-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 097. திருமருந்தருள் நிலை tirumaruntaruḷ nilai
1. பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 093. சிவயோக நிலை sivayōka nilai
1. மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
சிவனே கதவைத் திற.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
1. பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 007. நான் ஏன் பிறந்தேன் nāṉ ēṉ piṟantēṉ
1. குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 143. பசியாத அமுதே pasiyāta amutē
1. பசியாத அமுதே பகையாத பதியே
பசியாத அமுதே பகையாத பதியே
பகராத நிலையே பறையாத சுகமே
நசியாத பொருளே நலியாத உறவே
நடராஜ மணியே நடராஜ மணியே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 097. திருமருந்தருள் நிலை tirumaruntaruḷ nilai
2. திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
ஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ
அருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள
திருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
-
உபதேசக் குறிப்புகள்
1. அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி
அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா, ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு. பிண்டத்தில் அகப்புறம் ஜீவன், ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த அறிவே ஜீவ அறிவு. பிண்டத்தில் புறம் கரணம், ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு. பிண்டத்தில் புறப்புறம் கண் முதலிய இந்திரியங்கள், ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. இதுபோலவே கரணக்காட்சி, ஜீவக்காட்சி, ஆன்மக்காட்சியுமுண்டு. இதுபோல், அண்டத்தில் அகம் அக்கினி, அண்டத்தில் அகப்புறம் சூரியன், அண்டத்தில் புறம் சந்திரன், அண்டத்தில் புறப்புறம் நக்ஷத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம் - ஆக எட்டிடத்திலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ளது. காரணத்தாலுள்ள இடம்:- பிண்டத்தில் புருவமத்தி, அண்டத்தில் பரமாகாசம். காரியகாரணமாயுள்ள இடம் நான்கு:- பிண்டத்தில் விந்து, நாதம். அண்டத்தில் மின்னல், இடி. சர்வயோனியிடத்தும், விந்து விளக்கமாகிய மின்ன லிடத்தும், நாத விளக்கமாகிய இடியிடத்தும்; இல்லாதது பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதி என்றும், ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாயும்... ... மேற் குறித்த அகமாகிய ஆன்மபிரகாசமே ஞானசபை, அந்தப் பிரகாசத்துக் குள்ளிருக்கும் பிரகாசம் கடவுள், அந்த உள்ளொளியின் அசைவு நடம் - இதுதான் ஞானாகாசநடன மென்றும் அசைவுற்றதே நடராஜரென்றும் ஆனந்தநடன மென்றும் சொல்லுகின்றது. ஆதலால் ஏமம், கனகம், ரஜிதம், ரௌப்பியம் முதலாகச் சொல்வதில் சூரியனிடத்தில் கனகமும் சசியிடத்தில் ரஜிதமும்......இதுபோல் பிண்டத்தில் ஆன்மாகாசம் பொற்சபையென்றும், ஜீவாகாசம் ரஜிதசபை யென்றும் சொல்லுவது. ஆதலால் மேற்குறித்த இடங்கள் யாவற்றிலும் கடவுள் பூரண வியற்கை விளக்கம் காரியமாயும் காரணமாயும் காரியகாரணமாயும் இருக்கின்றது. முக்கிய இடங்களாகிய பிண்டத்தில் நாலும் அண்டத்தில் ஐந்தும் ஆகிய 9 இடத்திலும் கடவுள் விளக்கம் விசேஷ முள்ளது. ஆதலால் நாம் தினம் ஆறு காலத்திலும் மேற் குறித்த பிரகாசமே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும் வணங்க வேண்டும். எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நம்முடைய கரணத்தைச் செலுத்த வேண்டும். மேற்குறித்த காலங்கள் சூரிய உதயம், உச்சிப்போது, சாயர€க்ஷ, மாலை, யாமம், வைகறை - ஆகிய காலங்களில் எல்லாம் வல்ல தலைவனை வணங்குதல் வேண்டும்.
கடவுட் பிரகாசம்
அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கிற நான்கிடத்திலும் கடவுள் பிரகாசம் காரியத்தாலுள்ள விவரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா, அகப்புறம் - ஜீவன், புறம் - மனம் முதலிய கரணம், புறப்புறம் - கண் முதலிய இந்திரியங்கள். அண்டத்தில் அகம் - அக்கினி, அகப்புறம் - சூரியன், புறம் - சந்திரன், புறப்புறம் - நக்ஷத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் 4, அண்டத்தில் 4, ஆக 8 இடத்திலும் கடவுள் பிரகாசம் காரியத்தா லுள்ளது. ஞானசபையும் நடராஜரும்
ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் மனஅறிவு. அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவ அறிவு. அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்மஅறிவு. ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது.
சூரியன்
ஏமம் கனகம் என்பன சூரியனைக் குறிக்கின்றன. சூரியனிடத்தில் பொன்னிருக்கின்றது.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
2. அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 046. அருட்ஜோதி நிலை aruṭjōti nilai
2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 034. இறை எளிமையை வியத்தல் iṟai eḷimaiyai viyattal
2. சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 143. பசியாத அமுதே pasiyāta amutē
2. புரையாத மணியே புகலாத நிலையே
புரையாத மணியே புகலாத நிலையே
புகையாத கனலே புதையாத பொருளே
நரையாத வரமே நடியாத நடமே
நடராஜ நிதியே நடராஜ நிதியே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 111. சல்லாப லகரி sallāpa lakari
2. நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 034. இறை எளிமையை வியத்தல் iṟai eḷimaiyai viyattal
3. வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 093. சிவயோக நிலை sivayōka nilai
3. சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 030. பிரியேன் என்றல் piriyēṉ eṉṟal
3. படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 143. பசியாத அமுதே pasiyāta amutē
3. சிவஞான நிலையே சிவயோக நிறைவே
சிவஞான நிலையே சிவயோக நிறைவே
சிவபோக உருவே சிவமான உணர்வே
நவநீத மதியே நவநாத கதியே
நடராஜ பதியே நடராஜ பதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 143. பசியாத அமுதே pasiyāta amutē
4. தவயோக பலமே சிவஞான நிலமே
தவயோக பலமே சிவஞான நிலமே
தலையேறும் அணியே விலையேறு மணியே
நவவார நடமே சுவகார புடமே
நடராஜ பரமே நடராஜ பரமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 034. இறை எளிமையை வியத்தல் iṟai eḷimaiyai viyattal
4. ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா
ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா
அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே
ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர்
இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப்
பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர்
பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர்
நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 143. பசியாத அமுதே pasiyāta amutē
5. துதிவேத உறவே சுகபோத நறவே
துதிவேத உறவே சுகபோத நறவே
துனிதீரும் இடமே தனிஞான நடமே
நதியார நிதியே அதிகார பதியே
நடராஜ குருவே நடராஜ குருவே.
-
கணபதி பூஜா விதி
மேலும், மேற் குறித்தபடி பூஜையை மானசிகமாகச் சுப்பிரமண்ணியம், சிவம், தக்ஷிணாமூர்த்தி, நடராஜமூர்த்தி இவற்றிற்கும் செய்யலாம். இவ்வணஞ் செய்திருந்தால் பரமாசாரியர் கிடைப்பர். மேற்படி பரமாசாரியரை மானசிகத்தா லர்ச்சித்து உண்மை யறிந்து நிராசை மயமானால் சிவானுபவம் பெறலாம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 143. பசியாத அமுதே pasiyāta amutē
6. வயமான வரமே வியமான பரமே
வயமான வரமே வியமான பரமே
மனமோன நிலையே கனஞான மலையே
நயமான உரையே நடுவான வரையே
நடராஜ துரையே நடராஜ துரையே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 093. சிவயோக நிலை sivayōka nilai
6. எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
செல்வா கதவைத் திற.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 034. இறை எளிமையை வியத்தல் iṟai eḷimaiyai viyattal
6. ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
7. அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 023. சிவ தரிசனம் siva tarisaṉam
7. மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 080. திருவடிப் பெருமை tiruvaṭip perumai
7. திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
9. கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 088. நெஞ்சொடு நெகிழ்தல் neñsoṭu nekiḻtal
11. மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய்
சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை
உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 080. திருவடிப் பெருமை tiruvaṭip perumai
12. சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
நடராஜப் பெருமான் திருஉளம்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
16. என்னுயிர் உடம்பொடு சித்தம தே
என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
16. கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
17. மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
நான் இந்த விசை பிரயாணப்பட்டு வருவது அவசியமானது என்று நம்பிக்கையோடு சொல்லுவேன். ஆயினும் சில தினம் ஏறும் அல்லது குறையும். அவ்வளவே அன்றி வருவது மாத்திரம் உண்மை. ஆகலால் தாங்கள் வரவேண்டுவதில்லை. அவசியம் நான் வருவேன் வருவேன் வருவேன். ஆனால் நடராஜப் பெருமான் திருவுளம் அறியேன். எவ்விதத்தினும் வருவதற்கு மாத்திரம் சந்தேகமில்லை. தங்கள் ஞாபகம் எக்காலத்திலும் என் மனத்தைவிட்டு நீங்காது விரித்து எழுதுவதற்கு சமய நேரிடாதபடியால் இந்த மட்டில் நிறுத்தினேன். மன்னிக்கவேண்டும். அநேக வந்தனம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
20. அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
20. நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 080. திருவடிப் பெருமை tiruvaṭip perumai
24. மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
29. நடராஜ வள்ளலை நாடுத லே
நடராஜ வள்ளலை நாடுத லே
நம்தொழி லாம்விளை யாடுத லே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
31. நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 128. ஆணிப்பொன்னம்பலக் காட்சி āṇippoṉṉampalak kāṭsi
32. தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
சந்நிதி கண்டேன டி - அம்மா
சந்நிதி கண்டேன டி. ஆணி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
32. நடராஜ பலமது நம்பல மே
நடராஜ பலமது நம்பல மே
நடமாடு வதுதிரு அம்பல மே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
33. நடராஜர் பாட்டே நறும்பாட்டு
நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 106. சுத்த சிவநிலை sutta sivanilai
34. சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்
சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்
சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான்
ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே
வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
சிரஞ்சீவி ரத்ன முதலியாரவர்களுக்கு நடராஜானுக்கிரகத்தால் சிவக்கியானமும் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக. தங்கள் மணக்கோலத்தை காணக் கொடுத்து வையாதவனாகவிருந்தாலும் கேட்டு மகிழும்படி பெற்றேன். தங்கள் சுபசரித்திர விபரங்களை அடிக்கடி தெரிவிக்க வேண்டும். தாங்கள் சிவசிந்தனையை விடாமல் சர்வ சாக்கிரதையோடு லௌகீகத்தை நடத்தி வரவேண்டும். அசலார் யாராவது இவ்விடம் வருகின்றவர்களிடத்தில் ஒன்று அல்லது இரண்டு லாங்கிளாத்து பீசு வாங்கி அனுப்பினால் அதன் கிரயத்தை பின்பு செலுத்திவிடலாம். இதற்கு பிரயாசம் வேண்டாம். இதற்குள் வைத்த கடிதங்களில் ஒன்று மகா ராஜ ராஜ ஸ்ரீ சூரி செட்டியார் சோமு செட்டியார் வசம் கொடுக்க வேண்டும். தாங்களே போய்க்கொடுக்க வேண்டும். கேட்டால் மனிதர் மூலியமாக வந்ததாகச் சொல்ல வேண்டும். மற்றொன்று நாயக்கர்வாள் தாயார் இருக்கிற ராணிப்பேட்டைக்கு தபால் மூலமாக அனுப்பவேண்டும். நான் இன்னும் சில நாள் பொறுத்து வருகிறேன். வேணும்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
42. நாதாந்த நாட்டுக்கு நாயக ரே
நாதாந்த நாட்டுக்கு நாயக ரே
நடராஜ ரேசபா நாயக ரே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 002. அருட்பிரகாச மாலை aruṭpirakāsa mālai
42. மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்
நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை
நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே .
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
43. நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நடராஜ எனில்வரும் நித்திய மே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
45. நடராஜர் தம்நடம் நன்னட மே
நடராஜர் தம்நடம் நன்னட மே
நடம்புரி கின்றதும் என்னிட மே.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
இவர் தற்காலத்திற் செய்த மோசம் தங்களுக்குச் சிநிது துன்பஞ் செய்வது. ஆனால் இது பெரிதல்ல. இனி உடனே தங்களுக்கு உண்டு பண்ணிய நஷ்டத்துக்கு ஈடாக, இந்த இருவரும் மோசம்போய் நஷ்டப்பட, அதைக் கண்டு தங்களுக்கு நேரிடும் துன்பமே பெரிதாகக் காணுமென்று உண்மை யாகச் சொல்ல மாட்டுவேன். மோசஞ் செய்தவர் நாசமடைவார்கள் என்கிற உலக வழக்கு வீண் போகாது. இது குறித்துத் தாங்கள் கிலேசப்பட வேண்டுவதில்லை. தங்களுக்கு நடராஜப்பெருமான், ஒரு விதத்திலும் குறைவு வரச் செய்யார். இது சத்தியம். நான் அவ்விடம் வருமளவும், தாங்கள் தற்காலத்திலிருக்கிறபடியே ஓர் அலுவலில் இருக்கவேண்டும். நான் வந்த பின்பு, தங்கள் இஷ்டப்படியே நடத்திக் கொள்ளலாம். என் தேகம், மறையாமலிருக்கு மாகில் எவ்விதத்திலும் தங்கள் கருத்தை நடராஜப் பெருமான் திருவடித்துணையைக் கொண்டு முடித்துவிப்பேன், இதில் சந்தேகம் வேண்டுவதில்லை.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
என்னிடத்தில் தங்களுக்கு இருக்கின்ற பிரியம் எவ்வளவு அதில் எண்மடங்கு தங்களிடத்தில் எனக்கு இருக்கின்றதென்று நான் சொல்வதென்ன, கடவுளுக்குத் தெரியும். ஆதலால் என்னிடத்தில் அவநம்பிக்கை வேண்டுவதில்லை. நான் வருவதற்குத் தடையென்னவென்றால், நமது நடராஜப் பெருமானைக் கேட்குந்தோறும் "நல்லது இன்னஞ்சற்றே பொறு, இன்னஞ்சற்றே இரு" என்று உத்தரவாகிறது. இதை அசலார்க்குச் சொன்னால் நம்பார்கள். தங்கள் மட்டில் மாத்திரம் குறிப்பித்தேன். ஆனால் "இன்னஞ் சற்றே யிரு" என்ற படியால் இரண்டொருமாதமாகக் காணுகின்றது. தாங்கள் அவசரப்பட வேண்டாம். இப்போது எவ்வளவு வருத்தப்படுகின்றீர்களோ அதற்குப் பதின்மடங்கு சௌக்கியம் பின்பு கிடைக்கும். இது உண்மை, உண்மை, உண்மை. நான் எவ்வகையாலும், இன்னும் இரண்டு மாதத்தில் வருகிறேன். அது பரியந்தம் பொறுத்திருக்க வேண்டும். சிவானுபவச் சொரூபியாகிய சுவாமி சிதம்பர சுவாமிகள், வெள்ளை வேட்டி திருச்சிற்றம்பல சுவாமிகள், ஓதுவாமூர்த்தி சுந்தரம் பிள்ளை இவர்களுக்கும் என் வந்தனம் குறிப்பிக்க மனமிருந்தால் குறிப்பிக்கலாம். இனி தாங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம். சதா நடராஜப் பெருமானைச் சிந்தித்துக்கொண்டு அலுவலை நடத்த வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். வந்தனம் வந்தனம்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
தாம் மாசி மாதம் 20ஆம் தேதி வரைந்து விடுத்த கடிதம் பங்குனி மாதம் உஆம் தேதி காணப்பட்டது. அக் கடிதத்திற் குறித்த வண்ணம் சிதம்பரத்தில் வசிப்பது சம்மதமானாலும் இது விஷயத்தில் வசிப்பது சம்மதமின்று. ஏனெனில் சிதம்பரத்தில் பச்சையப்ப முதலியார் இஸ்கூல் கிரமமல்லாததாகத் தற்காலத்தில் காணப்படுகிறது. அன்றியும் அவ்வலுவல் இராஜாங்க சம்பந்த அலுவலாகவிருந்தால் நன்றாகவிருக்கும். அவ்வாறின்றி ஒருமையில்லாத சில இந்துக்கள் சம்பந்தமானதாக விருக்கின்றது. சிதம்பரம் தற்காலத்தில் நமது உயிர்த் துணைவராகிய நடராஜப் பெருமானைப் பற்றி நாம் போவதற்கும் இரண்டொரு தினம் இருப்பதற்கும் தக்கதேயன்றி வேறொரு வகையாலுந் தக்கதாகத் தோன்றவில்லை. ஆயின் அது கலிகால வண்ணம். ஆகலின் இதனடியில் எழுதுஞ் சில வரிகளிற் குறித்த வண்ணத்தை முழுதும் நம்ப வேண்டும். அதாவது நான் இந்த மாசக் கடையிலாவது சித்திரை மாச முதலிடை கடையிலாவது அவ்விடம் வருவேன். வந்த பின்பு என் கருத்தை வெளிப்படுத்துகிறேன். எந்த விதத்தாலும் தாம் என் சமீபத்திலிருக்க வேண்டு மென்றே இரவும் பகலும் எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன். என் பிரார்த்தனைப் பிரகாரம் இன்னஞ் சில காலத்துள் கூட்டுவிப்பார். இதற்குச் சந்தேகமிராது. ஆதலின் அங்கு நான் வருமளவும் சகித்திருக்க வேண்டும். சிவ பஞ்சாக்கரத்தை சதா கருத்தில் வைத்துக் கொண்டே காரியங்களை நடத்த வேண்டும். எவ்வகையிலும் என் தேகம் இருந்தால் சமீபத்திலிருக்கும்படி சிவானுக்கிரகத்தால் செய்துக்கொள்ளுவேன். தாம் இது குறித்து சலனப்பட வேண்டாம். தேக முதலான கருவிகளைப் பக்குவமாகப் பாராட்டிக் கொண்டு வரவேண்டும். மேற்குறித்தபடி வருகிறேன். விண்ணப்பக் கலிவெண்பா, நெஞ்சறிவுறுத்தல் இவைகளை அங்கிருந்து இங்கு வந்திருந்து பிரயாணப்பட்டங்கு வருகின்ற பெரிய தமக்கையார் வசத்தில் சுமார் ஒரு மாதமாயிற்று, கொடுத்தனுப்பினேன். அவாள் மத்தியில் கருங்களவால் கையில் மெய்யில் உள்ளவைகளெல்லாம் இழந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். அவாள் இன்னு மத்தியில் பந்துக்களிடமாக இருக்கின்றார்கள் போலக் காணுகின்றது. ஆகலின் அவர்கள் அவ்விடம் வந்தவுடன் மேற்படி புத்தகங்களைச் சேர்ப்பிப்பதும் அல்லாததும் உடனே அவசியம் எனக்குத் தெரியப்படுத்த வேண்டும். மற்ற சங்கதிகளெல்லாம் நான் அவ்விடம் வந்த பின்பு பேசிக் கொள்ளலாம். சிரஞ்சீவி சிரஞ்சீவி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
90. நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
91. நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
92. நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
100. அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
நடராஜ நிபுணம் - நடராஜ விசித்திரம் - நடராஜ மதுரம் - நடராஜ அலங்காரம் - நடராஜ ஞான நாடகம் - நடராஜ ஆனந்த நாடகம் - சிதம்பர வுபதேசம் - சிற்றம்பல நடனம் - பொன்னம்பல நடனம் - பொது நடனம் - தத்துவ நடனம் - ஆனந்த நடனம் - அதீத நிலை அருள் விளக்கம் - மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் - சன்மார்க்க விளக்கம் - சாதன விளக்கம் - கலாந்த விளக்கம் - யோகாந்த விளக்கம் - நாதாந்த விளக்கம் - போதாந்த விளக்கம் - வேதாந்த விளக்கம் - சித்தாந்த விளக்கம் - அண்ட விளக்கம் - பிண்ட விளக்கம் - பிரகிருதி விளக்கம் - தத்துவ விருத்தி - சுத்த சிவ ராசியம் - பரசிவராசியம் - மந்திரக் கொத்து - மகாவாக்கிய வகை - பொது வேதம் - குடும்ப கோஷம் - இயல்வகை - அளவை வகை - ஞாய வகை - இலக்கண விருத்தி - தர்க்க விருத்தி - தென்மொழி விளக்கம் - வடமொழி விளக்கம் - உலகியல் விளக்கம் - கலைமரபு.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
தாங்கள் எழுதிய கடிதத்தைக் கண்ணுற்றறிந்தேன். சடமும் துக்கமும் அநித்தியமு மாகிய உலகபோகத்தை விரும்புகின்ற மற்றவர்களைப்போல மயங்குதல் வேண்டாம். தங்கள் கருத்தின்படி நமது உயிர்த்துணைவனாகிய நடராஜப் பெருமான் திருவருளால் அதிசீக்கிரத்தில் கைகூடுமென்று நம்பியிருங்கள். நான் எப்போது கடிதத்தால் தெரிவிக்கிறேனோ அப்போது யாதொரு தடையுஞ் செய்யாமல் அக்கடிதத்தில் குறித்தவண்ணம் என்னிடம் வந்து சேருவதற்கு மனமுள்ளவர்களாக இருங்கள். தேகத்தை சாக்கிரதையாக பாராட்டி வாருங்கள். மற்ற சங்கதிகளை பின் தெரிவிக்கின்றேன். இதனுள் வைத்த கடிதத்தை செல்லப்ப முதலியார்க்கு சேர்ப்பியுங்கள். தாங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம், அஞ்சவேண்டாம்.