்த தாத்பரியத்தைக் கொண்டு ஓர் மொழியானது. மார்க்கமென்பது வழி. வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். ஆகையால் எவ்வகையிலும் உயர்வுடையது சுத்த சன்மார்க்கம்.
சன்மார்க்கத்தின் ஏகதேசமென்பது எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது.
சர்வ சித்தி
சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்தினும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை யுண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா மூர்த்திகள் ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்குமேல் இரா.
சமய மதங்களினும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம் இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாக, சமரசசுத்த சன்மார்க்கமென மருவின. இதற்குச் சாதனம் ஒருவாறு ஷடாந்த சமரசம்.
ஆன்மாவுக்கு அனன்னிய அருள் எப்படியோ, அதைப்போல் சுத்த சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ சித்தியாம். சத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று. ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1, சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3: சிற்சபை 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3. இவைகள் மூன்றுந்தான் படிகளாக இருக்கும்.
சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாய் தெரிவிப்பார்.
பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்
பரிபாஷை - அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.
சாத்திய நிலை
சமய மத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அனேக பெரியோர்களும் சுத்தப் பரப் பிரமத்தினிடத்தில் இரண்டறக் கலந்துவிட்டதாக முறையிடுவது வாஸ்தவமா அவாஸ்தவமாவென்றால், அவாஸ்தவம். சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும். என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிக ளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை. தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர். மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.
-
உபதேசக் குறிப்புகள்
107. தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்
தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்: அகல் - தேகம், எண்ணெய் - இரத்தம், திரி - சுக்கிலம், பிரகாசம் - ஆன்மா, ஆதலால் மேற்குறித்த தீபத்தினது திரியைத் தூண்டிவிட்டாலும், காற்றுள்ள இடத்தில் வைத்தாலும், காற்றில்லா விடத்தில் வைத்தாலும், பெருந்தீபச் சமீபத்தில் சேர்த்தாலும், விட்டில், பிரமரம், மூஷ’கம், மார்ச்சாலம் முதலிய அஜாக்கிரதையாலும், மேற்படி தீபம் நஷ்டமாகும். புத்திமானிடத்தில் தீபத்தினது உபகரணங்களைக் கொடுத்து ஒரு நாளைக்குத் தீபம் பார்க்கச் சொன்னால், புத்தி விசாலத்தால் மேற்குறித்த அஜாக்கிரதையின்றி, தகளிக்குச் சூடேறாமலும், எண்ணெயில் அழுக்கு ஏறாமலும், வர்த்தி தூசு இறுகல் தளர்ச்சி பருமன் இவைகளில்லாது - சிறு திரி போட்டு, அடிக்கடி தூண்டாமல், தீபத்தை மற்றொரு தினமுமிருக்கச் செய்விப்பான். மேற்குறித்த குற்றங்களோடு தீபமேற்றினால், பதினைந்து வினாடி அல்லது கணம் இதில் சிட்டம் கட்டுவது இயற்கை. தூசு போக்கி வைத்தால், பதினைந்து நிமிஷத்திற்கொருவிசை சிட்டங் கட்டும். விசேஷ அறிவுடையவன் மேற்குறித்த லோகம் முதலியவற்றில் தீபம் வையாது, வைர படிகங்களில் அமைத்த தீபத்தகளியில், மேற்குறித்த தீபோபகரணங்களைத் திராவகமாக்கி, சுத்தாக்கினியால் பிரகாசமுண்டாக்குவான். அப்போது சிட்டமும் பிரகாச நஷ்டமும் நேரிடாது. ஆதலால் நம்முடைய தேகத்தில் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டி அடிக்கடி பெண்ணிடத்தாகிலும் வேறு தந்திரத்தாலாயினும் செலவு செய்து விட்டால், திரிபோய் ஆயுளாகிய பிரகாசம் நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் - தொள்ளாயிரத்து அறுபது நாழிகைக் கொருதரம் தேகசம்பந்தஞ்செய்து ஆபாசப்பட்ட சிட்டமாகிய சுக்கிலத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். இது மந்தனுக்கு. அதிதீவிர பக்குவியாய் மேற்குறித்த வண்ணம் கடவுளிடத்தில் இலக்ஷியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிலாபாசம் நேரிடாது. தேகம் நீடிக்கும்.
அதிதீவிர பக்குவி
சீவன் என்கிற தீபத்துக்குச் சுக்கிலம் திரி, இரத்தம் எண்ணெய். ஆகையால் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டிச் செலவு செய்து விட்டால் ஆயுசு நஷ்டமாய் விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் எடுத்துவிட வேண்டியது. அதாவது 16 தினத்திற்கு ஒருதரம் தேகசம்பந்தஞ் செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை வெளிப்படுத்தி விட வேண்டும். ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகமுடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்திற் செய்யலாமென்றது மந்ததரத்தையுடையவனுக்கேயன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல.
-
உபதேசக் குறிப்புகள்
111. சந்நியாசமும் காவி உடையும்
மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்; தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது; தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி. வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை. தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்; தயவென்பது சத்துவம், சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மலமென்பது வெள்ளைவருணம், வெள்ளை என்பது ஞானம், ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.
சன்னியாசம்
மூவாசைகளில் விசேஷ பற்றுள்ளவர்களாகித் தயையில்லாத கடின சித்தர்கள் சன்னியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். அக் குற்றத்தை நீக்கினவர்கள் சன்னியாசம் செய்து கொள்ள வேண்டுவதில்லை. குடும்ப சன்னியாசிகளா யிருக்கலாம். தனேஷணம் தாரேஷணம் புத்திரேஷணம்...
தயவு
தயவு - சுத்தம், வெள்ளை வருணம், ஞானம், தயவு - அருள் காருண்ணியம்.
காவிவேஷ்டி
காவிவேஷ்டி தரிப்பது தயவுக்கு விரோதமானவைகளை ஜெயிப்பதற்கடையாளம்.
-
உபதேசக் குறிப்புகள்
117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்.
-
மூலிகை குண அட்டவணை
184. அரசுக்கு - புத்தி வர்த்தினி
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் வரவிடுத்த கடிதத்தை கண்ணுற்றுக் களித்தேன். அந்தக் கடிதத்தில் தாங்கள் குறித்தபடி இன்னுஞ் சிலகாலத்துக்குள் திருவருள் கூட்டுவிக்கும். இது உண்மை. சந்தேகிக்க வேண்டாம். தங்களுக்குப் புத்திரப் பேறு உண்டாயிற்றென்று கேள்விப்பட்டு அளவு கடந்த சந்தோஷத்தை யடைந்தேன். குழந்தையை நன்றாகப் பாராட்டி... சகல விஷயத்திலுஞ் சாக்கிரதையா இருக்க வேண்டும். நான் சுமார் அறுபது தினத்துக்குள் அவ்விடம் வருகிறேன். அல்லது பத்து தினம் அதிகப்பட்டாலும் அவசியம் வருவேன். நமது அன்பராகிய மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீவேலு முதலியார்...தற்கு ஆனிமாசம் பிரயாணப்படுவதாக எழுதியிருக்கிறார்கள். அவர்கள் வந்தால் என் பிரயாணம் எல்லவர்க்கும் வெளிப்படும். வெளிப்பட்டால் அநேகர் என்னுடன் கூடி வர பிரயாணப்படுவார்கள். ஆரவாரப் பிரயாணமாக முடியும். ஆகலில் தாங்களும் அவர்களுக்கு இது விஷயத்தில் தெரிவிக்க வேண்டும். நான் மாத்திரம் ரகசியமாக வரும்படி நிச்சயித்திருக்கிறேன். அவசியம் வருவேன். தங்கள் மாமனார் மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீதிருவேங்கட முதலியாரவர்களுக்கு....அவர்கள் எழுதின கடிதங்களுக்குப் பதில் நான் அவ்விடம் வந்த பின்பு தெரிவிப்பதாக சொலல் வேண்டும். நமது நாயக்கரவர்களுக்கும் என் வந்தனம் குறிப்பிக்கவேண்டும். வாழ்க.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
மனைவி புத்திரர் முதலானவர்களது க்ஷேமங்களை தெரிவிக்கவேண்டும். தேகத்தைப் பக்குவமாகப் பாராட்டி வரவேண்டும்.
-
முதல் திருமுறை / First Thirumurai 003. நெஞ்சறிவுறுத்தல் neñsaṟivuṟuttal
240. மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
புத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி