அகவல் என்ற வார்த்தை 4 இடங்களில் பொருத்தமான பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன
-
நித்திய கரும விதி
19. சீர்பெறும் அநாதி சிவாகமப் படியே நேர்பெறு நித்திய நியமம் புரிவோர் கதிரவன் எழுமுன் கடிகை ஐந்தென மதிபெற எழுந்து மகேசனை நினைந்தே - நியம அகவல்
-
உபதேசக் குறிப்புகள்
121. ஏழு திரைகள்
இந்தப் பவுதிக உடம்பிலிருக்கிற நீ யாரெனில்: நான் ஆன்மா, சிற்றணு வடிவன். ஷெ அணு கோடி சூரியப் பிரகாசமுடையது, லலாடஸ்தானமிருப்பிடம், கால்பங்கு பொன்மை முக்கால்பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய 7 திரைகளுண்டு. அவையாவன:
கறுப்புத் திரை மாயாசத்தி. நீலத்திரை கிரியாசத்தி. பச்சைத்திரை பராசத்தி. சிவப்புத்திரை இச்சாசத்தி. பொன்மைத்திரை ஞானசத்தி. வெண்மைத்திரை ஆதிசத்தி. கலப்புத்திரை சிற்சத்தி.*
* கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பேருறு நீலப் பெருந்திரை அதனால் ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பச்சைத் திரையால் பரவெளி அதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி செம்மைத் திரையால் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி கலப்புத் திரையால் கருதனு பவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி - திருஅருட்பா, அருட்பெருஞ்ஜோதி அகவல் 813-826
-
உபதேசக் குறிப்புகள்
9. வளரொளிமணி - அழியாப் பெருவாழ்வு அளிப்பது.*
* அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பரம்பர மணியே பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பராபர மணியே நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும் கண்பெற நடத்தும் ககனமா மணியே பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும் சார்புற நடத்தும் சரஒளி மணியே அண்டகோ டிகள்எலாம் அரைக்கணத் தேகிக் கண்டுகொண் டிடஒளிர் கலைநிறை மணியே சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும் விராயுள் விளங்கும் வித்தக மணியே மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா வாழ்வெனக் களித்த வளர்ஒளி மணியே - திருஅருட்பா, அருட்பெருஞ்ஜோதி அகவல் 1291-1308.
-
உபதேசக் குறிப்புகள்
130. மூவகைச் சித்தி
கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி எனச் சித்திவகை மூன்றாம்.
கர்மசித்தியாவது:-
அணிமா - துரும்பை மேருவாக்குகிறது
மகிமா - மேருவைத் துரும்பாக்குகிறது
கரிமா - மேருவை ஒன்றுமில்லாமல் செய்கிறது
லகிமா - ஒன்றுமில்லாத இடத்தில் அனேகங்களாகச் செய்கிறது
பிராத்தி - வேண்டுவன அடைதல்
ஈசத்துவம் - குளிகை வல்லபத்தாலெங்கும் செல்லுகிறது
பிராகாமியம் - பரகாயப்பிரவேசம்
வசித்துவம் எழுவகைத் தோற்றமாகிய தேவமானுஷ்ய நரக மிருக பக்ஷி ஊர்வன விருக்ஷம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துகிறது.
தேகத்தைக் கல்பசித்தி செய்து கொள்ளுதல்; அபரமார்க்கி; சதாசிவாந்த அனுபவம்; சதாசிவகால வரை; பிரேதத்தை உயிர்ப்பித்தல்; சித்தி காலம் 3 3/4 நாழிகை முதல் 3 3/4 வருஷத்திற்குள்.
யோக சித்தி விவரம்:- 64 சித்திகளையும் தன் சுதந்தரத்தில் நடத்துகிறது; சங்கல்பகுளிகை; பிராணகல்பதேகி; பிரமகாலம்; பராபரமார்க்கி சித்திகாலம் 12 வருஷ முதல் 108 வருஷத்திற்குள்; புதைத்த தேகத்தை நாசமடையாமுன் உயிர்ப்பித்தல்.
ஞானசித்திகளின் விவரம் - அறுபத்து நாலாயிரம் சத்திகளையும் தன் சுதந்திரத்தில் நடத்துகிறது. 647 கோடியாகிய*, 688 கோடி (?) பேதமாகிய மகாசித்திகளையும் தன்னிஷ்டம்போல் நடத்துகிறது; காலம் கடந்தது; அடிநிலை முடிநிலை சுத்தகர்ம, சுத்தயோக, சுத்தஞான சித்திவல்லபங்களைத் தன் சுதந்தரத்தால் நடத்துகிறது.
* ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு கோடியும் விளங்கக் குலவுமெய்ப்பொருளே - அருட்பெருஞ்ஜோதி அகவல் 911-2
அகவல் -
நாபி -
ஜோதி -
கரை -
தமிழில் -
ஒருமையுடன் -
சுத்த+ஞானி -
வள்ளலார் -
கரைவி -
செந்தில் -
வார்த்தை -
பாதம் -
ஜீவகாருண்யமே -
உஷ்ணம் -
சிற்சபை -
சுத்த -
மனம்+புத்தி+சித்தம்+அகங்காரம் -
லலாடம் -
நரகம் -
சிறந்த -