கல்லார்க்கும் என்ற வார்த்தை 2 இடங்களில் பொருத்தமான பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 024. பணித்திறஞ் சாலாப் பாடிழிவு paṇittiṟañ sālāp pāṭiḻivu
7. அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
39. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
கல்லார்க்கும் -
ஜீவகாருண்யமே -
சுத்த+ஞானி -
ஒருமையுடன் -
பெற்றதாய் -
வள்ளலார் -
செந்தில் -
வார்த்தை -
தமிழில் -
சிற்சபை -
சிறந்த -
உஷ்ணம் -
செம்மை -
கரைவி -
அகவல் -
பாதம் -
நாபி -
நடர -
கரை -
ஜோதி -