-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 041. காட்சிக் களிப்பு kāṭsik kaḷippu
1. அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 070. அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து aruṇakiri viḷaṅka vaḷarnta sivakkoḻuntu
1. திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
-
மூன்றாம் திருமுறை / Third Thirumurai 015. சோதிடம் நாடல் sōtiṭam nāṭal
1. பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்
இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
-
ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
சிறப்புப் பாயிரம் நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன்மலர்த் தாடலைமேல் வைத்துரைத்தா-னுள்ளத் தழிவிலடுக் குந்தேனை யன்பரெலா முண்ண வொழிவி லொடுக்கநூ லோர்ந்து. இச்செய்யுள் கருதிற்று யாதோ எனின், இந்நூன்முகத்து ஆசிரியர் பெயர் முதலியவற்றைக் குறித்து நிற்றலின் சிறப்புப் பாயிர ஒழுக்கம் உணர்த்தல் கருதிற்று என்க. வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன் மலர்த் தாடலைமேல் வைத்து என்பது:- வள்ளலார் என்னும் திருப்பெயருடையவர். ஞானாசாரிய நிருபராகிச் சமயவாதிகள் தருக்கச் செருக்குகள் பிற்பட்டொழியப் பேரருள் நெறியா வெற்றிகொண்டு சீகாழி என்னும் திருநகர்க்கண்ணே மெய்ந்நெறி விளங்க வீற்றிருந்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையாரது வள்ளற்றன்மையுடைய மலர்போலும் திருவடிகளைத் தமது நன்முடிக்கண் ஓர் பொன்முடியாக அணிந்து, ஓர்ந்து உள்ளத் தழிவி லடுக்குந் தேனை யன்ப ரெலா முண்ண வொழிவி லொடுக்கநூ லுரைத்தான் என்பது:- அத் திருவடிகளின் அருட்டுணையால் தத்துவங்க ளனைத்தும் சடமென்று ஓர்ந்துணர்ந்து அவற்றைக் கடந்து தற்காட்சியோடு திருவருட்காட்சியும் செய்து, அங்ஙனம் வாதனையால் அசைந்தெழும் போதந்தோற்றாது அதனை அத்திருவருள் ஒளியில் அடக்கி ஆண்டு மேன்மேலும் எழாநின்ற சிவானந்தத்தேனைத் தாம் அனுபவஞ் செய்தவாறு அதன் கண் அன்புள்ள பக்குவரும் செய்தற்பொருட்டு, அச் சிவானந்தானுபவ அந்தரங்க மெல்லாம் வெளிப்பட்டு விளங்க, ஒழிவிலொடுக்கம் என்று ஓர் உபதேச முறையை உரைத்தருளினார் என்றவாறு. வள்ளல் என்னும் பெயர் ஆசிரியர்க்குத் தாம் முன்னிருந்த கிரியா சாரிய நிலைக்கண் அவ்வாசாரிய மரபின் வழித்தாய் வந்த காரண அபிடேகச் சிறப்புப் பெயர் என்க. அல்லதூஉம், பின்னர் ஞானாசாரிய நிலைக்கண் தமது அருள்ஞான நோக்கால் இயைந்த கண்ணுடைய என்னும் காரண விசேடண மேற்கொண்டு நின்ற இவ்வள்ளலென்னும் பெயர் ஈண்டு அவ்விசேடணம் இசையெச்ச நிலையில் நிற்ப நின்றது எனினும் அமையும் என்க. இஃது வினை பண்பு முதலிய அடுத்த தொகைநிலைச் சொற்றொடராகாது தொகாநிலையாய்த் தனைத் தொடர் பயனிலை அண்மைப் பொருளுணர்ச்சியின்றி இடையிட்டு நிற்கத் தான் செய்யுள் முதற்கண் தனித்திருந்தமையின் ஆற்றலின்றாலோ எனின், அற்றன்று. கொடை மடங்குறித்த குணங் காரணமாக வந்த இவ்வள்ளல் எனும் பெயர் தன்னுறுப்புகளுட் கொடை, குணம், புகழ், அழகு, வளம் என்னும் நால்வகை குறித்த பல்பொருட் பகுதியாய வண்மை என்னும் முதலுறுப்பான் ஆசிரியர்க் குளவாய அக்கொடை முதலிய அருட்குணங்களைக் குறிப்பிற் புலப்பட விரித்தலின் பொருளாற்றல் உண்டென்க. அல்லதூஉம், இப்பெயர் உயர்பொருட்கிடனாய் உடனிலைக்கூட்டாய் ஒருநெறியசைத்தாய் ஓரினந்தழுவிப் பல்வகைக்குறிப்பிற் படர்ந்து முற்றியைபு வண்ணப் பெருஞ் சொல்லாக நிற்றலின் சொல்லாற்றலும் உண்டென்க. ஆயின் இவ்வாசிரியர் பெயர் இச்செய்யுளின் இடை கடைகளில் ஒன்றின் நிறுத்தாது முதலடி முதற்சீர் எதுகைத் தொடைக்கண் நிறுத்ததிற் குறித்தது யாதோஎனின், ஒன்றிரண்டெனக் கொண்டுறும் மறை ஆகம நன்றிரு முடிபின் நடுநிலை நடாஅய்ப் புலம்பெறு தத்துவ நியதியிற் போந்து உண்மலந்தெறும் அறிஞர் வாழ்த்திப் பரவும் ஆசிரியர் சன்மார்க்கம் முதலிய மார்க்கம் நான்கனுள் தலைமையில் தலைமையாய உத்தம சன்மார்க்கத்தினர் என்பது குறித்த தென்க. இங்ஙனம் உத்தம சன்மார்க்கத்தினர் என்பதை ஆசிரியர் கூறிய "இது வென்ற தெல்லாம் பொய்யென்றான்"1 என்னுந் திருவெண்பாவாற் காண்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும். குருராயன் என்பது திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்குச் சிறப்பிற் சிறப்பாய காரணப் பெயராய் நின்று, ஓதி உணர்ந்து பன்னாள் பலசாதனங்களில் முயன்று முயன்று ஆசாரியத்தன்மை ஒருவாறு அரிதிற் கிடைக்கப்பெற்றும் ஓரோர் காலங்களில் அவத்தை வயப்பட்டு மயங்கும் மற்றை ஆசாரியர் போலாது ஓதாமல் வேதாகமாதிகளை முற்றும் உணர்ந்து இறைப்போதும் ஓர் சாதனங்களில் முயன்றதின்றி ஞானாசாரிய அருளிலக்கணங்கள் அனைத்தும் தாமே தம்பால் நிரம்பி நிற்ப அமர்ந்தனர் என்பதூஉம், ஓதி உணர்ந்த அவ்வாசாரியர்க்கெல்லாம் அவரவர் அறிவின் கண் அருளுருவாய் நின்று அறிவித்தும் ஆசாரிய உருவாய் வெளி நின்று அனுக்கிரகித்தும் நின்றனர் என்பதூஉம், திருநோக்கஞ்செய்தல் முதலிய அறுவகைத் தீக்கையாலும் அன்றித் தமது திருவுருவைக் காண்டல் நினைத்தல் மாத்திரையே பக்குவரல்லாரும் பக்குவராய்ப் பயன் பெற நின்ற திருவருட் பெருமையர் என்பதூஉம் குறித்த தென்று உணர்க. இங்ஙனம் ஓதாமல் வேதாகமாதி உணர்ந்தமை முதலியவற்றை ஆசிரியர் கூறிய "தன்மையு முன்னிலையும்"2 என்னும் திரு வெண்பாவாற் காண்க. அல்லதூஉம், குருராயன் என்பது வாதுவென்ற சம்பந்தன் என்பதற்கு மேனிற்க வைத்த விதப்புக் குறிப்பால் பிள்ளையார் இவ்வவதாரத்தின் மேனின்ற அவதாரத்திலும் குமாரசற்குருவாய் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்தருளிய ஆசாரியத் தலைமையும் குறித்ததெனக் கொள்க. அருணகிரிநாதர். 1. இதுவென்ற தெல்லாம்பொய் யென்றான் எனக்குப் பொதுவன்றித் தங்குமிடம் போச்சு - அதுநாங்காண் என்றா னதன்பேர் இரவைப் பகலாக்கும் ஒன்றோ பரமசுக மோ. 44 2. தன்மையு முன்னிலையுந் தானாய்ப் படர்க்கையுமாய் என்னொழிவில் இன்புமாய் இன்புமிது - என்னாத வேதாந்த சித்தாந்த மேபிறவா வீடென்றான் ஓதாமல் வேதமுணர்ந் தோன். 42 தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத் தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின் தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந் தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.3 என்றதனால் பிள்ளையார் இவ்வவதாரத்திற்கு மேனின்ற அவதாரத்தில் குமாரசற்குரு வென்பது காண்க. கல்லாடம், உழன்மதிற் சுட்ட தழனகைப் பெருமான் வணங்கிநின் றேத்தக் குருமொழி வைத்தோய்4 குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்.4 சித்தியார், அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை5 என்பவைகளால் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்த ஆசாரியத் தலைமையை உணர்க. ஆயின், குருவேந்தன் என்னாது குருராயன் என்றது எது குறித்தற்கோ எனின், நான்கன் வேற்றமையால் அடுத்து மிக்குயர் நெறிப் பொருண்மையின் வந்த காரகச் சிறப் பொருதலைத் தொடர் மொழிப் பெயராய இக் குருராயன் என்பதன்கண் குரு என்பதன் முதனிலை யெழுத்துத் தமிழியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும், ராயன் என்பதன் முதனிலை யெழுத்து தமிழியல் விதியின்றி ஆரியவியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும் வந்து இருவகை இயலுங் கோடலின், இதனைத் தம் பெயராகவுடைய பிள்ளையாரும் தமிழ்நூல் வடநூல் என்னும் இருவகை நூற்கும் உரியார் என்பது குறித்தற்கு என்க. ஆசிரியர் "மறைப்புலவன் தமிழ்க்குரிசில் சீகாழிச் சம்பந்தன்"6 என்றதனால் இருவகை நூற்கும் உரியர் என்பது காண்க என்க. அல்லதூஉம், பொருள் வேறுபடாது சிறிதே வடிவு வேறுபட்டு நின்ற குருராயன் என்பது தன்னை உள்ளூன்றி நோக்கினர்க்கு இலைமறைக்காய்போல் ஐ என்னும் உயிர்மெய்யோடிருந்த தன் முன்வடிவ முட்கொண்டு விளங்கக்காட்டி நிற்கின்றதாகலின், இதனையுடைய பிள்ளையாரும் தமது கடவுட்டன்மை வேறுபடாது உத்தமபுருட உருவங்கொண்டு நின்ற தம்மை அன்பால் உள்ளூன்றி நோக்கினார்க்குக் குமாரசற்குரு என்னும் பெயர் கொண்டு அளவிகந்த சூரியர் உதயம் போன்று ஒளி வீசும் தம் முன்னுருவாய் தெய்த் திருவுரு வுட்கொண்டு விளங்கக் காட்டி நின்றனர் என்று குறித்தற் கென்பதுமாம் என்க. ஆளுடைய பிள்ளையார் புராணம், 3. கந்தரந்தாதி, 56 4. முருகன் துதி. 5. பரபக்கம், முருகன் துதி. 6. சத்தியநிர் வாணத்தாற் றற்போதத் தாக்கறுத்து வைத்துவழி காட்டு மறைப்புலவன் - சுத்தன் றமிழ்க்குரிசிற் சீகாழிச் சம்பந்த னென்பான் எமக்கருளிச் செய்த திது. மறையவர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப் பொறையணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித் துறைபெறு மணியே சுருதியின் ஒளியே வெளியேவந் திறையவன் உமையா ளுடனருள் தரஎய் தினையென்பார்.7 என்று மூவாண்டிற் பிள்ளையார் திருவருள் வடிவைக் கண்டு சீகாழி யுள்ளார் வியந்து கூறிய வாறாய இச்செய்யுளால் உள்ளூன்றி நோக்கினர்க்குத் தம் முன்னுருவைக் காட்டி நின்றனர் என்பது காண்க என்க. இனி இன்றியமையாக் காட்டுளதேற் காட்டுவதன்றி மற்றைய விரிக்கிற் பெருகும் என்க. அல்லதூஉம், குரு என்பதன் ஈற்று உயிர்மெய்யோடு ராயன் என்பதின் முதலுயிர்மெய்ப் புணராப்புணர்க்கையாய் நின்றதாகலின், இங்ஙனம் ஆனந்த வடிவராகிய பிள்ளையாரும் தாம் கொண்டருளி மானிடத் திருவுருவோடு புணராப்புணர்க்கையாய் நின்றனர் எனக் குறித்தற் கென்பதுமாம் என்க. அல்லதூஉம், குறிலிணைக் கெதிர் நெடில் குறில் எண்டாக நிற்பவும் ஈற்றில் அவ்வெண்டின்றி ஒற்று நிற்பவும் தொடர்ந்த மொழியாகலின் பிள்ளையாரும் பக்குவர்க்கு மறைப்பொருளாயும் அதிபக்குவர்க்கு அனுபவப் பொருளாயும் இவ்விரண்டிலும் கலவாது அதீதப் பொருளாயும் நின்றனர் என்று குறித்தற் கென்பதுமாம் என்க. இங்ஙனம் குருராயன் என்பதில் குவ்வென்பது இருள், ரு வ்வென்பது அருள், ராயன் என்பது விளங்கச் செய்கின்றோன் என்பது பொருளாம். இதனால் கு வென்னும் அசுத்தாவத்தையில் நின்றோரை ரு வ்வென்னுஞ் சுத்தாவத்தையில் தாம் நின்றவண்ணம் நிறத்துகின்றோர் குரு ஆவர். இச்சுத்தாவத்தைக்கு ஆதாரனாகியும் அதீதனாகியும் விளங்கி இவ்வவத்தையினின்றும் அக்குருவாயினோர் தாழாத வண்ணம் அருள்செய்து நின்று அதீதப் படுத்துகின்றோன் ராயன் ஆவன் ஆகலின், இதனாலும் உணர்க என்க. எழுத்தாதிப் பல்வகைக் குறிப்பிற் பொருள்நெறி பற்றி நின்ற நோக்கம் செறிவு நுட்பம் இங்கிதம் இன்பம் கம்பீரம் சிறப்பு உறுதி முதலிய நற்குணந் தழீஇய சொற்புணரீதென்றே, ஆசிரியரும் "சரிதாதி நான்கினுக்கும்"8 என்னும் திருவெண்பாவின் இடைக்கண் குருராயன் என்று இதன் பெருமை தோன்றவைத்தனர் என்க. இஃது இன்னும் விரிக்கிற் பெருகு மென்க. 7. 92வது திருப்பாட்டு (பெரிய புராணம் - 1995) 8. சரிதாதி நான்கினுக்குஞ் சாலோக மாதி வருமா றெனக்களித்த வள்ளல் - குருராயன் ஞானத்திற் பக்குவர்க ணால்வர்க் குபதேச மானத் தையுநிகழ்த்தி னான். வாது வென்ற சம்பந்தன் என்பதில் பொதுவானே வாதுவென்ற என்றது என்குறித்தோ எனின், எண்வகைக் குன்றத்து எண்ணாயிரவராய பயுடுக்கைப் பறிதலைச் சமணர்கள் ஒருங்கே கூடித் தென்மதுரைக்கண் செந்தமிழ்ப் பாண்டியனை முன்னிட்டுச் செருக்காற் செய்த சுரவாதம் அனல்வாதம் புனல்வாதங்கள் பிற்படத் திருநீற்றானும் திருவாக்கானும் வென்று திறல்கொண்டமை யன்றியும், பரசமய கோளரி என்று தானே ஒலித்த திருச்சின்னத்தின் தெய்வப்பே ரொலி கேட்டு உளம்பொறாது எதிரிட்டுமறித்த போதமங்கைப் புத்தநந்தியின் பொய்த்தருக்கமும் புழுத்தலையும் பொடிபட்டழியவும், பின்னர் உள்ளது போன் றில்லதைப் பற்றிச் சாக்கியக் குழுவுள் தலைவனாய சாரிப்புத்தன் சிற்சில வகையாற் செய்த சமயவாதந் தலைதடுமாறவும், செந்தமிழ் வேதத் திருமுறை தாங்கி மேம்படும் அறிஞரான் வெற்றிகொண்டமையும், திருவோத்தூரின்கண் அரனுக்கிடுபனை ஆண்பனையாயிற்றே என்று அசதியாடிய அமணக்குழூஉக்களின் வாய்வாதங்கள் மண்பட்டொழியத் தாம் திருவாய்மலர்ந்த திருக்கடைக்காப்புள் ஓர்மொழியானே அவ்வாண்பனை பெண்பனையாகச் செய்து விறல்கொண்டமையும் குறித்ததென்க. அல்லதூஉம், வாது என்பது இலக்கணையாகக் கொண்டு பெருமண நல்லூரின்கண் திருமண நல்விழாவைத் தரிசிப்பான் வந்த மக்கட்கெல்லாம் தொன்று தொட்டு இடைவிடாது உடல்நிழல் போல் சூழ்ந்துள பிறவிப் பெருவாதுகள் அனைத்தும் வென்றதூஉம், திருப்பாச்சில் ஆச்சிராமத்தின்கண் மழவன் மகளார்க்கு அடுத்த முயலக வாது வென்றதூஉம், மருகற்கண் ஓர் வைசியனுக்கு அடுத்த விடவாது வென்றதூஉம், இவை முதலியவும் குறித்த தெனினுமாம் என்க. வெற்றிகொண்ட பொருட்டிறன் முதலியவற்றுள் ஒன்றேனும் தோன்றக் கூறாது இலேசானே வாது என்றது என்குறித்தோ எனின், பிறர்க்கு இங்ஙனம் வேறல் தம்மானும் துணைமையானும் பற்பல நாள் பற்பல வகையில் முயற்சி செயினும் முற்றாதெனினும், பிள்ளையார்க்குச் செந்தமிழ் பொழியும் திருவாக்கானே ஆண்டாண்டு அவ்வேறல் முற்றியதென்பது குறித்தென்க. வாது என்பது குருராயன் என்பதனோடும் சம்பந்தன் என்பதனோடும் சாராது நடுநின்றமையின், அத்துவித நெறியினும் சேராது துவிதநெறியினும் சாராதுநின்ற பதிதவாதிகளது பயனில்வாதம் எனினும் அமையும் என்க. எதிரேற்கப்பட்டு எதிர்வினைக் கீழ்ப்பட மேற்கொள் வினையெழுச்சிப் பொருளின் வந்த வெல் என்னும் பிறவினைப் பகுதியால் அடுத்த வென்ற என்னும் பெயரெச்சம் சம்பந்தன் என்னும் பெயர் கொண்டு முடிந்து, இங்ஙனம் வெற்றி கொண்ட பருவம் பிள்ளையார்க்கு இளங்குமாரப்பருவம் எனக் குறித்ததென்க. என்னை? எச்சம் என்பது இளஞ்சேய் மேற்றாகலின். சம்பந்தன் என்பது பிள்ளையார்க்கு மூவகைக்கண் மூவுலகம் புகழப் பொற் பொடு புணர்ந்த அற்புதத் திருப்பெயராகலின் ஆண்டுப் பெருமான் அருளப் பிராட்டியார் அளித்த சிவஞானத் தெள்ளமுதருந்தி அச்சிவஞானத்திற்கு உரிமை பூண்டமை குறித்ததென்று உணர்க. ஆயின் சிவஞானசம்பந்தன் என்னாது சம்பந்தன் என வைத்தது என்கொலோ எனின்:- சிவஞானமுமன்றிச் சிவானந்தம் ஆனந்தாதீதம் என்பவைக்கும் உரிமை பூண்ட தலைமை பற்றியும் அவற்றை உலகுயிர்க்கு இங்ஙனமென் றுணர்த்தி உரிமை செய்விக்கும் மாட்சி பற்றியும் அங்ஙனம் வைத்த தென்க. அல்லதூஉம், சுருங்கச் சொல்லுதல் வனப்பினால் சம்பந்தன் எனவே சிவஞானசம்பந்தன் என உரிமைச்சிறப்பு வழக்கால்தானே தோன்றும் என வைத்த தெனினுமாம் என்க. எங்ஙனம் எனின், இந்திரன் என்பது இறைமைச் சிறப்பு வழக்கால் தேவேந்திரனையும், உடையானென்பது பொருட்சிறப்பு வழக்கால் பொன்னுடையானையும் குறிக்குமாகலின் என்க. வள்ளல் மலர்த்தாள் என்னும் ஒருவகைவனப்பு இருவகைச் சந்தி மூவகை மொழித்தொகைச் சொற்றொடர்க்கண் வள்ளல் என்னும் குணப் பெயர் வினைமுதற்றொழிற் பயனறப்படு முடைமைக் குணப்பெயராய் நின்று பிள்ளையாரது திருவடிகள் தம்மை அடைந்தோர்க்கு வரையாது ஆனந்தப் பேற்றை அளித்து அவரைத் தாங்கிக்கோடலைக் குறித்த தென்று உணர்க. அஃதேல் ஆனந்தப்பேற்றைத் தருதற்குந் தாங்கிக் கோடற்குங் கருத்தர் பிள்ளையாரன்றோ? அங்ஙனம் இருப்பத் திருவடிகட்கு இங்ஙனங்கூறல் எங்ஙனமெனில்:- திருவடிகள் தம்மை வழிபடுவோர்க்கு இரங்கி இன்பமீதற் பொருட்டு எழுந்தருளும் பிள்ளையாரது படர்ச்சி நிகழ்ச்சிக் கருவியாய் நின்று அவரை அவ்வழிபடுவோர்பால் வருவித்தலானும், ஞானதீக்கை பண்ணுங்கால் அவர் சென்னியிற் சூட்டப்பட்டு ஐக்கியம் வருவித்தலானும், நித்தியானந்தப் பேறுவாய்க்கு மாகலின் இங்ஙனமென்க. அல்லதூஉம், வாட்டமில் அருளும், கோட்டமில் குணனும், அசையா நிலையும், நசையா மனனும், வெகுளாப் பண்பும், விடாப் பேரன்பும் செவ்வியின்மரீஇ எவ்வௌர் எவ்வகை வேட்டனர் அவ்வகை விருப்பொடு குறிப்பின் வரையாதீதல் வள்ளற்றன்மை என்பவாகலின், இவ்வள்ளற் றன்மையைத் தம்பால் அடைந்தோரிடை அடைவித்தருளும் கருணைபற்றி அங்ஙனங் கூறியதெனினும் அமையும் என்க. அஃதேல் வள்ளற் றன்மை வழங்கு மலர்போலுந் திருவடி யென்றன்றோ உரை விரித்தல் வேண்டும், அங்ஙனமன்றி வள்ளற்றன்மை யுடைய மலர்போலுந் தாளென விரித்திருக்கின்றதே எனின்; அங்ஙன மடைவித்தலும் வள்ளற் றன்மையே யாகலினும் உடைய தொன்றன்றே உதவப்படு மாகலினும் இங்ஙனம் விரித்தல் அங்ஙனம் கூறற்கும் அமைதியாம் என்க. அல்லதூஉம், அருளின்றி அமையாத வள்ளற் றன்மைக்கு அவ்வருளே முதற்காரணமா மாகலின், ஆனந்த வடிவராகிய பிள்ளையார் அவ்வானந்தப் பேற்றை அளிக்கும் வள்ளற் றன்மைக்கு முதற் காரணமாகிய திருவருட்சத்தியே திருவடி என்று குறித்தற்குக் காரணத்தைக் காரியமாக ஈண்டு உபசரித்த தெனினும் அமையுமென்க. அல்லதூஉம், எமது திருவடிகளை வழிபடின் வீட்டின்பம் எளிதில் தருவேம் என்று பிள்ளையார் விதித்தருளிய அருள் விதிப்படி அறிந்து வழிபடின், அவ்வழிபட்டால் அவ்வீட்டின்பந்தரப் பெறுதல் உண்மையாகலின், அவ்வுண்மை நோக்கி ஈண்டுக் கூறியதெனினும், பிள்ளையார் திருமேனி முற்றுந் தெய்வத்தன்மை பூரணமாகலின் அதனை யறிவிக்க ஈண்டுக் கூறியதெனினும் அமையுமென்க. திருவடிகட்கு அடையாய வள்ளல் என்பதூஉம் ஆசிரியர் பெயராய வள்ளல் என்பதூஉம், அடிஇணை எதுகைத் தொடையாய் எழுத்து அசை சீர் ஒலி பொருளாதிகளால் ஒற்றுமை கொண்டு நின்று பிள்ளையாரது திருவடித் தீக்கைக்கும் ஆசிரியர் அதிபக்குவத் தன்மைக்கும் உள்ள ஒற்றுமைப் பொருத்தம் விளக்கின என்க. வள்ளல் என்பது பிள்ளையார்க்குக் காரணச் சிறப்புப் பெயராகக் கொண்டு பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனங் கூறின், இத்துணைச் சிறப்பின்று என்று மறுக்க, என்னெனின், அவயவச் சிறப்பால் அவயவிக் குணம் வெளிப்படுத்தலே பெரும்பாலும் இன்பமாகலில் என்க. இதனைப் "போற்றிமா னான்முகனுங் காணாத புண்டரிகம்"9 என்பதனாற் காண்க என்க. வள்ள மலர்த்தாளெனப் பாடமோதி வள்ளம் போலுங் குவிந்த வாய்மலரென மலர்க்கடையாக உரை விரிப்பாரும் உளர். அங்ஙனம் விரித்தலின் இத்துணைப் பெரும்பயனின்றென மறுக்க. இங்ஙனம் இன்னும் விரிக்கிற் பெருகும் என்க. மலர் என்பது வள்ளற் றன்மையின் அருகு வைத்தமையின், ஈண்டு நிறைதலுங் குறைதலுமாய் உள்ள நீர்நிலைக்கண் தோன்றியும் அழிந்தும் விரிந்தும் குவிந்தும் வாடியும் நின்று, வண்ணமும் நறையும் வாசமும் சிறிதே சிறுபோது கொண்டு பறித்தலாதிய சிறு தொழிற்படும் மலர்களை நீக்கி, ஆண்டுத் திரிபிலாத் தெய்வத் தெண்ர் நிலைக்கண் ஒழியாமலர்ச்சியும் அழியாமணமும் பொன்னிறப்பொலிவும் இன்னறவொழுக்கும் மென்மையுந் தண்மையும் வியப்புறுமுருவும் கண்டோர் கண்கவர்காட்சியும் மாட்சியுங் கொண்டு முக்காலமுங் குன்றா மலரைக் குறித்தமை காண்க. என்னெனில் பிள்ளையார் திருவடிகள் மெய்ஞ்ஞான விளக்கமாய் அருண்மணம் வீசிப் பொன்னிறம்பொலிந்து ஆனந்தமொழுக்கி மெல்லெனவுற்றுத் தண்ணெனக் குளிர்ந்து தரிசிக்கின்றோர் வியப்புறுமுருவாய் அவரது விருப்பநோக்கம் பரவ என்றும் ஒரு தன்மையவாய் இருக்கின்றமையின் என்க. ஆயின் மலர் போலுந் தாளென்று உவமை விரிந்தபடி நிற்றற்கு இடங்கொடாது மலர்த்தாளென்றது என் னென்னின், அத்தெய்வத் திருமலர்தனைக் கண்டோர்க்குச் சிறிய விடயானந்தந் தருதலேயன்றித் திருவடிபோற் சிவானந்தந் தரமாட்டாச் சிறுமை நோக்கி என்க. அல்லதூஉம், சுபவடிவாய் எவ்வகைச் சுபங்கட்கும் முன்னின்று அதனை விளங்குறச் செய்வதாய் மகிழ்வுடையோர் யாரும் மேற்கொண்டணியப்படுவதாய் நிற்கும் நன்மலர் போலும் எனக் கூறினும் அமையும்; என்னெனின் திருவடிகள் அருள் வடிவாய் ஆனந்தப் பேற்றிற்கு முன்னின் றளிப்பதாய் அளிவுடையோர் தம் தலைமேற்கொண்டு அணியப்படுவதாய் நிற்றலின் என்க. அல்லதூஉம் மலரை அடைந்த வண்டுகள் அதனது தேனுண்டு களி கொள்ளுதல் போல் திருவடிகளை அடைந்தோரும் அருளானந்தம் பெற்று இறுமாத்தலின் இங்ஙனம் கூறிய தெனினும் அமையும் என்க. இதனைத் தொகையுவமை அணியாகக் கூறலின்றி வள்ளன் மலர்த்தாளெனக் கூட்டி அற்புதத் தொகையுவமை யணியாகக் கொண்டு பொருள் கூறுவாரும் உளர். அவர் கூறுங் கூற்றிற் பெரும் பயனின்றென மறுக்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகு மென்க. தாள் என்பது அடிகட்கன்றியும் முயலுதற்கும் உண்ணின்ற பொருள் வெளிப்படாமைக்கும் அதனை வெளிநின்றோர் உட்சென்று கவரப்படாமைக்கும் காப்பாகக் காப்பினிற்குங் கருவிக்கும் அணிதற்கணியின் இருகடையும் இணைத்து நிற்கும் இடைப்பூட்டிற்கும் இடனாகி வந்த பலபொரு ளொரு சொல் லாகலின், திருவடிகள் தம்மை அடைந்தோரை ஆனந்த நிலையுட் சேர்த்தலும் அங்ஙனஞ் 9. திருவாசகம், திருவெம்பாவை, 20. சேர்ந்தோர் மீட்டும் அவ்வானந்த நிலையினின்றும் போத அசைவு தோற்றி வெளிப்படாமைக்கும் அவத்தைகளுள் சென்று தாக்கிக் கவரப்படாமைக்கும் காப்பாக அருளுருவாய் அதன் முன்னிற்றலும் சிவத்துடன் சீவனை இடைநின்று கூட்டுவித்தலும் குறித்தது காண்க. இக்குறிப்புணர்த்த வன்றே மலர்க்கால் என்னாது மலர்த்தாள் என்ற தென்றுணர்க. தலைமேல் வைத்து என்பது ஆசிரியர் தம் ஆசாரியராகிய பிள்ளையார் திருவடி தீக்கை செய்யத் தாம் பெற்றமை குறித்தது காண்க. அஃதேல் வைக்கப்பட்டு எனச் செயப்பாட்டு வினையெச்சத்தால் இருத்தற் பாலதன்றோ எனின், ஆசிரியர்க்கு அத்திருவடிக்கண்ணே உள்ள பிரியத் தொடர்ச்சியின் பெருமை தோன்ற இங்ஙனம் நின்று அங்ஙனங் குறித்தது என்க. இதற்கு இவ்வாறன்றித் தலைமேல் பாவனையால் வைத்தெனக் குறித்ததென்று கூறுவாரும் உளராலோ எனின், அவ்வாறு கூறிற் பிள்ளையார் இந்நூலாசிரியர்க்கு ஞானாசிரியர் என்பதும் இவர் ஞானதீக்கை யுடையார் என்பதும் விளங்குதலின்றி மற்றை ஆசிரியர்போல் எடுத்த நூல் இனிது முடிதற்பொருட்டுப் பாவனையால் வழிபடு கடவுட் பழிச்சினர் என்று இலேசிற் கருதப்படுமாகலின் அங்ஙனங் கூறல் மரபன்றென்க. தலையில் வைத்து என்னாது தலைமேல் வைத்து என்றமையால், மறைமுடிக்கண்ணே வயங்காநின்ற அச்செல்வத் திருவடியின் சீர்மை தோன்றிற்று என்க. ஓர்ந்து என்பதில் ஓர் என்னும் பிறவினை முதனிலை, அறிவு தனக்கெதிரிட்ட உணர்ச்சிப் பொருட்கண் எதிரிடுவது போன்று எதிரிடாது உள்ளாழ்ந்த அப் பொருட்டிறன் எதிரிடப் பெயரும் புடைபெயர்ச்சியும் எதிரிட்ட பின்னர் விகற்பியாது எதிர்க்குந்தொறும் எதிரிடப் பெயரும் புடைபெயர்ச்சியுங் கோடலின் கருவித்திறனும் தன்திறனும் அருட்டிறனும் உற்றுணர்ந்து அவ்வுணர்ச்சி விகற்பியாது தேறிநின்றமையைக் குறித்து காண்க. இக்குறிப்புத் தோன்றவன்றே திருவள்ளுவநாயனாரும் "ஓர்த்துள்ள முள்ளதுணரின்"10 என்றா ரென்று அறிக. உள்ளத் தழிவில் என்பதில் உள்ளம் என்பதன் பகாப்பதவியீற்றுப் பகுபதப் பொருளின் இடவாகு பெயராய் அணுப் பொருட்கண் வந்த உள் என்னும் பகுதி உட்புறத்தும் அப்போதம் எழுஞ் சிற்றசைவும் பேரசைவுங் குறித்தது காண்க. உள்ளம் என்பது வாதனையால் உள்ளெழும் போதத்திற்கு ஆகுபெயராயது. வள்ளலென்பது போன்று ஒழுகிசையாய் வர உள்ள வழிவில் என்னாது பொறுத்திசையாய் வர உள்ளத் தழிவில் என்றது என்கொலோ எனின்:- வேற்றுமை வழியாகலினும், போதவசைவு சார்பின்றி யமையாமை குறிக்கவேண்டு மாகலினும், சாரியையோடு புணர்த்தி அங்ஙனங் கூறியதென்க. அழிவு என்பதில் அழி என்னும் பொதுவினைப்பகுதி முன்னர்த்தோற்ற நிகழ்ச்சிப் பின்னர் ஓர் காலத்தும் ஓரிடத்துமன்றிக் கெடுதற் பெயர்ச்சிக்கண் வந்ததாகலின், அப்போத நிகழ்ச்சி பின்னரெக்காலத்தும் உட்புறமென்னு மெவ்விடத்துந் தோற்ற நிகழ்ச்சியின்றி ஒடுங்கியவாறு குறித்ததென்று உணர்க. இங்ஙனமன்றி உள்ளத்தழிவில் என்பதற்கு 10. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. மனத்தின் அசைவற்ற இடத்தெனப் பொருள் கூறுவாரும் உளராலோ எனின், மனத்தின் அசைவு போதவசைவறில் தானேயறும் ஆகலினும் அஃதறாதவிடத்து இஃதெவ்வாற்றானும் அறாதாகலினும் அது பொருந்தாதென்க. இதனை ஆசிரியர் கூறிய "பற்றாத போதும் பதறும்"11 என்னும் திருவெண்பாவாற் காண்க என்க. அடுக்குந் தேன் என்பதில் அடுக்கும் என்பது அடுத்தல் என்னும் தொழிற் பெயர்க்கண் தல் விகுதி தன்னொற்றுச் சந்தியொடு நீங்க எதிர்காலப் பெயரெச்ச இடைநிலை உம்மை ககரமெய்ச் சாரியை யூர்ந்து தன்னொற்றுச் சந்தி பெற்று ஆண்டு நின்று இறையும் இடைப்பாடு தோற்றாது செறிதற் பெயர்ச்சியும், அடுக்கல் என்னும் தொழிற்பெயர்க் கண் அல் விகுதி நீங்க அவ்வெதிர்காலப் பெயரெச்ச இடைநிலை உம்மை விகுதி நீங்க நின்று தன் வரவு கண்டோடிய குற்றுகரமூர்ந்த மெய்க்கண்ணேறி நின்று இறையும் இடைப்போதின்மை படாது பன்முறை மேன்மேலுறுதற் பெயர்ச்சியும் பொருளாகக் கொண்டு இருவகைப் பகுதி யொருவகை யெச்சமாக நிற்றலின், சிறிதும் இடத்தானும் காலத்தானும் பிரிவு தோன்றாது செறிந்து பன்முறை மேன்மேலெழும் ஆனந்தத் தேனென்று குறித்ததென் றுணர்க. உள்ளத் தழிவி லடுப்பது ஆனந்த மாகலின் தேனென்பதை உவமக் குறிப்பால் சிவானந்தத்தேன் என்ற தென்று உணர்க. தேனுண்ட வண்டு அசைவின்றி அத்தேன்மயமாயிருத்தல் போல, ஆனந்தானுபவத்தர் போத அசைவின்றி இவ்வானந்த மயமா யிருத்தலின் உவமையாகக் குறிக்கப்பட்ட தென்று உணர்க. இதனை யொப்புமைக் கூட்ட மொட்டாதிகளாகக் கூறுவாறும் உளராலோ எனின், அவ்வாறு கூறினும் பொருள் சிதையாமையின் ஒருவாறு அமையும் என்க. போத அசைவின்கண் தோற்றல் விடயானந்த மாகலில், போத ஒழிவின் கண் தோற்றல் சிவானந்த மெனக் குறித்தற்கு, உள்ளத் தழிவில் அடுக்குந் தேன் என்ற தென்று உணர்க. எங்ஙன மெனின், உள்ளத் தழியாமையின் அடாத் தேனென்று எதிர்மறுக்கப் படுதலின் என்க. மதுரம் பற்றித் தேனை ஆனந்தத்திற்கு உவமை கூறுவாரும் உளராலோ எனின் அது நா விடயமாய் இறைப்போது நிற்றலின் இத்துணைச் சிறப்பின்று என்க. அன்பரெலா முண்ண என்பதில், அன்பர் என்பது பொருள் புகழாதியைக் குறித்துப் பயில்வோரை நீக்கிச் சிவானந்தம் எந்நாள் அடைதும் என்று இடைவிடாது அதனையே விரும்பிப் பயில்வோரைக் குறித்ததென்று உணர்க. எலாம் என்பது சரிதாதி கன்ம மார்க்கங்களைக் கூறும் பிற நூல்களெல்லாம் பருவம் நோக்காது சாதி சமயாசார விகற்பங்களை நோக்கிச் சிலரை நீக்கியும் சிலரை நிறுவியும் அதிகரித்தல் போலாது அச்சாதிசமயாதிகளில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாரேனும் பருவத்தராயின் இந்நூற்கு உரியராவர் என்பது குறித்தது என்று உணர்க. 11. பற்றாத போதும் பதறும் பழக்கமறைக் கற்றா லென்னாகக் கலக்காது - சற்றேநீ தீண்டிவிடிற் றான்காண் செனன மரணமது மாண்டுவிடி னீசிவமா வை. உட்கொள என்னும் பொருளுட்கொண்டு பொருட்டுப் பொருளிற் போந்த உண்ண என்னும் வினையெச்சம் ஆனந்தானுபவத்திற்கு விடாத இலக்கணை யாயிற்று என்று உணர்க. என்னை எனில், உண்ணலில் பசி நீங்கல் போல் ஆனந்தானுபவத்திற் பசுத்துவ நீங்கலின் என்க. பயன் காரணம் பற்றி வந்த ஒழிவிலொடுக்கநூல் என்பது ஒழிவிலொடுக்க மென்னும் நூல் ஒழிவிலொடுக்கந் தரு நூல் என இரு வழிக்கும் பொதுவாய சந்தியால் வந்தமையில், தன்னை வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற்கும் பொது வென்று குறித்த தென்று உணர்க. ஒழிவிலொடுக்க நூலுரைத்தான் என்பதில் வேற்றுமை சாரியை உருபு முதலிய ஒன்றும் விரியாது நிற்றலின், ஞானாசார மன்றிக் கருமாசார மொன்றும் விரியாத இந்நூலின் நின்மலத் தன்மை தோன்றிற்றென்று உணர்க, உரைத்தான் என்பது ஒருவர் மதி நுட்பத்தால் தாம் கண்டறிந்த மாற்றுயர்ந்த பொன்னின் தன்மையைப் பிறரும் அறிந்து பயன் கோடற்குக் கட்டளைக்கல்லில் உரைத்துக் காட்டல் போல், சுருதி குரு அனுபவத்தால் தாம் அனுபவித் தறிந்த சிவானந்தப் பேற்றின் தன்மையைப் பக்குவரும் அறிந்து பயன் கோடற் பொருட்டு நூற்கண் உரைத்துக் காட்டினார் என்று குறிப்புறுத்திற்று என்று உணர்க. என்னெனில் உரை என்பது பொன்னுரையும் பொருளாகக் கோடலின் என்க. உரைத்தான் என்னும் பயனிலை செயப்படு பொருளின் இறுதியில் இயையாது செயப்படு பொருட்கும் கருவிப் பொருட்கு மேல் தாடலை மேல் வைத்து என்பதன் இறுதியில் தொடர்ந்து நின்றது என்னெனின், சிவஞானத் தீக்கையுடையராய் உரைத்தாரென்பது மன்றித் தமதாசாரியர் திருவடி சான்றாகத் தாம் கண்ட அனுபவத்தை விளங்க உரைத்தாரென்பதும் குறித்தற்கு என்க. என்னை? தாடலை மேல்வைத்து எனவே சான்றாக வைத்து என்பது தானே அமையுமாகலின். தலைமேல் வைத்து என்பதன்பின் நிற்கக் கடவதாய ஓர்ந்து என்பது செயப்படு பொருட்பின் இறுதி நிலையாய் நின்றது என்னெனின் இந்நூல் கற்றோர்க்குக் கருமங்குறைந்து ஞானமேலிடுதலுண்மை குறித்தற்கு என்க. எங்ஙனம் எனின், அவ்வோர்ந்து என்பது வினைக்குறையாகலின் என்க. 'உள்ளத்தழிவி லடுக்குந் தேனை யன்பரெலா முண்ண வொழிவிலொடுக்கநூ லோர்ந்துரைத்தான்' எனக் கொண்டு போத ஒழிவின்கண் அடுப்பதாய ஆனந்தத்தை அன்பரெல்லாம் அனுபவிக்கும் பொருட்டு வேதாகம முடிபான ஞானநெறியை ஆராய்ந்து ஒழிவிலொடுக்கம் என்றோர் நூலை உரைத்தார் எனப் பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனங் கூறின் ஆசிரியர் பரஞானமுடையா ரென்பது தோற்றாது அபரஞான முடையாராகப் பொருள்படு மாகலினும், அபரஞானத்தாற் கூறப்பட்ட நூல் மிகச் சிறவாமையானும் அது பொருந்தாதென்க. இந்நூல் இயற்றற்கேற்ற நற்பொருளுடைமையுஞ் சிறப்புப்பாயிர இலக்கணத்துள் ஆக்கியோன் பெயரே என முதனிறுத்தப்பட்ட நிமித்த காரணச் சிறப்புடைமையும் இச்செய்யுள் முடிபுக்கு எழுவாயாந் தலைமையுடைமையும் பற்றி வள்ளல் என முதல் நிறுத்தியது என்க. இந்நூலாசிரியர்க்கு ஆசாரியர் இவரென்பது தோன்றற்கு அவ்வள்ளல் என்பதன் புடை குருராயன் என்பதை நிறுத்திய தென்க. இங்ஙனம் ஆசாரிய ரென்பவர் பிள்ளையார் என்பது தோன்றற்கு ஞானசம்பந்தனென வைத்தல் வேண்டுமாகலின் அந்த ஞானத்தைக் குறிக்கும் பாசவெற்றியாய 'வாது வென்ற' என்பது முன் கூட்டிச் சம்பந்தன் என அதன்புடை நிறுத்திய தென்க. இரண்டாம் அடிக்கண் பிள்ளையார் தாள்கள் நிறுத்தத் தொடங்கி முன்னர் அத்தாள்களின் இயற்கை அருளென்று குறிக்க வள்ளல் என்றும், அதன் வடிவம் ஆனந்த மென்று குறிக்க மலரென்றும் முறையே வைத்து வள்ளல் மலர்த்தாள் என நிறுத்தியதென்க. தாள்களன்றியும் பிள்ளையாரும் அருளியற்கையரே என்பது குறிக்கச் சம்பந்தனென்னுஞ் சத்தந் தோற்றியவுடன் வள்ளற் சத்தந் தோன்ற நிறுத்தியதென்க. இங்ஙனம் நிறுத்தியவை சொற்பொருண் முறைநிலை. தாள் என்பதற்கும் தலை என்பதற்கும் உள்ள சொற்பொருள் சம்பந்த இன்பம் பற்றித் தாடலை என்றும், தலை என்பதற்கும் மேலென்பதற்கும் உள்ள உரிமை நோக்கம் பற்றித்தலைமேலென்றும், மேலென்னும் இடப் பொருட்கு வைத்தற்றொழில் சிறந்தது பற்றி மேல்வைத்து என்றும், வைத்து என்பதற்கும் உரைத்தான் என்பதற்கும் இறுதியும் முதலும் இனமாதல் பற்றி வைத்துரைத்தான் என்றும் முறையே நிறுத்திய தென்க. இங்ஙனம் நிறுத்தியவை சொன்முறை நிலையும் சொற்பொருண்முறை நிலையுமாம். இங்ஙனம் முற்றும் முறை நிலை கூறப்புகின் மிகப் பெருகுமாகலின் ஒருவாறு காட்டினம். மற்றையவும் இவை கொண்டு உணர்க என்க. இச்செய்யுட் ப
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 127. அற்புதம் அற்புதமே aṟputam aṟputamē
2. சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 040. கண்கொளாக் காட்சி kaṇkoḷāk kāṭsi
2. விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்
தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானைத் தானேநா னாகி என்றும்
தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என்உயிருக் கின்பா னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 051. பெறாப் பேறு peṟāp pēṟu
2. ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 059. வேண்டுகோள் vēṇṭukōḷ
2. முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 108. சமாதி வற்புறுத்தல் samāti vaṟpuṟuttal
2. இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
தருணம்இதே என்று வாய்மை
அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
வார்த்தைகள்என் றறைகின் றாரால்
மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
மனிதர்மதித் திறமை என்னே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 109. உலகப்பேறு ulakappēṟu
2. பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
-
நடந்தவண்ணம் உரைத்தல்
கல்வி கேள்விகளால் சிறந்த அறிவுடையவர்களுக்கு
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 001. பரசிவ வணக்கம் parasiva vaṇakkam
3. திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 109. உலகப்பேறு ulakappēṟu
3. மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 076. ஆனந்த நடனப் பதிகம் āṉanta naṭaṉap patikam
3. தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
செய்யுமதி வேணியாட
செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
சிறந்தாட வேகரத்தில்
மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
வானாதி தேவராட
மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
மால்பிரம னாடஉண்மை
ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
நங்கைசிவ காமியாட
நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
நந்திமறை யோர்களாட
ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
ஆறுமுக னாடமகிழ்வாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
ஆனந்த நடனமணியே.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அருளறிவொழுக்க முதலிய சுபகுணங்களிற் சிறந்த சிரஞ்சீவி ரத்தின முதலியார்க்கு சிவ கடாக்ஷத்தால் தீர்க்காயுளஞ் சகல சம்பத்தும் உண்டாவனவாக. தமது சுபசரித்திர விபரங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன்.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
கல்வி கேள்விகளாற் சிறந்து சிவபக்தி ஜீவகாருண்யஞ் சாந்தம் அன்பு முதலிய நற்குணங்களைப் பெற்ற நண்பர்க்கு அனந்தமுறை வந்தனம் வந்தனம் வந்தனம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 017. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு attuvita āṉanta aṉupava iṭaiyīṭu
4. சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 080. திருவடிப் பெருமை tiruvaṭip perumai
4. தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 109. உலகப்பேறு ulakappēṟu
4. முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
-
மனு முறைகண்ட வாசகம்
கடல்சூழ்ந்த உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களிலுஞ் சிறப்புடையதாய், காவிரி என்னுந் தெய்வத்தன்மையுள்ள நதியினால் எந்தக் காலத்திலுங் குறைவுபடாத நீர்வளப்ப முடையதாய் வாழைச் சோலை, பலாச்சோலை, மாஞ்சோலை, தென்னஞ்சோலை, கமுகஞ்சோலை, கருப்பஞ்சோலை முதலாகிய பலனுள்ள சோலைகள் அணியணியாக ஒன்றையொன்று சூழ்ந்தோங்க, அசோகு, குருக்கத்தி, சண்பகம், பாதிரி முதலான விருக்ஷங்களால் நெருங்கி, வண்டுகள் பாடுகின்ற மலர்ச்சோலைகளும், தாமரைத் தடாகங்களும், நீர் நிறைந்து அல்லி நீலம் முதலான புட்பங்கள் மலர்கின்ற ஓடைகளுடத, பொய்கைகளும், ஏரிகளும், குளங்களும் பலவிடங்களிலு முள்ளதாய், செந்நெல் முதலாகிய பயிர்கள் மாறாது முப்போகமும் விளைகின்ற குறைவற்ற விளைவையுடைய வயல்கள் நெருங்கி யுள்ளதாய், சிதம்பரம், பஞ்சநதம், மத்தியார்ச்சுனம், சம்புகேச்சுரம் முதலான திவ்வியக்ஷேத்திரங்கடள இடையிடையி லுள்ளதாய், இல்லற தருமத்தில் எள்ளளவும் பிழைபடாது செல்வத்திலும் கல்வியிலும் நிறைவுள்ள குடிகளுக்கிடமானதாய், பல வளப்பங்களுங் கொண்டு பூமிதேவிக்கு முகம்போல விளங்குகின்ற சோழதேசத்தில்; பாதாளலோகத்தைப் பார்த்திருக்கின்ற ஆழமுள்ள அகழியினாற் சூழப்பட்டு, இந்திரலோகத்தை எட்டிப்பார்க்கின்ற உன்னதமுள்ள கோபுரங்களையுடைய மதிலும், உய்யானம் நந்தவரீளீ பூஞ்சோலை முதலானவைகளும்,தெய்வதீர்த்தம், பிரமதீர்த்தம், வசந்தவோடை, செங்குவளையோடை முதலான நீர்நிலைகளு முள்ளதாய், தேர்நிலைகள், யானைக் கூடங்கள், குதிரைப்பந்திகள், சேனையிடங்கள், ஆஸ்தான மண்டபம், அரசமண்டபம், விசித்திரமண்டபம், விநோதமண்டபம், நியாயமண்டபம், நிருத்தமண்டபம், கல்விமண்டபம், கணக்கறிமண்டபம், பாடல்மண்டபம், பரிசனமண்டபம், சித்திரைமண்டபம், தேவாசிரியமண்டபம், சித்திரத்தெற்றி, சிலம்பக்கூடம், ஆயுதச்சாலை, அமுதசாலை, அறச்சாலைகளும் உடையதாய், ரத்ன பீடிகைகளும், கனக மாளிகைகளும், பளிங்கு மாடங்களும், மணிப்பந்தல்களும், மகரதோரணங்களும், மங்கல கோஷங்களுமுள்ள கடைவீதி, கணிகையர்வீதி, சூத்திரர்வீதி, வைசியர்வீதி, அரசர்வீதி, அந்தணர்வீதி, ஆதிசைவர்வீதி, சைவர்வீதி, வைதிகர்வீதி, தபோதனரிருக்கை, சைவமுனிவர்மடம், உட்சமயத்தார் உறையுள் முதலான வளப்பங்களை உடையதாய், தியாகராஜப்பெருமான் எழுந்தருளிய கமலாலயம் என்னும் திருக்கோயிலை உள்ளே உடையதாய், சோழராஜர்கள் பரம்பரையாக அரசாட்சி செய்வதற்கு உரிய ராஜதானியாய், நிலமகள் திருமுகத்திலிட்ட திலகம் போல் விளங்கிய திருவாரூர் என்கிற நகரத்தில்; மூன்று சுடர்களிலும் முதற்சுடராகிய மேன்மையடைந்த சூரியகுலத்திற் பிறந்து அரசாட்சி செய்துவந்த சோழராஜர்களில் சிறந்தவராய், அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவராய், உயிருக்கு உறுதியைத் தருகின்ற நல்ல கேள்விகளை யுடையராய், எல்லா உயிர்களுக்கும் இதஞ்செய்கின்றவராய், வேதமோதுதலும், யாகஞ்செய்தலும், இரப்பவர்க்கீதலும், பிரஜைகளைக் காத்தலும், ஆயுதவித்தையில் பழகுதலும், பகைவரை அழித்தலும் என்னும் ஆறு தொழில்களும், வீரமுள்ள சேனைகளும், செல்வமுள்ள குடிகளும், மாறாத பொருள்களும், மதிநுட்பமுள் மந்திரியும், அன்புள்ள நட்பும், பகைவரால் அழிக்கப்படாத கோட்டையும் உடையவராய், வழக்கை அறிவிப்பவரையும் தங்களுக்குள்ள குறையைச் சொல்லிக்கொள்பவரையும் இலேசிலே தமது சமுகத்துக்கு அழைப்பித்து அந்த வழக்கைத் தீர்த்தும் அக்குறையை முடித்துங் கொடுப்பவராய், பாலொடு பழஞ்சேர்ந்தாற்போல முகமலர்ச்சியோடு இனியவசனஞ் சொல்லுகின்றவராய், பின்வருவதை முன்னே அறிந்துகொள்வதும் உறவினர், அயலார், சினேகர், பகைவர், இழிந்தோர், உயர்ந்தோர் முதலான யாவரிடத்தும் காலவேற்றுமையாலும், குணவேற்றுமையாரும் உண்டாகின்ற நன்மை தீமைகளை உள்ளபடி அறிந்து கொள்வதுமாகிய விவேகமுள்ளவராய், அகங்காரம் காமம் கோபம், லோபம் மோகம் பொறாமை வஞ்சகம் டம்பம் வீண் செய்கை முதலான குற்றங்களைத் தினையளவுங் கனவிலும் காணாதவராய், துர்க்குணங்களையுடைய சிறியோர்களைச் சேர்த்துக் கொள்வதை மறந்தாயினும் நினையாமல் நற்குணங்களில் நிறைந்து செய்வதற்கு அரிதான செய்கைகளையுஞ் செய்து முடிக்கவல்ல பெரியோர்களைச் சகாயமாகக் கொண்டு செய்யத்தக்க காரியங்களைத் தெரிந்து செய்தும், செய்யத்தகாத காரியங்களைத் தெரிந்து விடுத்தும், பகைவலியும் தன்வலியும் துணைவலியும் காலநிலைமையும், இடநிலைமையும் அறிந்து காரியங்களை நடத்தியும், அடுத்தவர்களது குணம் வல்லமை ஊக்கம் முதலான தன்மைகளை ஆராய்ந்து தெளிந்து அவரவர் தரங்களுக்குத் தக்க உத்தியோகங்களை அவரவர்க்கக் கொடுத்தும், பழமைபாராட்டியும், சுற்றந்தழுவியும், கண்ணோட்டம் வைத்தும், சாதியியற்கை, ஆசிரமவியற்கை, சமயவியற்கை, தேசவியற்கை, காலவியற்கை, முதலான உலகியற்கைகளை அறிந்து அவ்வவற்றிற்குத் தக்கபடி ஆராய்ந்து செய்தும் நல்லொழுக்கத்துடன் நடப்பவராய், குடிகளுக்கு அணுவளவு துன்பம் நேரிடினும் அதை மலையளவாக எண்ணித் தமக்கு வந்ததுபோல் இரக்கங்கொண்டு மனமுருகுவதனால் தாயை யொத்தவராய், அத் துன்பத்தைவிட்டு இன்பத்தை அடையத்தக்க நல்வழியை அறியும்படி செய்விப்பதனால் தந்தையை யொத்தவராய், அவர்களுக்கு அந்த நல்வழியைப் போதித்து அதிலே நடத்துகின்றபடியால் குருவை யொத்தவராய், அந்தக் குடிகளுக்கு இகபர சுகத்தைக் கொடுப்பதற்கு முன்னின்று அது பற்றி முயற்சி செய்யும்போது வரும் இடையூறுகளை நீக்குகின்றபடியாலும் அந்த ஒழுக்க வழியிலிருந்து தவறினால் அந்தக் குற்றத்துக்குத் தக்க தண்டனை யொத்தவராய், குடிகளுக்கு ஆபத்து நேரிடும்போது கட்டியவஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல் உடனே அந்த ஆபத்திலிருந்து நீங்கும்படி காரியமது என்று காட்டுகிறபடியால் கண்போன்றவராய், குடிகளுக்கு அச்சம் அவலம் முதலானவை நேரிடாமல் காத்து வருதலால் உயிர் போன்றவராய், குடிகள் தம்மை நினைக்குந்தோறும் 'இப்படிப்பட்ட நற்குண நற் செய்கைகளையுடைய புண்ணியமூத்த்தையை அரசனாகப் பெற்ற நமக்குடக குறை யொன்றுடத இல்லை' என்று களிக்கின்றபடியால் பொன்புதையலை யொத்தவராய், கைம்மாறு வேண்டாது கொடுத்தலால் மேகத்தை யொத்தவராய், அறிவே ஆயிரங் கண்களாகவும் கைகளே கற்பகமாகவும் கண்களே காமதேனுவாகவும் திருமுகமே சிந்தாமணியாகவும் மனோதிடமே வச்சிராயுதமாகவுங் கொண்டபடியால் இந்திரனை யொத்தவராய், சிங்காதனமே செந்தாமரையாகவும் அறம் பொருள் இன்பம் வீடென்னுடத நான்கு பொருளுடம் அடைதற்குரிய நான்கு மார்க்மே நான்கு முகமாகவுங்கொண்டு அந்தந்த மார்க்கங்களில் அந்தந்தப் பொருள்களை விருத்தி பண்ணுகிறபடியால் பிரமனை யொத்தவராய், ஆக்கினாசக்கரமே சக்கராயுதமாகவும் செங்கோலே திருமகளாகயும் சிறந்த பெரும்புகழே திருப்பாற்கடலாகவும் யுக்தமல்லாத காரியங்களை யொழிந்திருப்பதே யோகநித்திரை யாகவுங் கொண்டு மண்ணுலகிலுள்ள உயிர்களைக் காத்து வானுலகிலுள்ள தேவர்களுக்கு யாகங்களால் அமுது கொடுத்து வருகின்றபடியால் திருமாலை யொத்தவராய், சோர்வில்லாமை து‘ய்மை வாய்மை என்னும் மூன்றுமே மூன்று கண்களாவும் துணிவுடைமையே சூலமாகவுங் கொண்டு பாவங்களை யெல்லாம் நிக்கிரஞ் செய்து வருகின்றபடியால் உருத்திர மூர்த்தியை யொத்தவராய், வாட்டத்தை நீக்கி மகிழ்ச்சி செய்கின்ற அருளுள்ள படியால் அமுதத்தை யொத்தவராய், சிவபக்தியில் மிகுந்தவராய், பொறுமையில் பூமியை யொத்தவராய், தருமமே உருவாகக் கொண்டு நடுநிலையிலிருந்து மனுநீதி தவறாது விளங்கிய மனச்சோழர் என்னும் பெயரையுடைய சக்கரவர்த்தியானவர், கலிங்கர் குலிங்கர் வங்கர் கொங்கர் அச்சியர் கொச்சியர் தெங்கணர் கொங்கணர் தெலுங்கர் முதலான தேசத்தரசர்க ளெல்லாம் திறைகட்டி வணங்க, உலக முழுவதையும் ஒருகுடை நிழலில் வைத்துச் செங்கோல் செலுத்தி அரசாட்சி செய்யுங்காலத்தில்: உலகமெங்கும் புலியும்பசுவும் கூடிப்போய் ஒரு துறையில் நீர்குடித் துலாவியும், சிங்கமும் யானையும் சேர்ந்து திரிந்தும், பருத்துங் கிளியும் பழகி மகிழ்ந்தும், கூகையுங் காகமும் கூடிப் பறந்தும், பூனையும் எலியும் பொருந்தி யிருந்தும், இந்தப்படி மற்றுமுடளள விரோதமாகிய உயிர்களுடத ஒன்றுக் கொன்று விரோதமில்லாமல் சினேகஞ்செய்து வாழ்ந்திருக்கவும், மரங்கள் புல்லுகள் முதலான நடையில்லாத உயிர்களும் வாடுதல் உலர்தல் உதிர்தல் வெட்டுண்ணல் முதலான குறைகளில்லாமல் வளர்ந்தோங்கி வாழ்ந்திருக்கவும், பெருங்காற்று பெருவெள்ளம் பெருமழை தீப்பற்றல் இடிவிழுதல் முதலான உற்பாதங்கள் சிறிதுமில்லாமல் சுகுணமான காற்றும் மிதமான வெள்ளமும் பருவமழையும் தவறா மல் உண்டாயிருக்கவும், பசிநோய் உடம்புநோய் அவமிருந்து உயிரச்சம் முதலான துக்கங்களொன்றுடத சேராமல் சுகமே சூழ்ந்திருக்கவும், பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் என்கின்ற ஜாதியாரும், பிரமசாரி கிரகஸ்தன் வானப் பிரஸ்தன் சந்நியாசி என்கின்ற ஆசிரமத்தாரும், சைவர் வைணவர் வைதிகர் என்கின்ற சமயத்தாரும், தங்கள் தங்களுக்குரிய ஆசாரங்களில் குறைவுபடாமல் வாழ்ந்திருக்கவும், அன்னதானம் சொர்ணதானம் கோதானம் பூதானம் முதலான தானங்களும் தேவாலயங் கட்டுவித்தல் திருக்குளமெடுத்தல் செழுஞ்சோலை வைத்தல் தண்¬ர்ப்பந்தல் வைத்தல் சத்திரங் கட்டுவித்தல் முதலான தருமங்களும், சாந்திராயண முதலான விரதங்களும், தியானஞ்செய்தல் ஜெபஞ்செய்தல் முதலான தவங்களும் தவறுபடாமல் ஓங்கியிருக்கவும், தியாகேசப் பெருமானுக்கும் மற்றுமுள்ள தெய்வங்களுக்கும் திரிகால பூசைகளும் திருப்பணிகளும் திருவிழா முதலான சிறப்புகளுடத குறைவில்லாமல் நடக்கவும் அவரது ஆக்கினையே செய்வித்து வந்தது.
-
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
தேவரீர் திருவருட் சமூகத்தை அடைந்த உண்மை ஞானிகளின் சித்தி வல்லப தரத்தை வகுத்தறிந்து வாழ்த்துதும் என்று அளவிகந்த முகங்களை கொண்டு அளவு கடந்த நெடுங்காலம் தத்தம் அளவைகளால் தனித்தனி அளந்தளந்தும் ஒருமித்து அளந்தளந்தும் ஒருவாற்றினும் முடிவு தோற்றாமையின் வேதாகமங்கள் அனைத்தும் ஆங்காங்கு கோடித்து அதிசயிக்கின்றன என்றும், அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் படைத்தல் காத்தல் துரிசு நீக்கல் முதலிய தொழில்களால் நிகழ்த்துகின்ற அதிகாரத் தலைவர்களும் எவ்வகைத் தத்துவங்களையும் காரண காரிய திறத்தால் நடத்துகின்ற சத்தி சத்தர்களும் உணர்ந்துணர்ந்தும் உணர்ச்சி செல்லாமையின் முயற்சி பற்றாது மயங்குகின்றன ரென்றும், பேரறிவாற் சிறந்த பெரியர்களெல்லாம் வியந்து வியந்து விளம்புகின்றனர். அதனால் திருவருட் சமூகத்தை யடைந்த உண்மை ஞானிகளின் சித்தி வல்லப தரத்தை ஒருவராலும் ஒருவாற்றானும் உணர்ந்து கொள்ளுதல் கூடா வென்று ஐயுறவின்றி அறிந்து கொண்டேன். இங்ஙனம் அறிந்துகொண்ட சிறியேன் அவ்வுண்மை ஞானிகளுக்கு சித்தி வல்லப தரத்தைக் கொடுத்தருளிய திருவருட் சமூகத்தின் இயற்கை உண்மை விளக்கத் தரத்தை எங்ஙனம் அறியத் தொடங்குவேன்!
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 079. நற்றாய் செவிலிக்குக் கூறல் naṟṟāy sevilikkuk kūṟal
5. திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
சிந்தையில் கலந்தனன் என்றாள்
பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
பேசுதல் அரிதரி தென்றாள்
இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
மருமலர் முகத்தே இளநகை துளும்ப
வயங்கினாள் நான்பெற்ற மகளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 108. சமாதி வற்புறுத்தல் samāti vaṟpuṟuttal
5. பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
திடுகின்றீர் பேய ரேநீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
நும்மனத்தை வயிரம் ஆன
சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
ஏன்பிறந்து திரிகின் றீரே.
-
திருவருண் மெய்ம்மொழி
ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு - மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, "இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்" என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி, அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு, அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளு நிமித்தம், ஈரேழு பதினான்கு உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால் - அங்ஙனம் வெளிப்படுந் திருவரவுபற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற்றானே, சுத்தசன்மார்க்க அரும்புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும், கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்தசன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாகலில், அவ்வொழுக்கங்கள் இவை என உணரவேண்டுவது.
-
மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு ஒழுக்கம் கருணை முதலிய நன்மைகளாற் சிறந்து சிவத்தைப் பொருளென் றுணர்ந்து சன்மார்க்கத்தில் விளங்குகின்ற தங்கட்கு வந்தனம் வந்தனம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 033. திருமுன் விண்ணப்பம் tirumuṉ viṇṇappam
6. சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 094. அழிவுறா அருள்வடிவப் பேறு aḻivuṟā aruḷvaṭivap pēṟu
6. சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 038. நெடுமொழி வஞ்சி neṭumoḻi vañsi
6. மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 007. நான் ஏன் பிறந்தேன் nāṉ ēṉ piṟantēṉ
6. அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 015. திருவடி முறையீடு tiruvaṭi muṟaiyīṭu
6. அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
பெருந்திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 109. உலகப்பேறு ulakappēṟu
7. குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 006. செளந்தர மாலை seḷantara mālai
7. சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
-
மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்
அன்புள்ள ஐயா - சுமார் இருபத்தைந்து தினத்திற்கு முன் இவ்விடத்திலிருந்து சிவஞான விருப்பினராகிய ராமலிங்க மூர்த்திகளும் சண்முகப் பிள்ளை என்பவரும் தங்களிடம் போய் வருவதாகக் குறித்து வந்தார்கள். அவர்கள் அவ்விடம் வந்திருப்பதும் வேறிடம் போயிருப்பதுந் தெரியவில்லை. தங்களிடத்தில் அவர்கள் இருந்தால், தற்காலம் அவ்விடத்தில் மழை யில்லாமையால் மிகவும் நிற்பந்தமாக விருப்பதாய் கேள்விப்படுகிறேன். ஆதலால், தாங்கள் அவர்களை இவ்விடம் வரும்படி செய்யவேண்டும். அவர்கள் தங்களிடத்தில் இல்லாமல் வேறிடத்தி லிருந்தால், அவ்விடம் இவ்விடமென்று எனக்குத் தெரிவிக்கவேண்டும். தாங்களும் சிவத்தியான சகிதர்களாய் தேக விஷயத்திலு மற்றைக் குடும்ப விஷயத்திலும் சர்வ சாக்கிரதையோடு இருக்க வேண்டும். நற்குணத்திலும் சிவபத்தியிலும் சிறந்த தங்கள் தம்பியார்க்கும் தங்கள் புத்திர சிகாமணிக்கும் என் க்ஷேமம் குறிக்க வேண்டும். நான் தற்காலம் கூடலூரி லிருக்கின்றேன். வந்தனம். நமது ராமலிங்க மூர்த்திகளுக்கும் வந்தனம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 024. வாதனைக் கழிவு vātaṉaik kaḻivu
8. அருளே வடிவாம் அரசேநீ அருளா விடில்இவ் வடியேனுக்
அருளே வடிவாம் அரசேநீ அருளா விடில்இவ் வடியேனுக்
கிருளே தொலைய அருளளிப்பார் எவரே எல்லாம் வல்லோய்நின்
பொருளேய் வடிவிற் கலைஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
தெருளே யுறஎத் தலைவருக்குஞ் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 026. தற்போத இழப்பு taṟpōta iḻappu
9. விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 032. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் aruṭperuñjōti eṉ āṇṭavar
9. இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 060. உலப்பில் இன்பம் ulappil iṉpam
9. தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந்
தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந்
நாயேன்பிழை யாவையும் கொண்டனை நன்மைஎன்றே
காயேகனி யாகக் கருதும் கருத்தனேநின்
சேயேஎன என்பெயர் எங்கும் சிறந்ததன்றே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 106. சுத்த சிவநிலை sutta sivanilai
9. வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 051. தனித் திருத்தொடை taṉit tiruttoṭai
9. பெண்குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணங்கொள்
பெண்குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணங்கொள்
நாயேன்றன் பிழைகள் எல்லாம்
எண்குணப்பொற் குன்றேநின் திருஉளத்தில்
சிறிதேனும் எண்ணேல் கண்டாய்
பண்குணத்தில் சிறந்திடும்நின் பத்தர்தமைப்
புரப்பதுபோல் பாவி யேனை
வண்குணத்தில் புரத்தியிலை யேனும்எனைக்
கைவிடேல் வடிவே லோனே.
-
உபதேசக் குறிப்புகள்
4. தெற்குப் பாகம், அக்கினிப் பிரகாசம்.
கிழக்குத் திக்கை நோக்கித் தியானம் செய்கிறது போகசித்தியைப் பெறுகிறதற்கு.
மேற்கு - சொர்ண சித்தியைப் பெறுகிறதற்கு.
தெற்கு - சாகாக்கலையை (நித்திய தேகத்தையும் ஞானசித்தியையும்) பெறுகிறதற்கு.
வடக்கு - சித்தசுத்தியைப் பெறுகிறதற்கு.
வடக்கு காற்புறம், தெற்கு தலைப்பாகம்.
இதனால்தான் தெற்கு ஞானத்தில் சிறந்தது; வடக்கு அஞ்ஞானத்தில் அழுந்தியது.
தலை கீழ், கால் மேல் என்பதற்கு நியாயம்:-
அடி கீழ், முடி மேல்.
அடி தலை, முடி கால்.
தலை கிழக்கு, கால் மேற்கு.
கிழக்கு தாழ்ந்தது, மேல் திக்கு உயர்ந்தது.
மேலும் இவற்றை அனுபவத்தால் அறிக.
பிண்ட திசை
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பனவற்றில்
தலை தெற்கு. கால் வடக்கு.
நெற்றி கிழக்கு.
முதுகு மேற்கு.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 007. நான் ஏன் பிறந்தேன் nāṉ ēṉ piṟantēṉ
10. காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 032. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் aruṭperuñjōti eṉ āṇṭavar
10. இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
-
மனு முறைகண்ட வாசகம்
அந்தக் கட்டளையை அன்புடன் தலைமேற்கொண்டு வணங்கி விடைபெற்று, மாதாவினிடத்தில் போய்ப் பக்தியுடனே பணிந்தெழுந்து கைகூப்பி நின்று "அநேக விரதங்களை அனுஷ்டத்து அடியேனைப் பெற்றெடுத்து, கண்களை இமைகள் காப்பதுபோற் காத்து வளர்த்த தாயே! அடியேன் தெய்வ சிகாமணியாகிய தியாகராஜப் பெருமானைத் தரிசனஞ் செய்யவேண்டும்; இதற்குத் தந்தையாருடைய சம்மதம் பெற்றுக்கொண்டேன்; இனி உமது உள்ளமும் ஒருமித்தருளவேண்டும்" என்று குறையிரந்துகொண்டான். அதுகேட்ட தாயானவர் உருக்கத்துடன் மனமகிழ்ச்சி கொண்டு முகமலர்ந்து முலைகளிலிருந்து பால் பீரிடவும் கண்களில் ஆசை நீரரும்பவும் தம் அருமைத் திருமகனை நோக்கி "இறைவனையும் என்னையும் நற்கதியிற் சேர்க்கவந்த நாயகமே! நாங்கள் முன்செய்த தவப்பயனாலே கிடைத்த முத்தமே! எங்கள் வருத்தமெல்லாந் தீர்க்கவந்த மாணிக்கமே! சிறந்த கண்மணியே! சுந்தர வடிவமுள்ள சூரியனே! சாந்தகுணமுள்ள சந்திரனே! பேரறிவுடைய பிள்ளாய்! நெடுநாளாகப் பலவிதமான தருமம் தானம் தவம் முதலானவைகளைச் செய்தும் பெற்றுக்கொள்ளாமல், தியாகேசர் சந்நிதிக்கு நடந்து அந்தக் கடவுளின் அனுக்கிரகத்தால் உன்னைப் பெற்றுக்கொண்டோம். அப்படிப்பட்ட பெருங்கருணையுள்ள பெருமானை நீ தரிசிக்கவேண்டுவது அடுத்த காரியந்தான். ஆதலால் நீ போய்க் கண்குளிரக் கண்டு தரிசித்து, 'உபநயனம் முதலான மங்கலக் கோலங்கண்ட நமது கண்கள் மணக்கோலமுங் கண்டு களிப்படைய வேண்டும்! என்று எண்ணியிருக்கிற என்னெண்ணம் விரைவில் முடியும்படி ஒரு வரத்தையும் பெற்றுவரக்கடவாய்" என்று விடை கொடுத்தார்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 061. செய்பணி வினவல் seypaṇi viṉaval
12. பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளகவே.2
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 096. பொன்வடிவப் பேறு poṉvaṭivap pēṟu
12. ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்
ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்
செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி
விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக
நிரந்தொன்றாய்330 நின்றான் நிலத்து.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 099. தத்துவ வெற்றி tattuva veṟṟi
14. பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு இரக்கம் ஒழுக்க முதலிய நற்குணங்களாற் சிறந்து நமது கண்மணிபோல் விளங்குகின்ற அன்புள்ள தங்களுக்கு சிவபெருமான் திருவருளால் சிவஞானமும் தீர்க்காயுளும் சிந்தித மனோரத சித்தியும் மேன்மேல் உண்டாவதாக. நாளது வரையில் இவ்விடத்தில் மகா ராஜ ராஜ ஸ்ரீ நாயக்கரவர்களும் யானும் க்ஷேமம். தங்களுடைய க்ஷேம விபரங்களை அடிக்கடி தெரிவிக்கவேண்டும். எனக்கு எழுதிய கடிதம் இரண்டும் வரக்கண்டு அறிந்தேன். அந்தக் கடிதங்களில் குறித்தபடி இதன் அடியில் சில சிவசந்நிதான சாட்சியாகத் தெரிவிக்கிறேன்.
-
மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்
கல்வி கேள்விகளிற் சிறந்து அருளறி வொழுக்கங்களி னியைந்து விளங்குகின்ற தங்கட்கு அனந்த முறை வந்தனம் வந்தனம். தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்ப முள்ளவனாக விருக்கிறேன். தாங்கள் கொத்தன் வசம் அனுப்புவித்த கடிதமும் நாகவல்லியும் சம்பீர பலங்களும் வரப்பெற்றோம். இவ்விடம் கடிதம் அனுப்புந் தோறும் இந்தப் பிரகாரம் அனுப்புவது பிரயாசம் என்று என் மனம் என்னை வருத்துகின்றது. இது நிற்க. இனி தங்கள் கடிதத்துக்கு உத்தரம் எழுதுகிறேன்.
-
முதல் திருமுறை / First Thirumurai 008. இங்கித மாலை iṅkita mālai
16. வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா
வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா
ருண்மை யறிவீர் பலியெண்மை யுணர்கி லீரென் னுழையென்றேன்
பெண்மை சிறந்தாய் நின்மனையிற் பேசும் பலிக்கென் றடைந்ததுநா
மெண்மை யுணர்ந்தே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
-
உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
ஆயின் ஓரிடத்தே மொழியாது அகத்தும் புறத்தும் மொழிந்தது என்னை யெனின்:- அக்காலை அருட்பொதுவின்கண் நின்ற அந்தணர் அறவோர் முதலிய பலரும் அவர்வழி மற்றையோரும் சேக்கிழாரென்னும் பேரிற் சிறந்த பேரறிவுடைய பெரியர் திருவருட்டுணையால் இப்பெருங் காப்பிய முடித்தனர். இஃது மாயைத் துணையால் தேவர் முனிவர் மனிதர் இயற்றிய மற்றைக் காப்பியங்கள் போல் எளிதன்று என்று அன்புகொண்டு அனுபவித்து உய்தற்பொருட்டும் அம் மெய்ம் மொழியைக் கேட்டுச் சேக்கிழாரது புறக்கரணங்கள் சுத்தியாதற் பொருட்டும், புறத்தே உலகெலாம் என்றெழுந்து தத்துவ படலத்தால் மயங்கிய அவரது ஆன்மதிருட்டியைப் படல நீக்கி அறிவு விளக்கிச் சுத்தி செய்தற் பொருட்டு அகத்தே உணர்ந்தோதற் கரியவன் என்று முடிந்த தென்க.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 118. சிவசிவ ஜோதி sivasiva jōti
19. சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் சோதி - என
துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 043. இறை திருக்காட்சி iṟai tirukkāṭsi
21. சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
சமரச சத்திய வெளியைச்
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
-
உபதேசக் குறிப்புகள்
18. மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது
இந்த மனிததேகத்தில் புருவ முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றி நெற்றி முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றா திருப்பதற்கு நியாயம் யாதெனில்: இத்தேகம் பாதாதி பிரமாந்திர பரியந்தம் வாயுவாலாகிய தேகம். மேற்படி வாயுவினுடைய பிருதிவி காரியமே தேக வடிவம். ஆதலால், வாயுவின் வர்ணம் செம்மை, கருமை நிற உரோமம் பிருதிவியின் கூறு. தேகத்தில் பிருதிவி வாயு இரண்டும் முக்கிய காரணமானதால், செம்மையும் கருமையுமாகிய உரோமம் உண்டாயிற்று. இது நிற்க. நரை உண்டாவது தத்துவக் கெடுதியால். இத்தேகத்தில் 27 இடங்களில் வாயுவில் பிருதிவி தங்கும். அவசியம் மேற்படி இடங்களில் ஆண்பாலுக்கு உரோமம் தோன்றும். மேற்படி இடங்கள் எவை எனில்:- கபாலம் 1, புருவம் 2, கண்கீழ் இமை 2, மேலிமை 2, நாசிக்கு உட்புறம் 2, மீசை 1, மோவாய் கன்னம் 2, காதுக்குட்புறம் 1, இருதயம் 1, கைம்மூலம் 2, உந்தியின் மேல் ரேகை 1, அடிவயிறு 1, லிங்கத்தடி 1, புட்டத்தின் கீழ்ப்புறம் 1, தொடை 2, முழந்தாள் 1, பாதத்தின் மேலிடம் ஒன்று, மேற்படி விரலின் மேலிடம் பலவும் 1, முதுகு 2, விலாப்புறம் 2, முழங்கைக்குங் கீழ் 2, கைவிரலின் மேற்புறம் 1 ஆக 27. இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.
நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது. பூர்வத்தில் விந்துவும், உத்தரத்தில் நாதமும் இருக்கின்றன. விந்து ஆன்மா, நாதம் பரமான்மா. நாதத்தோடு விந்து சேர்தலால், விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. விந்துவுக்சூ உத்தர நியாயம் பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் மற்றும் விளங்கி, தத்துவங்களைத் தன்வசப்படுத்தியும் தொழில்களைச் செய்வித்தும் தனித்து நின்றும் தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கின்ற படியால், விந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும். மேலும் ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி. இதற்கு அனுபவ சித்திகள் திரயோதசாந்தம் வரையிலு முண்டு.
திரயோதசாந்தமாவது யாதெனில்: ஜீவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. நிர்மலசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. பரசாக்கிரம், மேற்படி சொப்பனம் மேற்படி சுழுத்தி ஆக 3. குருசாக்கிரம், குருசொப்பனம், குருசுழுத்தி, குருதுரியம், குருதுரியாதீதம் ஆக 5, ஆக மொத்தம் 14. இதற்கு மேலுமுள சுத்தசிவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி, சுழுத்தி, மேற்படி துரியம், துரியாதீதம் - இவை சேருங்கால் ஜீவ சாக்கிராதி நீக்கப்படும். இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம்.
மேலும் பெண்களுக்கு உரோமம் தோன்றாதிருப்பதற்குக் காரணம் ஆணிடத்தில் 3-ம் பெண்ணிடத்தில் 4-ம் ஆக இருப்பதால், மேற்படி பெண்களுக்குத் தலை, புருவம், இமைக்கீழ் மேல், மூக்கினுட்புறம், கைம்மூலம், லிங்கத்தடி - இவைகள் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றாது அருகியிருக்கும். உரோமம் விசேஷம் மற்ற இடங்களில் உண்டாவது தத்துவக்கெடுதி. மேலும் உரோமம் தோன்றாதிருக்கிற இடங்க ளெல்லாம் விந்துவாகிய பிரகாசம் ஜாஸ்தியா யிருக்கும். மேற்படி விந்துக்கள் மோவாய், மார்பு ஸ்தனத்தின் கீழ்ப்புறம் - இவைகளில் நிரம்பி யிருக்கின்றன. அதனால் பெண்பாகம் உரோமம் இல்லை.
பரமாத்மா ஜீவாத்மா வென்னும் இரண்டின் நித்தியாநித்தியங்களையும் பிண்ட பேதத்தில் உயர்வுதாழ்வையும் காரியகாரண சம்பந்தங்களையும் தெரிவித்தல் யாதெனில்: சாமானியம் விசேடமென்று ஜீவன் இரண்டு. இவற்றில் சிறந்தது சாமானியம். தாழ்ந்தது விசேடம். ஜீவன் இரண்டென்ப தெவ்வாறெனில்: ஆன்ம காரணம் சாமானியம், ஆன்மகாரியம் விசேஷம். சாமானிய மென்பது ஆன்மஅறிவு, விசேட மென்பது மன அறிவு. இவை பூர்வோத்தரமா யிருக்கின்றன. பூர்வமென்பது லிங்கஸ்தானம். உத்தரமென்பது பிந்துஸ்தானம். ஆதலால் சிருட்டிக்குக் காரணம் லிங்கம். ஆதலால், சாமானிய ஜீவன் காரணப் பட விசேஷ ஜீவன் காரியப்படும். விசேஷ ஜீவ சம்பந்தமில்லாத பக்ஷத்தில் சிருஷ்டி காரியப்படாது. இது சாதாரண பாகம். அசாதாரண சம்புபக்ஷ சிருஷ்டியில் சாமானியத்தைக் கொண்டே விசேடத்தை வெளிப்படுத்திக் கொள்ளலாம். சாமானியம் சந்தானம், விசேட மதற்குள் ளடங்கியிருக்கும். பிரமாணம் யாதெனில்: அங்குலிகளில் நகத்திற்கு அடி சந்தானமும், வளர்ச்சி விசேடமும் போல.
மேலும், நெற்றியில் உரோமம் உண்டாகாத வஸ்துக்களெல்லாம் ஆன்மகாரணஅறிவு காரியப்பட்டது. மிருகாதிகளுக்கு உரோமம் உண்டான படியால் ஆன்மகாரண அறிவு காரணகாரணமாய் அருகியிருக்கின்றது. எப்படி எனில்: சர்வேசுரனென்னும் நாமத்தின் பிரத்தியேக ஆத்ம சைதந்நியமாகிய வஸ்து எங்கும் பூரணமாய் இருப்பது இயற்கையுண்மை ஏகதேசம்... ஆதலால், கடவுளை - அறிவதற்கு - ஆன்ம அறிவைக் கொண்டே அறிய வேண்டும். மேற்படி அறிவு ஆன்மவியாபக ஆலயமாகிய மனிதர் தேகத்தில் கடவுள் காரியப்படுவது உத்தமம்.
இதன்றி, சமய மத ஏற்பாட்டில் மகான்கள் குழுக்குறி - அடையாளங் - களாகப் பெயரிட்ட விக்கிரக பேதமாகிய சிலா, லோக, தாரு, தந்த, இஷ்டி முதலியவைகளில் கடவுள் காரியப்படுவது சரியை கிரியாதி பேதம் எட்டில் சரியையில் சரியை கிரியையில் சரியை - இவ்விரண்டையும் செய்கின்ற மந்தர்களினது நியாயம். மேலும் அதில் தோன்றி அனுக்கிரகிப்பதுஞ் சாலம். அருளுருவமான அறிவே உருவங்கொண்ட சிவத்தை அறிவாலே அறிவது உண்மை. மேலும் அனலுக்குச் சரியான கர்ப்பூரம், பஞ்சு, கரி, கட்டை முதலிய வஸ்துக்களில் அக்கினி சீக்கிரம் காரியப்படும். கதலி முதலிய வஸ்துக்களில் காரியப் படுவது தாமசம். அதுபோல், பக்குவான்மாக்க ளிடத்தில் கடவுளருள் வெளிப்பட்டால் சுத்தமாதி மூன்று தேகமும் அத்தருணமே வரும். பக்கவமில்லாதவர்களுக்கு அருள் செய்தால் வாழையினிடத்தில் அக்கினி காரியப்படுவது போலாம். ஆதலால், கடவுளருள் வெளிப்பவதற்கு அபக்குவிகள் தங்கள் செயற்கைக் குணங்களாகிய ராகத் துவேஷாதிகளை நீக்கல் வேண்டும். சினம் வெகுளி முதலியவற்றையும் நீக்கல் வேண்டும்.
சினமென்பது யாது? உள்வேக்காடு, புடநியாயம்போல், இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டம் பண்ணும். வெகுளி யென்பது மீசை துடித்தல், கண்சிவத்தல், கைமுதலிய உறுப்புகள் துடித்தல், வாய் குழறி மேல் விழுந்து கூவுதல் - இஃது ஆயுளை நஷ்டம் பண்ணும். ஆகையால், எவ்வகையிலும் கோபத்தின் பூர்வோத்தரமாகிய சினம் வெகுளி என்னும் கூற்றை ஒழித்தல் அவசியம்.
இதுபோல் மற்றக் கெடுதியாகிய காமக் குரோதாதி சம்பந்தங்களையும் நீக்கல் வேண்டும். காரணமென்பது கரண சம்பந்த முடையது. கரணமென்பது ஒற்றுமை வேற்றுமைத் தொழிற் றன்மை உடையது, மட்குடத்தைப்போல். மேலும், இலக்ஷணம் அடையாளம், இலக்ஷியம் அடையாளத்தை யுடையது. அங்கம் இலக்ஷணம். ஆதலால், இலக்ஷணம் இலக்ஷியம் அங்கம் காரணம் கரணம் முதலிய சம்பந்தங்களுமொன்று மில்லாது, கெடுதியாகிய தத்துவங்களை அடக்கல்வேண்டும்.
உரோமதத்துவமும் பிந்துஸ்தானமும்
மனித தேகத்தில் புருவ முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றியும், நெற்றி முதலாகிய இடங்களில் தோன்றாமலுமிருப்பதற்கு நியாயம்: இந்தத் தேகம் பாதாதி பிரமரந்திர பரியந்தம் வாயுவாலாகிய தேகம். ஆதலால் அதனுடைய பிருதிவி காரியமே தேகவடிவம். ஆதலால் வாயுவின் கூறு செம்மை. கருமயிர் பிருதிவியின் கூறு. இந்த நியாயத்தால் தேகத்தில் செம்மையும் கருமையும் கூடிய உரோமம் உண்டாயிற்று. நரை தத்துவக் கெடுதியால் நேரிட்ட ஆபாசம்.
இந்தத் தேகத்தில் 27 இடங்களில் வாயுவில் பிருதிவி தங்குகின்ற இடமாதலால் அவசியம் உரோமம் இருக்கும், மேற்படி இடங்களின் விவரம்: கபாலம் 1, புருவம் 2, கண்கீழ் இமை 3, மேல் இமை 4, நாசிக்குட்புறம் 5, மீசை 6, கன்னம் 7, காதுக்குட்புறம் 8, இருதயம் 9, கைம் மூலம் 10, உந்தியின் மேல்ரேகை 11, அடிவயிறு 12, லிங்கத்தடி 13, புட்டத்தின் கீழ்ப்புறம் 14, தொடை 15, முழந்தாள் 16, பாதத்தின் மேலிடம் 17, மேற்படி விரலின் மேலிடம் 18, முதுகு 19, 20, 21, விலாப்புறம் 22, 23, முழங்கையின் கீழ் 24, கணுக்கைக்கு மேல் 25, கைவிரலின் மேற்புறம் 26, இந்த இடங்களில் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றுவது தத்துவ ஆபாசம். தத்துவங்களினது உட்புற மலங்களே வாயுவின் பிருதிவியாதலாலும், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரியமில்லாததினாலும் உரோமம் தோன்றுகிறது.
அக்கினி காரியப்பட்ட இடங்களில் உரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கும் நெற்றியில் ஆன்ம விளக்கம் உள்ளது. அதனாலதற்குப் பிந்துஸ்தான மென்றும், அறிவென்றும், பாலமென்றும், முச்சுடரென்றும், முச்சந்தியென்றும், முப்பாழென்றும், நெற்றிக்கண் என்றும், கபாடஸ்தானமென்றும், சபாத்துவாரமென்றும், மகம்மேருவென்றும், புருவமத்திய மூலமென்றும், சிற்சபை யென்றும் பெயராம். ஆதலால் பிந்துவென்பதே ஆன்மா. பிந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம். ஆதலால் உரோமம் அருகியிருக்கிறது.
பிந்து நாதங்கள்
பூர்வத்தில் பிந்துவும் உத்தரத்தில் நாதமுமிருக்கின்றன. பிந்து ஆன்மா; நாதம் பரமான்மா. நாதத்தோடு பிந்து சேர்ந்தால் பிந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. பிந்துவுக்கு இது உத்தரநியாயம். பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்கித் தத்துவங்களைத் தன்வசப் படுத்தியும், தொழில்களைச் செய்வித்தும், தனித்தும், தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கிறபடியால், பிந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும்.
பாலஸ்தானம்
நாம் இருப்பது பாலஸ்தான மாதலால், பாலம் சிறந்தது. இதற்கு அனுபவ சித்திகள் திரயோசாந்தம் வரையில் உண்டு.
பெண் பிறவியும் பிந்து விளக்கமும்
ஆணிடத்தில் பிந்து விளக்கம் மூன்று பங்கும், பெண்ணிடத்தில் பிந்து விளக்கம் நான்கு பங்கும் இருப்பதால், பெண்களுக்குத் தலை, புருவம், இமைக் கீழ் மேல், மூக்கு உட்புறம், கைம்மூலம், லிங்கஸ்தானம் - இவை 7 ஸ்தானங்கள் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றாது அருகியிருக்கும். பெண்களுக்கு உரோமம் தோன்றாமல் இருக்கிற இடங்களெல்லாம் பிந்து விளக்கமாகிய பிரகாசம் ஜாஸ்தியாக இருக்கும். பெண்களுக்குப் பிந்து இருக்கிற ஸ்தானம் மூன்று: வாய், மார்பு, ஸ்தனத்தின் கீழ். உரோமம் விசேஷம் தோன்றுவது தத்துவ ஆபாசம்.
சாமானிய ஜீவன் விசேஷ ஜீவன் சாமானிய ஜீவன் விசேஷ ஜீவன் ஆக 2. இவற்றில் சிறந்தது சாமானியம்; தாழ்ந்தது விசேஷம். ஜீவன் இரண்டென்பதற்கு விவரம்: ஆன்மகாரணம் சாமானியம்; ஆன்மகாரியம் விசேஷம். சாமானிய மென்பது ஆன்மஅறிவு, விசேஷ மென்பது மனஅறிவு. இது பூர்வோத்தரமாய் இருக்கின்றது. பூர்வமென்பது லிங்க ஸ்தானம். உத்தரமென்பது விந்து ஸ்தானம். சிருட்டி முதலியவைகளுக்குக் காரணம் லிங்க ஸ்தானம். ஆகையால், சாமானிய ஜீவனே காரணப்பட்டு, விசேஷ ஜீவன் காரியப்படும். விசேஷ ஜீவ சம்பந்த மில்லாத பக்ஷத்தில் சிருட்டி நடவாது; இது சாதாரணம். அசாதாரணத்தில், சம்புபக்ஷ சிருட்டியில் சாமானிய ஜீவனைக் கொண்டே விசேடத்தை வெளிப்படுத்திக் கொள்வது. சாமானியம் சந்தான மாதலால் விசேடம் உள்ளடங்கி யிருக்கின்றது. நகத்துக்குச் சந்தானம் அடியும் விசேஷம் வளர்ச்சியும் போலவாம். மிருகாதிகளுக்குச் சாமானியம் காரியப்படாததனால் சாமானியம் இல்லையென்று சொல்லப்பட்டது. கடவுள் காரியப்படுவது
கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமமாக இருக்க, சிலாவிக்கிரக பூத தாரு முதலியவைகளில் வெளிப்படுத்திக்கொள்வது மந்த நியாயம். அதில் தோன்றி அனுக்கிரகிப்பதாகச் சொல்லுவது ஜாலம். காய்ந்த கட்டையினிடத்தில் அக்கினி அதி சீக்கிரம் பற்றுதல்போல், பக்குவர்களாகிய ஜீவர்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால், சுத்தமாதி மூன்று தேகசித்தியும் அத்தருணமே வரும். பக்குவ மில்லாதவர்க்கு அருள் செய்தாலும், வாழையினிடத்தில் அக்கினி செல்வது போலவாம். ஆதலால், கடவுள் அருள் வெளிப்படுவதற்குமுன் அபக்குவர்கள் தங்கள் செயற்கையாகிய ராகத்துவேஷாதி அசுத்தங்களைப் போக்கிக்கொள்வது உத்தமம்.
கோபம்
சினம் வெகுளி யென்பவற்றின் பொருள்: சினம் உள்வேக்காடு, புடநியாயம் போல். இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டஞ் செய்யும். வெகுளி மீசை துடித்தல், கண் சிவத்தல், கைகால் உடம்பு துடித்தல் முதலாகியவற்றை வெளிப்படையாகக் காட்டுதல். இதுவும் ஆயுளை நஷ்டம் செய்யும். ஆகையால் எந்த வகையிலுங் கோபங் கூடாது. அதை அவசியம் ஒழிக்க வேண்டியது.
காமக் குரோதங்கள் காமக் குரோதாதிகள் முதலிய பெருங் குறைகளை அவசியம் நீக்க வேண்டியது. காரணம்
காரணமென்பது கரண சம்பந்தமுடையது. காரணமென்பது ஒற்றுமை வேற்றுமைத் தொழில் தன்மை யுடையது, மட்குடத்தைப்போல்.
இலக்ஷணம்
இலக்ஷணம் அடையாளம்; இலக்ஷியம் அடையாளத்தை உடையது; அங்கம் இலக்ஷணம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 119. ஜோதியுள் ஜோதி jōtiyuḷ jōti
24. பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 107. ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்) ñāṉasariyai (vāypaṟai ārttal)
25. இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே அஞ்ஞான விருளில் அஞ்ஞான வுருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்திற் பயின்று ஏதுந் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையாற் பவுதீக உடம்பிற் சிறிதளவு தோற்றி விடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும், அது கொண்டு அறிவே வடிவாய், அறிவே யுருவாய், அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே யறிவாய், அறிவே யனுபவமாய் அனுபவிக்க தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே யுருவாய்க், குற்றமே பொறியாய்க், குற்றமே மனமாய்க், குற்றமே அறிவாய், குற்றமே அனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய் குற்றமே குறிக்குமென் றறிந்தோமாயினும், குற்றங்குறியாத வகை விண்ணப்பஞ் செய்வதற்கு ஒருவாற்றானு முணர்ச்சி யில்லோ மாதலிற் றுணிவு கொண்டு விண்ணப்பிக்கிறோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கியற்கையாதலின் இவ்விண்ணப்பங்களிற் குற்றங்குறியாது கடைக்கணித்தருளிக் கருணை செய்தல் வேண்டும்.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு கல்வி கேள்வி முதலியவற்றில் சிறந்து சிவநேயத்தில் நிறைந்து விளங்கிய தங்கட்கு வந்தனம் வந்தனம்.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
27. ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
விரும்பிஅருள் நெறிநடகக விடுத்தனைநீ யன்றோ
பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
புரிந்தவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
-
மூன்றாம் திருமுறை / Third Thirumurai 003. இரங்கன் மாலை iraṅkaṉ mālai
30. நலத்திற் சிறந்த ஒற்றிநகர் நண்ணும் எனது நாயகனார்
நலத்திற் சிறந்த ஒற்றிநகர் நண்ணும் எனது நாயகனார்
வலத்திற் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
நிலத்திற் சிறந்த உறவினர்கள் நிந்தித் தையோ எனைத்தமது
குலத்திற் சேரார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
33. இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு தயவு முதலிய சுபகுணங்களிற் சிறந்து நமது கண்மணி போன்றுள்ள நண்பர்க்கு வந்தனம் வந்தனம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
37. தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
37. தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்டு மற்ற மந்திரிகளெல்லாம் சேர்ந்து வணங்கி நின்று, "மஹாராஜனே! கூறியதே கூறுகின்றார்களென்று கோபஞ் செய்யாமல் யாங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டருள்வீராக; இந்தப் பசுவோ ஐயறிவுள்ள மிருகவர்க்கத்துள் ஒன்று; இது பெற்ற கற்றோ பால் கொடுத்தற்குரிய பசுவாகத்தக்கதன்று. ஏருழுதற்குரிய எருதாகத்தக்க சேங்கன்று; உமது புத்திரனோ ஆறறிவுள்ள ஆண்மக்களிற் சிறந்த நல்லறிவுடையவன்; அவனோ அக்கன்றைக் கொல்ல வேண்டுமென்று கொன்றவனல்லன்; இக்கொலையோ கன்றினுடைய ஊழ்வினையென்று உலகமெல்லாஞ் சொல்லும்; ஆதலால் இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதேமுறை" என்று சொன்னார்கள்.
-
உபதேசக் குறிப்புகள்
48. திருமந்திரமும் திருவாசகமும்
சாத்திரங்களிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இஃது மொத்தம் எண்ணாயிரம்; தோத்திரங்களிற் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
நற்குணங்களிற் சிறந்த நண்பராகிய தங்கட்கு வந்தனம் வந்தனம். தாங்கள் பங்குனி மாதம் 18ஆம் தேதி சுக்கிர வாரம் காலையில் எழுதி விட்ட கடிதம் வரக்கண்டு அதிலுள்ள சங்கதிகளை அறிந்து கொண்டேன். இதன் அடியில் எழுதுகின்றவைகளை கவனமாகப் பார்க்க வேண்டும். என்னெனில் நான் பங்குனி மாசக் கடைசியில் வருவதாக முன் குறித்திருந்தது உண்மைதான். ஆனால் நான் ஒருவர் நிமித்தம் ஒப்புக்கொண்ட ஒரு காரியம் இன்னும் முடிவுபெற இல்லை. அது பங்குனி மாதம் கடைசியில் முடிந்தாலும் அல்லது சித்திரை மாசத்தில் முடிந்தாலும் முடிந்தவுடன் பிரயாணப்பட்டு அவ்விடம் வருவேன். இது உண்மை. இது நிற்க, எனக்கு நிம்மதி யில்லாமல் தாங்க ளிவ்விடம் வந்தால் தங்களுக்கு எப்படி நிம்மதி வரும். வாராது. ஆதலால் நான் அவ்விடம் வருமளவும் தாங்கள் இவ்விடம் வாராமலிருக்க வேண்டும். இதை அலக்ஷியமாக எண்ணவேண்டாம். எந்த விதத்திலும் நான் அவ்விடம் வரத்தா னிருக்கிறேன். வருவேன் வருவேன். அவசரப்படவேண்டாம். அவசரப் பட்டால் நிம்மதி வாராது. ஆதலால் பொறுத்திருங்கள். எவ்விதத்திலும் என் இஷ்டப்படியே தாங்களிருந்தால் நன்மை. இது உண்மை உண்மை. கடிதம் அகப்படாத குறையால் இந்த மட்டில் எழுதினேன். மன்னிக்க வேண்டும். வந்தனம்.
-
மனு முறைகண்ட வாசகம்
"இதன் கன்றோ பால்கொடுத்தற்குரிய பசுவாவதில்லை, ஏருழுதற்குரிய எருதாகத் தக்க சேங்கன்று' என்று சொன்னீர்க தேவர்களெல்லாம் பிறப்பதற்குத் தவஞ் செய்கின்ற மகத்துவ முள்ள இந்தத் திருவாரூரிலே பிறந்த எல்லா உயிர்களும் சிவகணங்க ளென்கிற சித்தாந்தப்படி, இந்த க்ஷேத்திரத்திலே பிறந்த இக்கன்றைச் சிவகணமென்று கொள்வதை விட்டு, சேங்கன்றென்று சொல்லப்படுமோ? 'புத்திரனோ ஆறறிவுள்ள ஆண் மக்களிற் சிறந்த நல்லறிவுள்ளவன்' என்றீர்க சிவதரிசனஞ் செய்யத் தேரூர்ந்து போய்ச் செல்வ மறைப்பினாற் கண்மறைந்து கன்றைக் கொன்றவன் நல்லறிவுள்ளவனென்று சொல்லப் படுவனோ? கன்றிறந்ததை ஊழ்வினையென்று உலகஞ் சொல்லு மென்றீர்கள்; பிராரத்துவ வாதிகளுக்கல்லாமல், காமக் குரோதாதிகளாற் பாவங்களைச் செய்வதற்குச் சீவனே ஆகாமிய கர்த்தாவென்று கொள்ளுகிற உத்தமமார்க்கத்தை யுடையோர்க்கு ஊழ்வினை யென்று சொல்லத் தகுமோ? 'இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதே முறை' யென்றீர்கள்; மலையை யெடுத்துண்டு வயிறு நோகின்றவனுக்குச் சுக்கிடித்துக் கொடுத்துச் சொஸ்தப் படுத்துவார்களோ? அதுபோலக் கொலைப்பாதகஞ் செய்தோர்க்குப் பிராயச்சித்தஞ் செய்வித்துப் பாவநிவர்த்தி செய்யப்படுமோ? அவ்வாறு செய்வேனானால் என்றும் மீளா நரகத்தில் என் புத்திரனை விழுத்துவதுமன்றி, யானும் விழுந்து வருந்துவேன்; இவ்வுலகத்தினும் மீளாத பழிக்கு ஆளாகச் சமைவேன்; அன்றியும் எண்ணிறந்த பெருமை பெற்ற இரவி குலத்திற்கம் என்னை யடுத்திருக்கின்ற உங்களுக்கும் ஓரிழுக்கு வார்த்தையும் உண்டாகும். ஆதலால், இனி என் சொல்லுக்கிரண்டில்லை; இந்தப் பசுவின் கன்றைக் கொன்ற பழிக்கு ஈடாக என் புத்திரனைக் கொலை செய்வதே நிச்சயமாகிய தீர்ப்பு" என்று சொல்லிவிட்டு, பின்பு மந்திரிகளுக்குள் கலாவல்லபன் என்கிற மந்திரியைப் பார்த்து "மந்திரி! என் புத்திரனை யழைத்துப்போய் அந்தக் கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கடத்தி, நீ தேரிலேறிக் கொண்டு அவனுடம்பின்மேற் தேர்ச்சக்கர மேறும்படி செய்து கொலை செய்து வருவாய்" என்று கட்டளையிட்டார். அப்போது மற்ற மந்திரிகளெல்லாம் கைநெரித்துக் கொண்டு கண்களிலே நீரரும்ப மனங்கலங்கிப் பிரமைகொண்டு நின்றார்கள்.
-
மனு முறைகண்ட வாசகம்
கலாவல்லப னென்கிற மந்திரியானவன், கடுந்தவம் புரிந்து பெற்ற கவுத்துவ மணியைக் கடலிலெறிந்து விட்டு வாவென்றும், பலநாள் வருந்தி வளர்த்த பஞ்சவர்ணக் கிளியைப் பருந்துக் கிரையிட்டு வாவென்றும், செய்தற்கரிய தவஞ் செய்து பெற்ற தேவாமுதத்தைச் சேற்றிற் கழித்த வாவென்றும் சொல்லக் கேட்டவன்போல் திடுக்கிட்டு உணர்வழிந்தும், திகைப்பூண்டு மிதித்தவன்போல் மயங்கி நின்றும், சற்று உணர்வுதோன்ற அது விஷயத்தில் மனமில்லாதவனா யிருந்தும் அரசன் ஆணையைத் தடுப்பதற்கு அஞ்சி வணங்கி விடைபெற்றுக் கொண்டு, அவ்விடம் விட்டுப் புறப்பட்டுத் தளர்ந்த நடையோடு முகங்கருகி நெடுமூச்ச விட்டுக்கொண்டு, "சிவசிவா! சம்போ! சம்போ! இந்தப் பாதகஞ் செய்யத்தானோ நான் மந்திரியாக ஏற்பட்டேன்! கொலையென்று சொல்லுகின்றோர்களைப் பார்த்தாலும் பயங் கொள்ளுகின்ற எனக்கத்தானோ இப்படிப்பட்ட விதி வரவேண்டும்! இந்தக் காரியத்தைச் செய்யாது விடுவோ மென்றால் அரசன் கட்டளையைக் கடந்தா னென்னுங் குற்றம் நேரிடுமென்றும், அல்லது செய்வோமென்றால் நமது உயிர்போற் சிறந்த வீதிவிடங்கன் விஷயத்தில் எப்படிக் கொலைசெய்யத் துணிவு உண்டாகுமென்று எண்ணி யெண்ணி என் மனம் இருதலைக் கொள்ளிக்குள் அகப்பட்ட எறும்புபோல் திகைக்கின்றதே! இதற்கு என்ன செய்வேன்! என்ன செய்வேன்!" என்று வருந்தி வருந்தி ஒரு கால் முன் வைப்பதும் மற்றொரு கால் பின் வைப்பதுமாகி ஊசலாடுகின்றவனைப் போல் அலைந்தும், வேந்தன் விஷமுண்ணென்று கட்டனையிடினும் உண்ணவேண்டிய உரிமை நமக் கிருக்கிறபடியால் போய்த் தொலைப்போம் என்று சற்றே நடந்து, 'எண்ணுதற்கும் யோக்கியமல்லாத இப்பாதகத்தை யெப்படிச் செய்வோம்' என்று சற்றே நின்று நடைத்து‘க்கங் கொண்டவன்போல் தெளிந்தும் மயங்கியும், பித்தம் பிடித்தவன்போல் பிதற்றியும், கண்¬ர் சொரிந்து கலங்கினாவனாகிப் பின்பு தெளிந்து, அரசன் நமக்கும் தந்தையாதலால் வீதிவிடங்கன் செய்த குற்றத்தை நாமேற்றுக் கொண்டு நம்முயிரைக் கொடுத்துவிடுவோம்' என்று துணிவுகொண்டு, அக்கன்று இறந்து கிடக்கிற வீதியினிடத்து அணைகடந்த வெள்ளம்போல் அதிவேகமாக வந்து நின்று, தன்னரையி லிருந்த உடைவாளை உறையிலிருந்துருவியெடுத்துக்கொண்டு, தனது கழுத்தில் வைத்து ஊட்டியை அரிந்துகொண்டு உயிரிழந்து விழுந்தான்.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு கல்வி கேள்வி முதலியவற்றில் சிறந்த தங்களுக்கு வந்தனம். தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன். தங்கள் மனத்திலுள்ள குறிப்பை சிரஞ்சீவி சுந்தரப் பிள்ளையால் தெரிந்து கொண்டேன். தாங்கள் உலகநடை தெரிந்த விவகாரிகளாதலால் தாங்களே தங்கள் கருத்தின்படி செய்துக்கொள்வதில் யாதொரு விகற்பமும் நேரிடாதென்று நம்புகிறேன்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
நற்குணங்களிற் சிறந்து சிவானுபவ விருப்பத்திற் சித்தத்தை வைத்து நமது கண்மணிபோல் விளங்கிய சிரஞ்சீவி இரத்தின முதலியாருக்கு தீர்க்காயுளும் சிவக்கியானமும் சகல சம்பத்தும் மேல் மேல் உண்டாவனவாக.
-
மனு முறைகண்ட வாசகம்
ஆகாயத்தினிடமாக இவ்வதிசயத்தைப் பார்க்கும்படி வந்திருக்கின்ற தேவர்களெல்லாம் "இந்த மனுச்சக்கரவர்த்தியானவன் செய்யத் துணிந்த காரியம் இவனுக்க முன்னிருந்த அரசர்களுக்குச் சொல்லத்தான் கூடுமோ? அல்லது நினைக்கத்தான் கூடுமோ? இம்மனிதர்களைப் பார்க்கிலும் உயர் பிறப்பினராகிய நம்மவர்களுக்குத் தான் செய்யக் கூடுமோ? இவ்வரசன் நீதியிலும் மனோதிடத்திலும் சிறந்தவனாக விருக்கின்றான். இவனுக்குச் சிவகடாக்ஷம் கைகூடுமல்லது மற்றவர்களுக்கக் கூடுமோ? ஆயினும், இன்னும் நடக்கப் போகிற அற்புதங்களை யெல்லாம் பார்த்தறிவோம்" என்று புகழ்ந்து சொல்லி நின்றார்கள்.
-
புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு இரக்கம் ஈஸ்வரபக்தி முதலிய நற்குணங்களாற் சிறந்த, எனக்கு நற்றுணையாக விளங்கிய தங்கள் சமுகத்திற்கு வணக்கஞ் செய்து வரையும் விண்ணப்பம்.
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்டுக் கொலைவீரர்கள் மனம் பதைத்து மதிமயங்கி நின்றார்கள். அப்பொழுது தந்தையாகிய மனுச்சக்கரவர்த்தியின் கட்டளையைக் கேட்டு மயங்கி நிற்கின்ற கொலைவீரர்களை வீதிவிடங்கன் பார்த்து, "நீங்களேன் மயங்கி வருந்துகின்றீர்கள்? அந்தக் கட்டளையின்படி நானே செய்து கொள்ளுகிறேன்" என்று சொல்லித் தியாகராஜப் பெருமான் சந்நிதிக்கெதிராகத் திரும்பி இரண்டு கைகளையுங் குவித்துச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு "சிறு பிள்ளைக்குத் திருப் பாற்கடலை அழைத்துக் கொடுத்த தியாகராஜப் பெருமானே! அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுயம்பிரகாச சாட்சாத்கார சிதாகாச சொரூப சின்மயனாகிய சிவசங்கரனே! அடியேன் பசுங்கன்றைக் கொன்ற பாதகனாயினேன். அதுவும் போதாமல் ஐயோ! எனக்கு நல்வழியைக் கற்பித்துக் கண்போல் விளங்கிய நின்னடிமையிற் சிறந்தவனாகிய மதியுள்ள கலாவல்லபனென்கிற மந்திரியையும் இறப்பிப்பதற்குக் காரணமாகியிருந்தேன்? இப்படிப்பட்ட என்போல் பாவிக ளெங்கேயுண்டு? என் பிதா தண்டிக்கப்போகிற தண்டனை என் பாதகத்துக்குத் தக்க தண்டனையுமல்லவே! என்ன செய்வேன்! பாவியாயினும் எனக்கு வேறொரு கதியுமில்லாதபடியால், முன் தாயைக் கூடித் தந்தையைக் கொலை செய்தவனது மாபாதகத்தை மன்னித்து அனுக்கிரகஞ் செய்ததுபோல், அடியேனுக்கும் அனுக்கிரகஞ் செய்ய வேண்டும்; என் பிதாவுக்கும் எனக்கும் உரித்தாகியிருந்த மற்றவர்களுக்கும் என்னைப் பற்றி வந்த பழி பாவங்களை நீக்கியருள வேண்டும்; என்பொருட்டு இறந்த மந்திரியை யெழுப்பிக் கொடுத்தருள வேண்டும்; இதோ இந்தப் புலாலுடம்பைப் போட்டுவிட்டு வருகிறேன்; என்னையுந் திருவடி நீழலிற் சேர்த்துக்கொள்ள வேண்டும்; இந்தப் பிறப்பிலே யெனக்குத் திருவடி கிடையாதானால் வரும் பிறப்பிலாயினுங் கிடைக்கத் தக்க நல்லறிவும் பேரன்பும் உள்ளவனாகப் பிறப்பிக்க வேண்டும்" என்று சொல்லி விண்ணப்பஞ் செய்துகொண்டு திரும்பி நின்று, மாதா பிதா குரு முதலானவர்களுக்கும் மனத்தினால் வந்தனஞ் செய்து, "இம் மனுச்சோழருடைய செங்கோல் மாறாது நிலைபெற்றிருக்க வேண்டும்" என்று இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டு பஞ்சாட்சரத்தை யுச்சரித்துக் கொண்டு விழுந்து வடக்கே தலையும் தெற்கே காலும் வைத்துக் கொண்டு இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு சிந்தையைச் சிவபெருமான் திருவடித் தியானத்தில் வைத்துக்கொண்டு யோகநித்திரை செய்பவன்போல உடம்பைக் கிடத்தினான்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு முதலிய நற்குணங்களிற் சிறந்து சிவநேசத்தான் மேம்பட்டெமது கண்மணி போன்று விளங்கிய சிரஞ்சீவி ரத்தின முதலியாருக்கு சிவக்கியானமும் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன் மேல் உண்டாவதாக. அவ்விடத்திய சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். தாம் ரிஜிஸ்டர் செய்வித்து அனுப்பிய கடிதமும் அதற்குள் அடங்கிய இருபத்தைந்து ரூபாய் நோட்டும் தாமசப்படாமல் வந்து சேரப் பெற்றுக்கொண்டேன். இது விஷயத்தில் தமக்கு விசேஷம் பிரயாசம் நேரிடச் செய்கிறேன். ஆயினும் அந்தப் பிரயாசம் சிவ கடாக்ஷத்தால் நேரிட்டதாகலின் பின்பு தமக்கும் எனக்கும் தடைபடாத நிம்மதியையும் சத்துவ சந்தோடத்தையும் உண்டுபண்ணுமென்கிற நிச்சயித்தினால் நாணாது தெரிவிக்க நேரிட்டது. ஆனால் இது குறித்து விசேஷ முயற்சியும் பிரயாசமும் தமக்கு நேரிடுமே என்ன செய்வது என்கிற விசாரமும் ஒரு பக்கம் உடையவனாகவேயிருக்கிறேன். இனி வேறு வகையாற் பலவாக விரிப்பதென்ன. நானே தாமாகவும் தாமே நானாகவும் பழமை தொட்டு வந்த அபேத நேயத்தை எண்ணி, மற்ற இடங்களில் கனவிலும் லக்ஷியஞ் செய்து குறிக்கப்படாத குறிப்பை தம்மிடத்தே குறித்தேன். இது எம்பெருமானுக்கும் சம்மதமாகவிருக்கும். ஆகலில் தமக்கும் சம்மதமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவை தாம் வாங்குகிற இடமும் வாங்குகிற வகையும் அதற்கு எல்லையிட்டுக் கொண்ட வண்ணமும் மற்றவைகளையும் தெரிவிக்க வேண்டும். இவ்விடத்தில் மகாராஜராஜஸ்ரீ நாயக்கர் அவர்களும் யானும் மற்றவர்களும் க்ஷேமம்.
-
முதல் திருமுறை / First Thirumurai 007. வடிவுடை மாணிக்க மாலை vaṭivuṭai māṇikka mālai
67. என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு தயவு முதலிய நற்குணங்களிற் சிறந்து எனது கண்மணி போன்று எனது இதயத்திருக்கும் சிரஞ்சீவி ரத்ந முதலியார்க்கு சிவக்கியானமுந் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக. தாம் அனுப்பிய கடிதமும் பங்கியில் அனுப்பிய புத்தகங்களும் வந்து சேர்ந்தது. சேர்ந்தவென்று தெரிவிப்பதற்கு அமைதியின்மையில் கால நீட்டித்தது. ஆதலின் அது குறித்து வேறு நினைக்க வேண்டா.
-
உபதேசக் குறிப்புகள்
76. பிபீலிக விகங்க* நியாயங்கள்
ஆன்ம லாபம் அடைவதற்கு நியாயம் இரண்டு. என்னெனில்: பிபீலிகா நியாயம்; விகங்க நியாயம். இவற்றுள் சிறந்தது விகங்கம், பலவகை இம்சையால் போகத் தடைப்பட்டுப் போவது பிபீலிகா மார்க்கம்.
* பிபீலிகம் - எறும்பு, விகங்கம் - பறவை, அன்னம்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 020. பிள்ளைப் பெரு விண்ணப்பம் piḷḷaip peru viṇṇappam
82. பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 020. பிள்ளைப் பெரு விண்ணப்பம் piḷḷaip peru viṇṇappam
86. சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால்
நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பறிவொழுக்கத்தாற் சிறந்து நமது கண்கள் போன்று விளங்கிய சிரஞ்சீவி ரத்ன முதலியார்க்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் சிவக்கியானமும் மேன்மேல் உண்டாவனவாக. இங்கு மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்களும் யானும் க்ஷேமம். அங்கு தமது சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன்.
-
உபதேசக் குறிப்புகள்
94. ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்
சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.
ஷடாந்த சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது? வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம்: வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.
இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரசசுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள் அநந்நியமாய் விளங்கும்; அந்நியமல்ல. மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை எனில், சமய சன்மார்க்கம் மதசன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.
மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரச முளதோவெனில்: உளது. யாதெனில்: வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.
இதன் தாத்பரியம் யாதெனில்: சமரசம் என்பதற்குப் பொருள் - எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.
சன்மார்க்கம் என்பதில் வகை தொகை விரிவு அனந்தம். இதன் தாத்பரியம் யாதெனில்: சமய சன்மார்க்கத்தின் பொருள் குணத்தினது லக்ஷியத்தை அனுசந்தானஞ் செய்வது. குணமென்பது யாது? சத்துவகுணம். இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவ குணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய மார்க்கம் யாதெனில்: சத்போதம், சத்கர்மம், சத்சங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சற்சனம், சற்செய்கை முதலியனவும் சத்துவ சம்பந்தம் உடையன. இதனியல்பாவன: கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரியநிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.
சமயாதீத மாவது மதம். மத சன்மார்க்கத்தின் பொருள் நிர்க்குண லக்ஷியஞ் செய்வது. நிர்க்குணமாவது பூர்வகுண மாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல். யாதெனில்: சோகம், சிவோகம், தத்வமசி, சிவத்துவமசி என்னும் வாக்கியத்தில் முக்கியானுபவம். அனுபவம் என்பது யாது?.... சத்துவகுண நிர்க்குண லட்சியத்திற்கு மார்க்கம் நான்கு: எவை எனில் சத்துவ குணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், இரண்டாவது புத்திரனாகப் பாவித்தல், மூன்றாவது சிநேகிதனைப் போலப் பாவித்தல், நான்காவது தன்னைப்போலப் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரனாதல், சிநேகனாதல், கடவுளேதானாதல். இது சத்துவகுண லட்சியார்த்த மாகிய மத சன்மார்க்க முடிவு.
சத்துவகுண விளைவு என்பதற்குப் பொருள் சத்துவகுணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞானசித்தியைப் பெறுதல். நெல்லை விதைத்தான் என்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்த்து அனுபவிக்கிற பரியந்தம் அடங்கியிருப்பதுபோல் சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருளெனக் கொள்க. குண நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம். இம் மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.
சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்: சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்களைக் கடந்தது. சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலை பெறில் விளங்கும். ஏகதேசத்தில் ஒருவாறு பூர்வம் என்பதற்குப் பொருள்: சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவ மீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களி லொவ்வொரு கிருத்தியத்தின் விரிவு ஐந்தாக விரிந்த கர்த்தர் பேதம் இருபத்தைந்தாக விரிந்த மஹாசதாசிவாந்த அனுபவ காலத்தை அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு எவ்வளவோ அக்கால அளவு சுத்த மகா சதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியா யிருப்பது. சத்தென்பது பரிபாஷை அது அனந்த தாத்பர்யங்களைக்கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பது யாதெனில்: துவாரம், வழி, வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். ஆதலால், எவ்வகையினும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீதஅதீதம், லட்சியாதீதஅதீதம், வாச்சியாதீதஅதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்.
மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள்: எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யக்ஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மேற்குறித்த மார்க்கத்தின் முடிபு. ஒருவாறு.
சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழூஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திர வாசக பதவர்ணாதிகளை உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும், காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட் ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின் உண்மை ஆன்ம அனுபவத்திலும் வகர தகர வித்தையிலும் விளங்கும்.
மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.
சன்மார்க்க சங்கம்
சமரச வேத சன்மார்க்க சங்க மென்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சத்புத்திர மார்க்கம், மித்திர மார்க்கம், சன்மார்க்கம்.
சத்திய மார்க்கம்
ஷடாந்தங்களினது அனுபவம் ஒன்றானாலும் காலம் இடம் முதலியவற்றால் அவை வேறுபடும். ஆதலால் ஷடாந்தங்களு மிப்போது வெளிக்கு வியாபகமில்லாம லிருக்கின்றன. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இந்த 2-ல் வேதாந்தத்தில் போதாந்தமும் யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்தமும், கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. ஆதலால் வேதாந்த சித்தாந்தமே சிறந்தது. வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீத சுத்த சன்மார்க்கமே நீடூழி அழியாத சத்திய மார்க்கம்.
சமரசம்
சமரசமென்பது யாது? எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாயிற்று. இதற்கு நியாயம்: விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த விந்துவானது போலும்: சிவம் பரசிவம் இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது போலும்; சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இவ்விரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். ஆகவே ஷடாந்த சமரசசுத்த சன்மார்க்க மென்று மருவியது.
சத்துவகுண லட்சியம்
சன்மார்க்க மென்பது யாது? அது 3 வகைப்படும். சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.
சமய சன்மார்க்கமாவது சத்துவகுண லட்சியானு சந்தானம். சத்துவகுண சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய சேர்க்கை யெல்லாம் சன்மார்க்கம். அதாவது சத்போதம், சத்கர்மம், சத்ஸங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சத்ஜனம், சத்செய்கை முதலியவை சத்துவகுண சம்பந்தமானவையாம். சத்துவகுண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்ணியம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இந்த உண்மையைக் கொண்டு சத்துவ குணத்தின் வாச்சியத்தை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்.
சமயாதீத மத சன்மார்க்கம் - நிர்க்குண லட்சியமாகிய சத்துவ குணத்தின் லட்சியார்த்தத்தைக் கொள்வது மத சன்மார்க்கம். அதாவது சோகம், சிவோகம், அவன், அவள், நான் என்னும் அனுபவம். அதாவது சத்துவகுணத்திற்கு மார்க்கம் 4. சத்துவகுணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், 2-வது புத்திரனைப் போல் பாவித்தல், 3-வது சினேகிதனைப்போல் பாவித்தல், 4-வது தன்னைப் போல் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாகுதல், புத்திரனாகுதல், சிநேகிதனாகுதல், கடவுளே தானாகுதல். இது சத்துவ குண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கத்தின் முடிபு. சத்துவ குணத்தின் விளைவென்று சொன்னதற்குப் பொருள் சத்துவ குணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வசித்தியோடு ஞானதேகம் பெறுகிறவரையில் உள்ள அனுபவம் நெல் விளைத்தா னென்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்க்கிறவரையில் அதன் தாத்பரிய மடங்கி யிருப்பது போல்.
சுத்தம்
சுத்த சன்மார்க்கமாவது குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதங்களினது அனுபவமன்று. சுத்த சன்மார்க்க மென்பது சத் சன்மார்க்கமேயாம். சுத்தமென்பது ஒன்றுமில்லாதது. ஆதலால், சுத்தமென்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன் வந்தமையால், முன் சொன்ன சமயமதங்களைத் தாண்டினது. அதன் அனுபவங்களையும் கடந்தது.
சத்மார்க்கம்
சத்மார்க்கம் என்பதற்குப் பொருள் 4 வகை: பூர்வம், பூர்வ பூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். ஆதலால் இதன் முக்கிய லக்ஷ்யம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும். பூர்வம் என்பதற்குத் தாத்பரியம் ஒருவாறு: சிருஷ்டி, ஸ்திதி, சம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்திய தத்துவங்களைக் கர்த்தாவாக வழங்கி வருகிற பிரமா விஷ்ணு ருத்திரன் மயேசுரன் சதாசிவமென்னும் தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, மேற்படி ஸ்திதி, மேற்படி சம்மாரம், சிருஷ்டியில் திரோபவம், மேற்படி அனுக்கிரஹம் இதுபோல் 5 ஆக விரிந்த தத்துவங்கள் 25. இந்த இருபத்தைந்தையும் அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய காலம் எவ்வளவோ அவ்வளவு கால பரியந்தம் மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்த தேகியாக இருப்பது. வருஷம் தொகை மொத்தம் ஒரு கோடி அறுபது லக்ஷம்.
சத்தென்பது பரிபாஷை. குழூஉக்குறிப் பெயர். அனந்த தாத்பரியத்தைக் கொண்டு ஓர் மொழியானது. மார்க்கமென்பது வழி. வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். ஆகையால் எவ்வகையிலும் உயர்வுடையது சுத்த சன்மார்க்கம்.
சன்மார்க்கத்தின் ஏகதேசமென்பது எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது.
சர்வ சித்தி
சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்தினும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை யுண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா மூர்த்திகள் ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்குமேல் இரா.
சமய மதங்களினும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம் இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாக, சமரசசுத்த சன்மார்க்கமென மருவின. இதற்குச் சாதனம் ஒருவாறு ஷடாந்த சமரசம்.
ஆன்மாவுக்கு அனன்னிய அருள் எப்படியோ, அதைப்போல் சுத்த சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ சித்தியாம். சத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று. ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1, சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3: சிற்சபை 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3. இவைகள் மூன்றுந்தான் படிகளாக இருக்கும்.
சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாய் தெரிவிப்பார்.
பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்
பரிபாஷை - அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.
சாத்திய நிலை
சமய மத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அனேக பெரியோர்களும் சுத்தப் பரப் பிரமத்தினிடத்தில் இரண்டறக் கலந்துவிட்டதாக முறையிடுவது வாஸ்தவமா அவாஸ்தவமாவென்றால், அவாஸ்தவம். சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும். என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிக ளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை. தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர். மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.
-
ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
இந்நூல் இயற்றற்கேற்ற நற்பொருளுடைமையுஞ் சிறப்புப்பாயிர இலக்கணத்துள் ஆக்கியோன் பெயரே என முதனிறுத்தப்பட்ட நிமித்த காரணச் சிறப்புடைமையும் இச்செய்யுள் முடிபுக்கு எழுவாயாந் தலைமையுடைமையும் பற்றி வள்ளல் என முதல் நிறுத்தியது என்க. இந்நூலாசிரியர்க்கு ஆசாரியர் இவரென்பது தோன்றற்கு அவ்வள்ளல் என்பதன் புடை குருராயன் என்பதை நிறுத்திய தென்க. இங்ஙனம் ஆசாரிய ரென்பவர் பிள்ளையார் என்பது தோன்றற்கு ஞானசம்பந்தனென வைத்தல் வேண்டுமாகலின் அந்த ஞானத்தைக் குறிக்கும் பாசவெற்றியாய 'வாது வென்ற' என்பது முன் கூட்டிச் சம்பந்தன் என அதன்புடை நிறுத்திய தென்க. இரண்டாம் அடிக்கண் பிள்ளையார் தாள்கள் நிறுத்தத் தொடங்கி முன்னர் அத்தாள்களின் இயற்கை அருளென்று குறிக்க வள்ளல் என்றும், அதன் வடிவம் ஆனந்த மென்று குறிக்க மலரென்றும் முறையே வைத்து வள்ளல் மலர்த்தாள் என நிறுத்தியதென்க. தாள்களன்றியும் பிள்ளையாரும் அருளியற்கையரே என்பது குறிக்கச் சம்பந்தனென்னுஞ் சத்தந் தோற்றியவுடன் வள்ளற் சத்தந் தோன்ற நிறுத்தியதென்க. இங்ஙனம் நிறுத்தியவை சொற்பொருண் முறைநிலை. தாள் என்பதற்கும் தலை என்பதற்கும் உள்ள சொற்பொருள் சம்பந்த இன்பம் பற்றித் தாடலை என்றும், தலை என்பதற்கும் மேலென்பதற்கும் உள்ள உரிமை நோக்கம் பற்றித்தலைமேலென்றும், மேலென்னும் இடப் பொருட்கு வைத்தற்றொழில் சிறந்தது பற்றி மேல்வைத்து என்றும், வைத்து என்பதற்கும் உரைத்தான் என்பதற்கும் இறுதியும் முதலும் இனமாதல் பற்றி வைத்துரைத்தான் என்றும் முறையே நிறுத்திய தென்க. இங்ஙனம் நிறுத்தியவை சொன்முறை நிலையும் சொற்பொருண்முறை நிலையுமாம். இங்ஙனம் முற்றும் முறை நிலை கூறப்புகின் மிகப் பெருகுமாகலின் ஒருவாறு காட்டினம். மற்றையவும் இவை கொண்டு உணர்க என்க.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
92. காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
-
ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
இச்செய்யுள் தன்னுள் செயப்படு பொருளாய் நின்ற நூற்சிறப்பைத் தன்னாலும் தன்னுறுப்புக்களாலும் குறிப்பாற் குறித்து நின்ற நன்னோக்குடைச் செய்யுள் என்று உணர்க. அங்ஙனம் குறித்தவை எங்ஙனமெனின்:- இச்செய்யுள் தான் கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா என்னும் முப்பாவினும் சிறந்த வெண்பாவாகலின், இக்குறிப்பால் இந்நூல் சரியைநூல், கிரியைநூல், யோகநூல் என்னும் முந்நூலினும் சிறந்த ஞானநூல் என்று குறித்தது என்க.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
96. சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே
சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே
சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே.
எனக்கும் உனக்கும்
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
என் மனத்தில் இடைவிடாது விளங்குகின்ற குணமணியாகிய சீரஞ்சீவி ரத்ன முதலியாருக்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுஞ் சிவக்கியானமுஞ் சகல சம்பத்தும் மென்மேல் உண்டாவதாக. தமது சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்பமுள்ளவனாக விருக்கிறேன். நான் வையாசி மாசம் 30ஆம் தேதிக்குள்ளே அவ்விடம் வருவேன். அவசியம் தியாகராஜப் பெருமானையும் உன்னையும் காண வேண்டும் என்கிற விருப்பம் விசேக்ஷமுள்ளவனாக விருக்கிறேன். ஆதலால் வருவது நிச்சயம் நிச்சயம். இது அன்றி பகவத் பத்தியிற் சிறந்தவராகிய வரதாசாரிய சுவாமிகள் திருவையிந்திர புரத்துக்கு வந்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த சுவாமிகளைச் சென்னப்பட்டணத்தில் தாம் கண்டால் ஒன்று சொல்ல வேண்டுவது.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
121. தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு
தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு
வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி
அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி
என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
122. செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
-
உபதேசக் குறிப்புகள்
117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு தயவு சிவநேய முதலிய நற்குணங்களிற் சிறந்து என்னிரு கண்மணி போன்றென் னிதயத் திருக்கும் சிரஞ்சீவி சிரஞ்சீவி ரத்தன முதலியாரவர்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சிவக்கியானமும் சௌக்கிய தேகமும் சகல சம்பத்து மேன்மேலுண்டாவனவாக. தமது சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். தாம் வைகாசி மாதம் 19ஆம் தேதியில் வரைந்துவிடுத்த கடிதம் மேற்படி மாதம் 30 ஆந்தேதியில் என்னிடம் வரப்பெற்றேன். அவ்வளவு காலம் கடிதம் தாமசப்பட்டதற்குக் காரணம் கடிதம் மேல் விலாசத்தில் கூடலூர் ஜில்லா தபால் ரயிட்டர் என்று குறித்திருந்தது பற்றி. ஆகலில் இனி வரைந்தனுப்பும்போது பரங்கிப்பேட்டை தபால் ரயிட்டர் பார்வையிட்டு புவனகிரியைச் சார்ந்த கருங்குழி என்று வரையவும். அன்றி, கூடலூர் ஜில்லா தபால் ரயிட்டர் மேல்விலாசம் பார்வையிட்டு மேற்படி துக்குடியைச் சார்ந்த கருங்குழியிலிருக்கும் என்றாவது வரையவும். இவ்விருவகையுமில்லாமல் கூடலூர் ஜில்லா தபால் ரயிட்டர் மேல் விலாசம் பார்வையிட்டு புவனகிரியைச் சார்ந்த கருங்குழி என்று வரைந்தால் நாட் செல்வதுமன்றி தபால் கூலியும் இரட்டிக்கும். இது அறிக. இனி, தாம் தம்முடைய தேகத்தை சாக்கிரதையாக உபசரித்து வர வேண்டும். சாக்கிரதை என்பது அருந்தல் பொருந்தல்களில் மிதபோசனம் மிதபோகம். மித போஜனமாவது - கோபம் - விராகம் - அலக்ஷியம் - முயற்சி - விரைவு இவை முதலிய ஏதுக்களால் குறைத்தல் - விருந்து சுவை விருப்ப முதலிய ஏதுக்களால் ஏற்றல் இல்லாமல் சமமாகப் பொசித்தலாம். மித போகமாவது அதிபரிச்சயம் அதிஞாபக முதலிய ஏதுக்களால் இரவு பகல் தோற்றாது பொருந்தல். விராகம் அலக்ஷிய முதலிய ஏதுக்களால் பொருந்தாதிருத்தல். இவை இரண்டுமின்றி மாதத் திரண்டுவிசை மாதரைப்புல்குவது என்றபடி பொருந்தலாம். ஆகலின் இவ்வாறு நடத்த வேண்டும். இனி மருந்து கொள்ளும்போது நெய் நல்லதாகக்கொண்டு சாப்பிட வேண்டும். பாலும் அவ்வாறே. நான் தம்முடைய தேகத்திற்கு விசேஷம் திடம் உண்டாகத்தக்க அவுஷதங்கொண்டு வருவேன். அது பரியந்தம் முன் குறித்தபடி சாக்கிரதையாக இருக்க வேண்டும். நமக்கு எவ்விதத்தாலும் சிவபெருமான் திருவடியும் சிவபஞ்சாட்சரியும் அன்றி வேறு சகாயில்லை. ஆகலில் அவைகளை இடைவிடாது சிந்திக்க வேண்டும். மகாராஜராஜஸ்ரீ நாயக்க ரவர்களுடைய சம்மதமும் இது. வேணும்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு ஒழுக்கங்கள் முதலிய சுப குணங்களிற் சிறந்த தங்கட்கு சிவ கடாக்ஷத்தால் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்தும் மேன்மேலுண்டாவனவாக. புண்ணியப் பயனாற் பெற்ற தேகத்தை கூடிய வரையில் சாக்கிரதையோடு பக்குவ மார்க்கத்தில் நடத்த வேண்டும். நான் பங்குனி மாசக் கடையில் அவ்விடம் வருகிறேன். இதன்றியும் இந்தக் கடிதம் கொண்டு வருகிற அம்மாளுக்குத் தாங்கள் கடன் வாங்குகிற இடத்தில் இரண்டு வராகன் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும். தங்களுக்கு இப்படிப்பட்ட விடயத்தில் நேரிடுகிற சல்லியங்களை கடவுள் விரைவில் நிவர்த்தி செய்விப்பார். இது நிச்சயம். தற்காலம் நான் வேறோர் நிமித்தம் தனித்து கூடலூரைச் சார்ந்த நெல்லிக்குப்பம் கரும்பாலையாடுந் தோட்டத்திலிருக்கிறேன். இந்தக் கடிதம் கொண்டு வருகின்றவர்கள் இவ்விடத்தில் வந்து தேக மெலிவைக் காட்டியபடியால் - இதே சமயத்தில் இவ்விடத்தில் எனக்கு வழக்கமாகக் கடன் கொடுக்கிறவர்கள் சமீபத்திலில்லை. இவர்கள் தேக பக்குவ நிமித்தம் அவ்விடம் போவதாகக் குறித்தபடி தங்களுக்கு இந்தப் பிரயாசம் வைத்தேன். மற்ற சங்கதிகளை நான் அவ்விடம் வந்தபோது தெரிந்து கொள்ளலாம்.மாசி மாதம் 15ஆம் நாள் சிதம்பரம்இராமலிங்கம்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு முதலிய நல்லொழுக்கத்திற் சிறந்து என்னுயிரையொத்து உள்ளத்திலிருந்த சிரஞ்சீவி ரத்ந முதலியார்க்கு சிவ கடாக்ஷத்தினால் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக. அவ்விடத்திய சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு செறிவு கல்வி கேள்வி முதலியவற்றினிறைந்து சிவபெருமான்றிருவடி நேயத்திற் சிறந்து என்னன்பிற் கியைந்து விளங்கிய சிரஞ்சீவி இரத்திந முதலியாருக்கு சிவ கடாக்ஷத்தால் சிவக்கியானமும் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன்மேலுண்டாவதாக. தமது சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். நான் ஆடி மாதம் 5ஆம் தேதி புறப்பட்டு கூடலூர்க்குப் போய் ஐப்பசி மாதம் 14ஆம் தேதி கருங்குழிக்கு மீட்டும் வந்தேன். வரினும் இன்னும் இருபது தினத்தில் வடமேற்கே ஓர் ஊர்க்குப் போய் அங்கிருந்து திருவொற்றியூர்க்கு வருவதாக நிச்சயித்திருக்கிறேன். நான் வடமேற்கே போகக் கருதிய ஊர்க்குப்போய் அவ்விடத்தே முடிக்க வேண்டிய காரியத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுவதற்கு சுமார் 3 மாசம் பிடிக்கும் போல் தோற்றுகிறது. ஆகலால், தாம் தேக முதலிய கருவிகளை செவ்வனிறுத்தி நடத்த வேண்டுமென்று எழுதுவது தவிர வேறொன்றும் எழுதுவது அவசியமாகத் தோற்றவில்லை நமது சிவபெருமான் திருவடிகளையும் சிவ பஞ்சாக்ஷரியையும் இடைவிடாமல் தியானஞ் செய்து வரவேண்டுமென்பது ஒன்றே முக்கியம் என்று தமது குறிப்பிற் காணப்பட்டது ஆதலிற் குறித்தேனில்லை. சாக்கிரதையோடு இருக்கவேண்டும். மகாராஜராஜஸ்ரீ திருவேங்கட முதலியார் முதலானவர்களுக்கும் என் வந்தனம் குறிப்பிக்க வேண்டும். சிரஞ்சீவி சிரஞ்சீவி.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
கல்வியிற் கேள்வியிற் கடலினுஞ் சிறந்துஅன்பறி வொழுக்கம் அமைந்தென் னிரண்டுகண்போன் றென்பாற் கனிவுகொண் டமர்ந்தகுணரத் தினநீ குடும்பத் துடனேதீர்க்க ஆயுளும் செல்வப் பெருக்கும்நோயற்ற வாழ்வும் நுவலரும் கீர்த்தியும்சிவந்திகழ் ஞானமும் சித்தியும் பெற்றுவாழ்க வாழ்க மகிழ்ந்தருட் டுணையால்வாழ்க வாழ்க வளம்பெற வாழ்க.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு முதலிய சுபகுணங்களிற் சிறந்த தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சகலசம்பத்தும் மேன்மேல் உண்டாவனவாக. அவ்விடம் இன்னுஞ் சில தினத்தில் அவசியம் நான் வருவேன். வந்த பின்பு தங்கள் வருத்த மெல்லாம் சிவபெருமான் திருவருளால் நிவர்த்தியாய் விசேஷ சௌக்கிய நேரிடும் என்று துணிந்திருங்கள். மகாராஜராஜஸ்ரீ திருவேங்கட முதலியார் காலஞ் சென்றதைக் குறித்து விசாரப்படுகின்றேன். ஆயினும் அது அரிபிரமாதிகளுக்கும் உள்ள காரியம். ஆதலால் புதிதல்ல வென்று துணிந்தேன். சிவபஞ்சாக்ஷர தியானத்தோடு சாக்கிரதையாக இருங்கள். அஞ்சவேண்டாம். சிரஞ்சீவி.இங்ஙனம்சி. இராமலிங்கம்
-
முதல் திருமுறை / First Thirumurai 006. திருவருண் முறையீடு tiruvaruṇ muṟaiyīṭu
216. மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா
மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா
நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற
செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத்
தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
சுபம் உண்டாகுக. கல்வி கேள்விகளிற் பயின்று அன்பறிவொழுக்கங்களிற் சிறந்து அருளொடு கிளர்ந்த வாக்கத்தி னுயர்ந்து குணமணியாக விளங்கிய தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாகுக. தங்களுடைய சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன். அரி பிரமாதிக ளெத்துணையும் பெறுதற்கு அரியதாகிய சிவ சம்பந்தத்தை முன் செய்த தவப் பயனாற் பெற்றனம். அங்ஙனம் பெற்ற நாம் சிவானந்த போக சாத்தியத்தை காலமுண்டாக அடைதல் வேண்டும். அதனை அடைதற்கு சிவபஞ்சாக்ஷர தியானமன்றி வேறு ஏதுக்கள் ஒன்றுமின்று. இஃது திருவருளாணை. என்னின், நாம் செல்லுங் காலமெல்லாம் சித்த சுத்தியோடு சிவபஞ்சாக்ஷர தியானத்தில் சர்வசாக்கிரதையாகப் பெற்று வரவிற்கு ஒத்த செலவோடு வாழ்தல் வேண்டும். இஃதே நமது கடமை. இனி இங்ஙனம் ஒருவர் பிணியாளர் வேறு கதியின்றி என்பாற் புகலடைந்திருக்கின்றனர். அப்பிணி சிறிது சாந்தப்பட்டவுடன் பிரயாணப்பட்டு அவ்விடம் வர நிச்சயித்திருக்கிறேன். சிவபெருமான் திருவுள்ளக் கருத்தறியேன். நமக்குரிய நேயர் முன்னவராகிய மகாராஜராஜஸ்ரீ நாயக்கர் முதலானவர்கட்கும் என் வந்தனங் குறிப்பிக்க வேண்டும். வரதாசாரியா ரவர்கள் தற்காலம் எவ்வித நிலையிலிருக்கின்றனர். அந்நிலையும் தெரிதல் வேண்டும். நேயர் மகாராஜராஜஸ்ரீ கந்தசாமி முதலியார்க்கும் என் வந்தனங் குறிப்பிக்க வேண்டும். சிரஞ்சீவி சிரஞ்சீவி.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
கல்வி கேள்விகளிற் சிறந்து அன்பு அறிவு ஒழுக்க முதலிய நற்குணங்களை அணியாக அணிந்த சிரஞ்சீவி இரத்ந முதலியா ரவர்களுக்கு சிவ கடாக்ஷத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேலுண்டாவனவாக. தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீ வேலு முதலியார்க்கும் அவர்களிடமாகத் தற்காலத்திருக்கின்ற நாயக்கரவர்களுக்கும் என் வந்தனங் குறிப்பிப்பது மன்றி இக்கடிதத்தினுள் ளடங்கிய கடிதத்தை அவர்களிடத்திற் சேர்ப்பிக்க வேண்டும். இது நிற்க. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுவது ஒன்று. என்னெனில் தாங்கள் சென்னப் பட்டணத்தை விட்டு நெல்லூர்க்கு உத்தியோக விஷயமாகப் போகக் கருதி பிரயத்தினஞ் செய்வதாயும் தற்கால அலுவல் தானே நீங்கிவிடுவதாயும் கேள்விப் பட்டேன். கேட்ட நாள் தொடங்கி மனஞ் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் என்ன செய்வது. திருவருள் நடத்த நடக்கின்றோம் என்று சமாதானஞ் செய்துக் கொண்டாலும் என் மனம் அமைதி பெறவில்லை. ஆகலில் அவ்வாறு நேரிடில் முன்னதாக எனக்குத் தெரிவிக்க வேண்டும். நான் கடவுளைப் பிரார்த்திருக்கிறதென்னெனில் சென்னப்பட்டணத்தை விடுத்தால் பட்டணத்துக்குத் தென்பாகத்தில் அலுவல் நேரிட வேண்டுமென்று பிரார்த்திக்கிறது தான். என் பிரார்த்தனை திருச்செவிக்கு ஏறுமோ ஏறாதோ தெரிந்ததில்லை. என்ன செய்வேன். எப்படி யானாலும் ஆகட்டும். எனக்கு உடனே பிரயாணத்தின் உண்மை இன்மை தெரிவிக்க வேண்டும். தாங்கள் எழுதிய கடிதம் நாற்பது நாளைக்குமேல் நான் காணப்பெற்றேன். நானும் அவசியம் தை-மாசி-க்குள் அவ்விடம் வரப் பிரயாணஞ் செய்கிறேன். வந்தால் ஒரு மாதம் இரண்டு மாதத்துக்குமேல் அவ்விடத்திலிருக்க சம்மதமில்லை. சிரஞ்சீவி சிரஞ்சீவி.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அருளறி வொழுக்கங்களிற் சிறந்து கல்வி கேள்விகளிற் பயின்று எமது கட்கிமை போன்று விளங்குகின்ற சிரஞ்சீவி ரத்தின முதலியார்க்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சிந்தித மனோரத சித்தியு மேன்மேலுண்டாவனவாக. தங்கள் சுபசரித்திர விபவங்களும் மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்கள் சுபசரித்திர விபவங்களும் அடிக்கடி கேட்க விருப்ப முள்ளவனாக விருக்கின்றேன். தாங்கள் வரவிட்ட பங்கி தபாலிலடங்கிய புத்தகமும் - கடிதமும் முன்னும் பின்னுமாக வரப்பெற்றேன்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பறி வாசாரங்களிற் சிறந்து சிவபத்தியினுஞ் ஜீவகாருண்யத்தினுந் தலைநின் றெம துள்ளத்திற் கலந்து விளங்கிய தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்து மேன்மேலுண்டாக. 1865 நவம்பர் மாதம் 13ஆம் தேதி ரிஜிஸ்டர் செய்தனுப்பிய தங்கள் கடிதத்தைக் கண்ணுற்றறிந்து கொண்டேன்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
கல்வி கேள்விகளாலும் அன்பறி வொழுக்கங்களாலுஞ் சிறந்த தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்து மேன்மேல் உண்டாக. தாங்களனுப்பிய பங்கிக்கட்டும் தபாலும் வந்து சேர்ந்தன. தாங்கள் சிவத்தியான சகிதராய் வரவுக்குத் தக்க செலவு செய்து கொண்டு தேகத்திற்கு திடமுண்டாகும்படி உபசரித்துக்கொண்டு சாக்கிரதையோடிருக்கவேண்டும். படிப்பிக்கிற விஷயத்தில் அதிக அதிக்கிரம பிரயாசை எடுத்துக் கொள்ளப்படாது. தங்களுக்கு இருக்குங் கடனைக் குறித்து அணுவளவும் அஞ்சப்படாது. நான் வைகாசி மாதக் கடைசியில் அவசியம் அவ்விடம் வருகிறேன். இது நிச்சயம். இவ்விடத்தில் நாயக்கர் க்ஷேமமாக இருக்கிறார். ஆயினும் அவர்க்கு இவ்விடத்திலும் நிம்மதியில்லை, அன்றி ஒற்றியூர் பாடல்களையும் மற்றவைகளையும் அச்சிடத் தொடங்குகிறதாய்க் கேள்விப்படுகிறேன். அவைகளை தற்காலம் நிறுத்தி வைத்தால் நான் அவ்விடம் வந்தவுடன் இவ்விடத்திலிருக்கின்ற இன்னுஞ் சில பாடல்களையுஞ் சேர்த்து அச்சிட்டுக் கொள்ளலாம். பின்பு தங்களிஷ்டம். நமது சிநேகிதர் மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியாரவர்களுக்கு இதைத் தெரியப்படுத்துவீர்களாக. தங்கள் குடும்ப க்ஷேமமும் சுந்தரம்மாள் - புருஷர் - சுந்தரப்பிள்ளை முதலானவர்களுடைய க்ஷேமமும் மற்ற சிநேகர் முதலானோர் க்ஷேமமும் தெரிவிப்பீர்களாக. எனக்கு சாவகாசமில்லாமையால் இம்மட்டில் நிறுத்தினேன். சிரஞ்சீவி சிரஞ்சீவி.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
கல்வி கேள்வி அன்பு அறிவு ஒழுக்கந் தயை முதலியவற்றாற் சிறந்து எனக்கோர் துணையாய் விளங்கிய தங்கட்கு குரு கடாக்ஷத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சகல சம்பத்து மேன்மேலுண்டாக. தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அருள் அறிவு முதலியவற்றாற் சிறந்து தங்கட்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளும் திடதேகமும் சகல சம்பத்து மேன்மேலுண்டாகவென்று பிரார்த்திக்கிறேன். தங்கள் தேக விஷயத்தில் அதிகமாக சாக்கிரதையாக சிவத்தியானத்தை விடாமல் வரவுக்குத் தக்கபடி நடக்கவேண்டுமென்று மிகவும் கோருகிறேன்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு தயவு கல்வி கேள்வி முதலிய சிறந்த தங்கட்கு சிவ கடாக்ஷத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன்மேல் உண்டாக. தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க வேண்டும். பெரியவர் சிவபதம் அடைந்த... செவ்வாய்கிழமை சாயங்காலம் தெரிந்து கொண்டேன். நான் சமீபத்திலிருக்கவும் சிதம்பரத்தில் சமாதி வைக்கவும் அவர்கள் எண்ணியபடி நேரிடாமல் ... விட்டதை... இது நிற்க.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
கல்வி கேள்விகளாலு மன்பறி வொழுக்கங்களாலுஞ் சிறந்த தங்கட்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன்மேல் உண்டாக வேண்டும். தங்கள் சுபசரித்திரங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். மகாராஜராஜஸ்ரீ அப்பாசாமி செட்டியா ரவர்கட்குத் தாங்கள் வரைந்த கடிதத்திற் குறித்த வண்ணம் சிதம்பர விஷயமான பாடல்களை தங்கள் கருத்தின்படி அச்சிட்டுக் கொள்ளுங்கள். அன்றியும் 'கண்டா யென்றோழி' என்கிற பாடல்களை வைத்திருக்கின்றவர் தற்காலம் சமீபத்திலில்லை. அவர் வந்தவுடன் வாங்கி யனுப்புகிறேன். 'விண்படைத்த பொழிற்றில்லை யம்பலத்தா னெவர்க்கு மேலானா னன்பருள மேவுநடராஜன்' எனல் வேண்டும். இது நிற்க நான் தற்காலம் அவ்விடம் வருவதற்கு சமயமாகத் தோற்றவில்லை. ஆயினும் நமது... தலைவராகிய கடவுளது திருவுளச் சம்மதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த இரவில் எந்தப் பகலில் திருவுளச் சம்மத வுத்தரம் எனக்குக் கிடைக்கின்றதோ, அந்த இரவில் அந்தப் பகலில் பிரயாணப்படுவதற்கு யாதொரு தடையு மிராது. இரவும் பகலும் இதை நினைத்துக் கடவுளை தியானிக்கின்றேன். அவர் உத்தரத் தடையன்றி வேறு தடை யாதொன்றுமில்லை. தாங்கள் தேக முதலியவற்றில் சாக்கிரதையுடையவராய் சிவத்தியான சகிதராக இருங்கள். அன்றி இ ... லீவில் இவ்விடம் வருவதற்காவது அல்லது மற்ற எவ்விடம் போவதற்காவது எண்ணமிருந்தால் அதை முன்னதாக எனக்குத் தெரிவிப்பீர்களாக. நமது அன்பர் மகாராஜராஜஸ்ரீ செல்வராய முதலியாரவர்கட்கும் இதை குறிப்பிக்க வேண்டும். பெங்களூர் மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியார் தற்காலம் என்ன அலுவலில் இருக்கின்றார். தெரிவிக்க வேண்டும். சுந்தரம்மாளுக்கும் அவர் புருஷனுக்கும் வருமாதத்தில் ஜீவனோபாய விருத்தி உண்டுபண்ணுவிப்பதாகச் சொல்லுங்கள். என்னைக் குறித்த மற்றவர்களுக்கும் அங்ஙனங் குறிப்பீர்களாக. சிரஞ்சீவி சிரஞ்சீவி சிரஞ்சீவி.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
கல்வி கேள்விகளாலும் அன்பறி வொழுக்கங்களாலும் சிறந்த நண்பராகிய மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீ வேலு முதலியா ரவர்கட்கு வந்தனம். தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். தாங்கள் தேக முதலிய கருவிகளை சாக்கிரதையாக நடத்திக்கொண்டு சிவத்தியான சகிதராக இருங்கள். நான் மகாராஜராஜஸ்ரீ ரத்தின முதலியார் அவர்களுக்கு வரைந்த வாசகத்தைப் பாருங்கள். எந்தத் தினத்தில் பிரயாணப் படலா மென்றே இரவும் பகலும் விரைந்து விரைந்து நினைக்கிறேன். தாங்கள் இந்தப் பக்கம் வரும்படி எண்ணங்கொண்டால் முன் எனக்குத் தெரிவிப்பீர்களாக. எழுதுவதற்கு அசந்தர்ப்பத்தால் இப்படி எழுதினேன். மன்னிப்பீர்களாக. வந்தனம்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பறிவு முதலியவற்றிற் சிறந்த தங்கட்கு சிவகடாக்ஷத்தால் மேன் மேல் சுபம் உண்டாக. தாங்கள் குறித்தபடி வரைந்து அனுப்பினேன். இவை மிகவும் விரைவில் வரையப்பட்டன. ஆகலால் மிகவும் மெதுவில் பார்க்க வேண்டும்.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அன்பு அறிவு தயை முதலிய சுபகுணங்களிற் சிறந்த உண்மையன்பராகிய தங்கட்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன் மேல் உண்டாக வென்று திருவருளை சிந்திக்கின்றேன். தங்கள் சுப சரித விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன். மற்ற சங்கதிகளை எனக்கு சாவகாசம் நேரிட்டபோது எழுதித் தெரிவிக்கின்றேன். தற்காலம் வேண்டுவதை இதனடியில் எழுதுகிறேன். அதாவது பொன்னுரைக்கின்ற உரைகல் ஒன்று வெள்ளியுடைக்கின்ற உரைகல் ஒன்று இவைகளையும் இவைகளுக்கு அடுத்த தராசு முதலிய கருவிகள் வைக்கின்ற பை ஒன்று இம்மூன்றும் வாங்கி பங்கியில் அனுப்பவேண்டும். சுமார் 5 பலம் 8 பலம் நிறுக்கத்தக்க தராசு நேரிட்டாலும் அதனுடன் அனுப்ப வேண்டும்.தேகத்தை பக்குவமாகப் பாராட்டிக்கொண்டு சிவசிந்தையும் ஜீவகாருண்ணியமும் மாறாமல் சாக்கிரதையோடு இருப்பீர்களாக. இதை சமரசவேத சன்மார்க்க சங்கத்தவ ரல்லாதவர்களுக்கு வெளிப்பட வாசிக்கப்படாது. வேணும். சிரஞ்சீவி சிரஞ்சீவி.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
கல்வி கேள்விகளாலும் அன்பறி வொழுக்கங்களாலுஞ் சிறந்த தங்கட்கு திருவருள் வலத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன்மேல் உண்டாக. தங்கள் சுபசரித விபவங்களை அடிக்கடி கேட்டு மகிழ விருப்பம் உள்ளவனாக இருக்கிறேன். தாங்கள் அனுப்புவித்த பங்கியில் தாங்கள் கடிதத்தில் குறித்தபடி இருக்கக்கண்டு களிப்பொடு பெற்றுக் கொண்டேன். தாங்கள் அனுப்புவித்த பங்கிவந்த தினத்திற்றானே யெனக்கு ஊர்ப்புறங்களிற் போக அவசியமான பிரயாண நேரிட்டபடியால் உடனே பங்கிவந்த செய்தியைத் தங்களுக்குத் தெரியப் படுத்துவதற்குக் கூடாமையாயிற்று. இந்தக் கடிதமும் கொள்ளடத்தின் வடகரையில் திருநாவலூரில் இருந்து எழுதினேன். என்னுடன் சுமார் 20 பெயர்கள் வந்திருக்கின்றார்கள். மற்றவர்கள் சாலையிலிருக்கின்றார்கள். நான் சாலைக்கு வந்தவுடன் மற்ற சங்கதிகளைத் தபாலில் தெரிவிக்கிறேன். தாங்கள் சாக்கிரதையோடு தேகத்தைப் பக்குவமாகப் பாராட்டிக் கொண்டு சிவசிந்தையோடிருக்க வேண்டும். தங்களுக்கும் நமக்கும் அன்பராகிய செல்வராய முதலியாரவர்களுக்கும் இங்ஙனம் தெரிவிக்கவேண்டும். வாழ்க வாழ்க வாழ்க. நான் சுமார் பத்து தினத்தில் தருமச்சாலைக்கு வந்து சேர்வேன்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
589. அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
663. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே